வெள்ளி, 6 நவம்பர், 2015

வெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

புதுகை வலைப் பதிவர் திருவிழா-2015  சிறப்பாக நடந்ததில்,நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பதிவுகளுடன் அங்கிருந்தே செல்பேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய நண்பர்களையும் மறக்க முடியுமா என்ன?!

ஆனால்அத்தகைய நண்பர்கள் விழாவில் வெளியிடப்பட்ட தமிழ் வலைப்பதிவர் கையேடு 
நூலை இன்னும் பார்க்கவில்லையே என்பது அவர்களைப் போலவே எங்கள் குழுவிற்கும் வருத்தமாகவே உள்ளது.

அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது,பின்வரும் நமது நண்பர்கள் தொடர்பில் வந்தார்கள். நானும் அவர்கள் கருத்துகளைக் கேட்டேன். அவர்களும் தெரிவித்தார்கள்...அதனால்...

வெளிநாட்டு நண்பர்கள் கையேடு பிரதிகளைப் பெற்றுக் கொள்ள... ஒரு யோசனை-
அருகில் (பக்கத்து நாடுகளில் இருப்போர்) இவர்களிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறோம். பெரும்பாலும் அடுத்துள்ள நாட்டுக்கான அஞ்சல் செலவை அவரவரே தரலாம்.  அதிகமிருக்காது. இந்தியாவிலிருந்து பெற்றால் அதிகமாகும். பின்வரும் நண்பர்களும் இதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்

யார்யாருக்கு எத்தனை கையேட்டுப் பிரதிகள் தேவை என்பதைப் பின்வரும் என் மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் இந்த  நமது நண்பர்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு இங்கிருந்து மொத்தமாக அனுப்பி அவர்கள் வழியாக நீங்கள் நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

என்ன நண்பர்களே இதற்கு நீங்கள் நிச்சயமாக உதவுவீர்கள் என்று நம்புகிறேன். உதவ வேண்டுமென்று அன்புடன் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த 
நம் அன்புறவானவர்களின் பதிவுகளையும் பாருங்கள்-

அமெரிக்கா -சகோதரர் விசு - http://vishcornelius.blogspot.com/ 
ஜெர்மனி -சகோதரி இளமதி - http://ilayanila16.blogspot.com/

இவர்கள் இருவரும் அவரவருக்கு அருகிலிருக்கும் நாடுகளில் வாழும் நண்பர்கள்கையேட்டுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள உதவுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பாரிஸ் – சகோதரர் நேசன்- http://www.thanimaram.org/ 
இவர் ஏற்கெனவே 75பிரதிகளை எடுத்து வையுங்கள் அதற்கான இந்தியத் தொகையை வங்கிக் கணக்கில் இப்போதே செலுத்திவிடுகிறேன்“ எனச் சொன்ன போதிலும்நான்தான் தடுத்து வைத்திருக்கிறேன். யார்யார் பிரதியை வாங்க விரும்புகிறார்கள் என்று தெரிந்து அதன்பின் அதற்குரிய தொகையை அனுப்பலாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

நண்பர்களே! நீங்கள் நினைத்தால் இவர்கள் போலும் நண்பர்களின் பெருந்தன்மைக்கு நம் அன்பைத் தெரிவிக்கும் வழியாக கையேட்டுப் பிரதிக்குப் பணமனுப்பி முகவரியும் தந்து உதவலாம்.

கணக்குப் போட்டுப் பார்த்தால் வெளிநாட்டு நண்பர்கள்இந்திய ரூபாயில் ஒரு பிரதி சற்றேறக்குறைய 350ரூபாய் தந்து வாங்கிவிட மாட்டீர்களா
(அமெரிக்கா கனடா நாட்டிலிருப்போர் மட்டும் ஒரு பிரதிக்கு ரூ.450 தர வேண்டியிருக்கும். இதுவே தனியாக ஒன்று அல்லது இரண்டு பிரதிகள் மட்டும் இங்கிருந்தே அனுப்ப குறைந்தது 2000ரூபாய் ஆகிறதுஇதுவே 4பிரதிகள் எனில் ரூ.2,500தான் ஆகிறது)
இந்தக் கணக்கைப் பாருங்கள் 

