விழாக்குழுவினர்

“வலைப்பதிவர் திருவிழா-2015”   
விழாக்குழுவினர்... / திருமிகு /                 
நா.முத்துநிலவன்,

  தங்கம்மூர்த்தி,
ச.கஸ்தூரிரெங்கன்,

மு.கீதா,
பொன்.கருப்பையா,

இரா.ஜெயலட்சுமி,
கு.ம.திருப்பதி,

குருநாதசுந்தரம்,,
மகா.சுந்தர்,

ஆர்.நீலா,
வைகறை,
மீரா செல்வகுமார்,
சோ.மைதிலி,

பா.ஸ்ரீமலையப்பன்,
அ.பாண்டியன்,
சு.இளங்கோ,
சு.மதியழகன்
ஸ்டாலின்சரவணன்,
கா.மாலதி,
த.ரேவதி,
சுரேஷ்மான்யா,  
தூயன்
எஸ்.ஏ.கருப்பையா,
யு.கே கார்த்தி
சோலச்சி
தெ.நாகபாலாஜி
சு.துரைக்குமரன்               ராசி.பன்னீர்செல்வம்







ஒரு முக்கியமான பி.கு.
ஆண், பெண் அனைவர்க்குமே “திருமிகு“ என்னும் அடைமொழி போதுமானது. எந்த ஆணுக்கும் திரு என்று மட்டும் அடைமொழி கொடுத்துவிட்டு, திருமணத்தை மையமாக வைத்துப் பெண்களின் அடைமொழியை மாற்றுவது சரியல்ல திருமணமான பெண்ணை திருமதி என்றும், திருமணமாகாத பெண்ணை செல்வி என்றும் ஏன் பிரிக்க வேண்டும்? ஆண்களுக்கு அப்படி நமது சமூகம் பிரிக்கிறதா என்ன? எனில் இது சரியல்லவே?! எனவேதான் எல்லாரும் திருமிகு என்றே குறிக்கப்படுவர். இம்முறையை மற்றவரும் பின்பற்றலாமே?






17 கருத்துகள்:

  1. திருமணமாகாத பெண்ணை செல்வி என்று குறிப்பதைப் போல -
    திருமணமாகாத ஆணை செல்வன் என்று குறிப்பிடலாம்..

    வழக்கத்தில் யாரும் செய்வதில்லை.. ஏனெனில் சிறப்புகள் அனைத்தும் பெண்மைக்கே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்வி தெரஸா, செல்வி மமதா பானர்ஜி, செல்வன் வாஜ்பேயி, செல்வன் அப்துல் கலாம்... நல்லா இல்லயே அய்யா?
      எனவே தான் “திருமிகு“ எனும் பொதுவான சிறப்பு அடைமொழி சரியா நண்பா?

      நீக்கு
    2. தங்களுடைய - கனிவான மறுமொழிக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. செயல்வீரர்களின் பட்டியல் தந்த தங்களுக்கு நன்றி அய்யா. பின் குறிப்பில் தகவலும் தந்தமை சிறப்பு

    பதிலளிநீக்கு
  3. வலைத்தளம் உள்ளவர்களின் இணைப்பும் கொடுங்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பக்கத்தின் பக்க இணைப்பில் உள்ளதே அய்யா...
      “விழாக்குழுப் பதிவர்கள்“ பார்க்க.. இன்னும் சிலரும் இருக்கிறார்கள் தொடர்ந்து எழுதாத அவர்களின் தளத்தைத் தேடிப்பிடித்துப் போட வேண்டும். தளம் தொடங்காத சிலர் இப்போதுதான் தொடங்கிக்கொண்டு... பட்டியல் தொடரும்

      நீக்கு
  4. //எல்லாரும் திருமிகு என்றே குறிக்கப்படுவர்// - அருமை! அருமை!! அருமை!!!

    பல ஆண்டுகளாக, ஆம் சிறு வயதிலிருந்தே என் நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது. பெண்களை மட்டும் இப்படி மணமானவர் - ஆகாதவர் எனப் பிரித்துக் காட்டுவது நாகரிக சமூகத்துக்கு அழகில்லையே என்று பலமுறை நினைத்திருக்கிறேன். ஆங்கிலத்தில், இதே நாகரிகம் கருதி, மணமானவர் - ஆகாதவர் அனைவரையும் 'Ms' எனக் குறிப்பிடும் வழக்கம் வந்து விட்டதே, தமிழில் ஏன் இன்னும் அப்படி யாரும் அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் வருந்தியதுண்டு. மேலே திருமிகு.துரை செல்வராஜு ஐயா குறிப்பிட்டிருந்தது பற்றியும் சிந்தித்திருக்கிறேன். ஆனால், சில சமயம் சில விதயங்களை எழுதும்பொழுது சில பெரும்புள்ளிகளைக் குறிப்பிட வேண்டி வருகையில், அவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா இல்லையா எனத் தெரியாத நிலையில் அவர்கள் பெயருக்கு முன் என்ன அடைமொழி தருவது என்று குழப்பம் நேர்ந்தது. ஆக, மணமானவர் - ஆகாதவர் எனப் பெண்களைப் பிரிப்பது போல் ஆண்களையும் அப்படிப் பிரித்துக் குறிப்பிடுவது இதற்குத் தீர்வாகாது; பெண்களை அப்படிப் பிரித்துக் குறிப்பிடும் வழக்கத்தை விட்டொழிப்பது ஒன்றே இதற்குத் தீர்வு என்பதை உணர முடிந்தது.

    இதோ, தமிழர் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களுக்கும் ஒற்றை அடைமொழி எனும் வழக்கத்தைத் தொடங்கி வைத்திருக்கும் 'புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா' வாழ்க! தமிழ் வளர்க்கும் இந்த நல்விழா வெற்றி பெறப் பெண்ணியன் எனும் முறையில் உலகத் தமிழ் மகளிர் அனைவர் சார்பிலும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இந்த யோசனையை முன்வைத்த, இந்தச் சிக்கலுக்கு இப்படி ஒரு கச்சிதமான நிலையான தீர்வை வழங்கிய முகம் தெரியா நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் திருமிகு ஆண்களும் திருமிகு பெண்களுமாய் இணைந்த சுமார் 25பேர். முகம் மட்டுமல்ல..அகமும் ஒன்றுதான். நன்றிநண்பரே

      நீக்கு
  6. வாழ்த்துகள் , அனைவரது பங்கேற்பிக்கும் :) மிக்க நகிழ்ச்சி !!

    பதிலளிநீக்கு
  7. திருமிகு என்ற அடைமொழியினை எனது திருமண அழைப்பிதழின் மேலுரையில் 1990-ம் ஆண்டிலேயே பதிவு செய்தவன் என்பதை மிகவும் பெருமிதத்துடனும், தாழ்மையுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அருமை!
    திருமிகு எல்லோருக்கும் பொருத்தமாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
  9. ஹை என் கருத்து!!! எனக்கும் இந்தத் திருமணம் ஆன பெண் ஆகாத பெண் என்று குறிப்பிடப்படுவதில் உடன்பாடு இல்லை. ஆங்கிலத்தில் பல பெண்களும் குறிப்பாக மேலைநாட்டவர்....Ms என்றுதான் குறிப்பிடுகின்றனர்...மிஸ் ஆ இல்லை மிஸஸா என்று தெரியாது...தமிழில் எப்படிச் சொல்வது என்று தேடிக் கொண்டிருந்த எனக்கு உங்கள் குறிப்பு மிக்க மகிழ்வு அளிக்கின்றது...திருமிகு ஆஹா!!!! நன்றி நன்றி!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அன்பார்ந்த அமைப்புக்குழுவிற்கு, தங்களின் உழைப்பை அறிந்து மிக்க மகிழ்ச்சி... தயவுசெய்து தோராயமாக எத்தனை பேர் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளக்கூடும் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  11. பதிவர் சந்திப்பு 2015 சூடுபிடித்துள்ளது! விழா சிறக்க வாழ்த்துக்கள்! அனேகமாக போட்டிகளுக்கான முடிவுகள் வந்திருக்கக்கூடும்! வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமாவது முன்கூட்டியே மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் ஒருவேளை அவர்களால் வரமுடியாத பட்சத்தில் நெருக்கமான யாரையாவது அனுப்பிவைக்க இயலுமல்லவா! மற்றவர்களுக்கு விழா மேடை அறிவிப்பின் மூலம் தெரியட்டும்! இது என்னுடைய கருத்து மட்டுமே! விழாக்குழு முடிவு செய்யட்டும்!!! நன்றி!!! அன்புடன் ரவிஜி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...