அமெரிக்கா,கனடா நாடுகளுக்கு 4பிரதிரூ.2,500,
     40பிரதிரூ.16,000 60பிரதி-ரூ.20,000
(இதில் கவனியுங்கள் நேரடியாக இங்கிருந்து அனுப்பினால் ஒரு பிரதியே ரூ.625ஆகிறது ஆயினும் ஒருபிரதி அனுப்ப இயலாது காரணம் குறைந்தபட்ச கட்டணமே ஆயிரத்திற்குமேல்! ஆனால்அதிகமான பிரதிகளை அனுப்ப நேரும்போதுதான் சராசரியாக ஒரு பிரதி முறையே ரூ.400, ரூ.335 என்று  குறைகிறது. ஆக மொத்தமாக அனுப்பி திரு விசு வழியே பெறுவதே சிக்கனமானது. என்ன? அங்குள்ளவர் அனைவருமாகக்குறைந்தது 40பிரதியாவது வாங்க உறுதி தர வேண்டும். அப்போது தான்திரு விசு அவர்கள் முகவரிக்கு அனுப்ப முடியும். தமிழ்ப்பதிவர் நண்பர்கள் தமக்கு மட்டுமல்ல, அங்குள்ள தமிழ்ப்பதிவர், இலக்கிய அமைப்புகள், தமிழறிஞர்கள், இதழ்கள் என உரியவர்க்கு அன்புடன் வாங்கித் தரலாமே?)

ஜெர்மன்,பிரான்சு,சுவிஸ் நாடுகளுக்கு 4க்குரூ.2,000,
40பிரதிரூ.13,000 60பிரதி-ரூ.18,000
(இங்கும் அவ்வாறேஇங்கிருந்து 4பிரதி அனுப்பினால்ஒரு பிரதி ரூ.500ஆகிறது ஆனால் ஒரு பிரதிக்கான கட்டணமே அதிகமாகிறது. மொத்தமாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் சுமார் 40பேர் அல்லது 2,4 பிரதிகள் என ஒரு15 -20பேராவது வாங்கிக் கொள்ள உறுதி தந்தால் சகோதரி இளமதிக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் அவரிடம் ரூ.325 (அல்லது அதிகமானோர் கேட்டால் ஒருபிரதிக்கு 300ரூ.வீதம்) தந்து பெற்றுக் கொள்ளலாம். எளிய சிக்கனமாகும்.

எனவேவெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள்-ஒவ்வொருவரும் 4அல்லது 8கையேடுகளை வாங்கிடப் பொறுப்பேற்றுக்கொண்டால்புதுக்கோட்டையில் அடுத்த கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவை இன்னும் தெம்பாக சிறப்பாக நடத்துவோம். 

அப்போது ஒரு வலை-இலக்கிய மலர் வெளியிடுவதாக இருக்கிறோம்... இப்போதே சொல்லிவைக்கிறோம்... தொழில் நுட்ப விளக்கங்கள், கட்டுரை-கவிதை, கவிதை ஓவியங்களுடன் கூடிய வலைப்படைப்புகள் என, சிறப்பான மலராகக் கொண்டு வர ஆசைப்படுகிறோம்! படைப்புகள் அனுப்ப தயாராகிக் கொள்ளுங்கள்...!   

இந்தப் பக்கம் -இலங்கை,சிங்கை,மலேசிய நாடுகளில் வாழும் வலைநண்பர்கள் நூல்பெற இவ்வாறு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்தால் அன்புடன் தெரிவியுங்கள். அனுப்பும் செலவைக் கேட்டுச் சொல்வேன். அதன்பின் உங்கள் பகுதிக்கும் வருவோம்.

எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் அல்லது பின்னூட்டம் எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.

எனது மின்னஞ்சல்  muthunilavanpdk@gmail.com 
(E.mail   Subject பகுதியில் பதிவர் கையேடு தேவை“ என்று குறிப்பிட்டால் அவற்றைத் தனியே எடுத்து, பதில் அனுப்ப, நண்பர்களுக்கும் தெரிவிக்க உதவியாகும்)

எதிர்பார்ப்புடன்,
நா.முத்துநிலவன்,
பதிவர் விழாக்குழு-2015,
கணினித் தமிழ்ச்சங்கம்புதுக்கோட்டை.
எனது செல்பேசி எண்  +91 9443193293

திங்கள், 2 நவம்பர், 2015

அச்சு ஊடகங்களில் நமது பதிவர் விழாச் செய்திகள்..

எழுத்தாளர் மயிலை பாலு
பொறுப்பாசிரியர், தீக்கதிர்  நாளிதழ் சென்னை 
இணையம்,வலைப்பூமுகநூல் என்ற சொற்கள் தகவல் தொழில்நுட்பம் தமிழுக்கு உருவாக்கித் தந்துள்ள சொற்கள். தமிழின் சீரிளமைத்திறன் கண்டுவியக்கவைக்கும் இணைய எழுத்தாளர்கள் இணைந்துகொண்டாடிய வலைப்பதிவர்கள் திருவிழா அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.


கவிஞர் முத்துநிலவனோடு கைகோர்த்து புதுகைஎழுத்தாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில்வலைப்பூவில் அன்றலர்ந்த இளைஞர்களும் அது பூத்தபோதே எழுதத் துவங்கிய மூத்த படைப்பாளிகளும் சங்கமித்திருந்தனர். வயதின் தள்ளாமையையும் தள்ளிவைத்துவிட்டு விழாவுக்கு வந்திருந்த மூத்த படைப் பாளிகளை கைத்தாங்கலாக இருவர் மேடைக்கு அழைத்துவர அவர்கள் கவுரவிக்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மறுபக்கம் தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டுக்கான போட்டிகளில் புதுக்கவிதை மரபுக்கவிதை இரண்டுபிரிவிலும் பரிசுபெற்ற புதுக்கோட்டைக் கவிஞர் இரா. தனிக்கொடிக்கான பாராட்டு அசத்தலாக இருந்தது.(இவர் “கொம்பன்“ திரைப்படத்தில் நான்கு பாடல்களை எழுதியவர்)

வலைப்பதிவர் திருவிழா என்ற செய்தியைப் பார்த்ததும் தன்னையும் அதில் இணைத்துக் கொண்டது தமிழ் இணைய கல்விக்கழகம். வலைப்பூக்களில் சிறந்தபடைப்புகளைப் பதிவோருக்குப் பரிசுகளையும் அறிவித்தது. அந்தப் பதிவுகள் குறித்து சிறந்த விமர்சனங்கள் எழுதுவோருக்கும் பரிசு என்பது பின்னூட்டமாக அமைந்தது. இதனால் பரிசுகள் பெறுவதும் வழங்குவதுமே உற்சாகப் பெருநிகழ்வாக இருந்தது.

இணையதளம் என்ற வலைவீச்சில் சிக்காத மீன்களே இல்லை என்பதே நிதர்சனம். இந்தப் புதுயுகத்தில் என்னென்ன வாய்ப்புகளை இணையம் வழங்குகிறது என்பதை உரையாளர்கள் குறிப்பிட்டுச் சொன்னபோது அகலத்திறந்த விழியினராய் பங்கேற்பாளர்கள் ஆச்சரியமடைந்தனர். 

வலைப்பூவின் அடிநாதம் கருத்துச் சுதந்திரம் என்பதாக தனது உரையைத் தொடங்கினார் தமிழ் இணைய கல்விக்கழக உதவி இயக்குநர் தமிழ்ப்பரிதி. கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல்கள் தொட ரும் தருணத்தில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் மீது இந்தி மொழியின் வல்லாண்மை மேகம் கவிந்திருக்கும் காலகட்டத்தில் இணைய வழியான சமூக வலைத்தளங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கூடுதலாக்க வேண்டியதன் அவசியத்தை அவர்ஆழப்பதிவு செய்தார். எங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்த இயலுமோ அங்கெல்லாம் பயன்படுத்துவதன் மூலமே அதன் இருப்பை நிலை நிறுத்த முடியும் என்பதை நினைவு படுத்தினார்.

இணையதளத்தில் இன்னும் ஓராண்டில் தமிழில் 5லட்சம் கட்டுரைகளை இடம் பெறச் செய்வது - டிக்ஷனரியில் தற்போதுள்ள 3லட்சத்து 14 ஆயிரம் தமிழ் சொற்களை ஒரு கோடி அளவுக்கு உயர்த்துவது - வரும் பொங்கல் திருநாளுக்குள் ஒரு லட்சம் தமிழ் நூல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது போன்ற இணைய கல்விக் கழகத்தின் இலக்குகளை தமிழ்ப்பரிதி முன்வைத்தார். தமிழின் ஒளி மிக்க எதிர்காலம் இணையத்திலும் பரவும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தியது.இணையத் தமிழை மேம்படுத்த பல துறை பொருண்மை சார்ந்த ஆழமான கட்டுரைகளைப் பதிவிடுங்கள் என்ற அவரின் கோரிக்கையும் பொருள் நிறைந்ததாகவே இருந்தது.

எந்தத் தகவல் வேண்டுமென்றாலும் சுட்டி வழிதேடுவது விக்கிப்பீடியாவில்தான். ஆங்கில வழியிலான அந்தத் தகவல் களஞ்சியத்திற்கு இணையாகத் தமிழில் தகவல்களை வழங்க உருவாக்கப்பட்டிருப்பது விக்கிமீடியா. இதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கரும் இவ்விழாவில் பங்கேற்றார்.தானியங்கி பணப்பட்டு வாடா மையம் தொடங்கி எந்த இடமானாலும் தமிழையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்கும் தமிழ் என்பதற்கான தேவை யை ஆட்சியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிய வைக்க முடியும் என்பதை வலியுறுத்திச் சொன்னார்.

ஓலா என்ற தனியார் நிறுவனத்தில் மகிழுந்து பதிவு செய்வதற்கு ஒருவர் தொடர்ந்து தமிழை மட்டுமே பயன்படுத்தியதால் அந்நிறுவனம் மொழிபெயர்ப்பாளர் ஒருவரைப் பணியில் அமர்த்தியதைக் குறிப்பிட்டு தமிழ்சோறு போடுமா என்கிறார்களே இத்தகைய முயற்சிகள் தொடர்ந்தால் தமிழ் பலருக்கு சோறு போடும் என்று எடுத்துக்காட்டோடு பேசியது புதிய சிந்தனையை ஏற்படுத்தியது.வலைப்பூவிலிருந்து மின்நூலுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்ததோடு துறை சார்ந்த கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவற்றைப் பதிவிட முயற்சி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். இந்திய மொழிகளின் இணையப் பயன்பாட்டில் தமிழ் இரண்டாவது இடத்தில் இருப்பதை நினைவு கூர்ந்தார். பலருக்கும் பயன்படுவதாகப் பலரும் பயன்படுத்துவதாக தமிழில் எழுதி விக்கிமீடியாவில் பதிவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. கணினியில் தமிழ் வழி எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்ற அவரின் கருத்து பார்வையாளர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. புரிதலை உண்டாக்கியது.

இவரது கருத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்ததுஅழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சோ. சுப்பையாவின் பேச்சு. இந்தப் பல்கலைக்கழகத்தில் கணிப் பேரவை தொடங்கி ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் பேராசிரியர்களை அழைத்துப் பயிற்றுவித்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்றார் 

நந்தலாலா. காம் என்ற இணைய இதழ் மீண்டும் தொடக்கம் இடையிடையே இனிய குரலில் சுபா என்ற மாணவியின் பாரதியார்,பாரதிதாசனின் பாடல்கள் என்றுசென்ற நிகழ்வுகளை மாலைப் பொழுதில் நிறைவு செய்துஉரையாற்றினார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

தமிழில் மென்பொருள்களை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தொடங்கி முரசு அஞ்சல்தான் தமிழின் முதல் எழுத்துரு என்பதைநினைவுபடுத்தி அதை உருவாக்கியவர் பெயர் தெரியாவிட்டாலும் நன்றி சொல்ல வேண்டும் என்றார். ஆங்கிலம் போலவே தமிழிலும் நாவி என்ற பிழை திருத்தி உருவாக்கப்பட்டிருப்பதற்கும் பாராட்டு தெரிவித்தார். 

வலைப்பூவை உருவாக்கி அளித்தவர் பா.ராகவன்என்பதையும் பதிவு செய்தார். கிராமங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள கியூபாவில் இணையம் பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கும் அரசுக்கும் உண்மையான இணைப்பை ஏற்படுத்துவதாக இணையம் அங்கே இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.வலைப் பதிவர்கள் ஆளுக்கொரு நூலினை அறிமுகம் செய்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்அப்போது வாசிப்புப் பழக்கமும் அதிகரிக்கும்நூல்கள் பற்றி மேலும் பலரறிய வாய்ப்பும் ஏற்படும்.

நம் ஊரில் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் படைப்புக்கான வலைப்புதிவுகள் இல்லை. ஆங்கிலத்தில ஆர்ட்பிளாக் (artblog) என ஏராளமானவலைப்பக்கங்கள் இருக்கின்றன என்றதோடு அருகி அழிந்து வரும் நமது பாரம்பரிய பண்பாடுகள் பொருள்கள் வாழ்க்கை முறைகள் போன்றவற்றைப் பாதுகாத்துவைக்க நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இணையதளம். இவற்றில் தகவல்களைப் பதிவிட்டு பாதுகாக்கலாம். அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் என்று யோசனை கூறினார்.

சிறியதோ பெரியதோ சொந்தமாக எழுதுங்கள் என்றவர் பூக்களில் சிறிய வேப்பம்பூவுக்கும் தனித்தன்மை உண்டு. அதேபோல் தகவல் சிறியதாயினும் அரியதகவலாக இருந்தால் அதற்கும் வரவேற்பு இருக்கும் என்ற கருத்தோடு இணையத்தில் தமக்கு ஏற்பட்ட ஏற்படும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

வலைப்பதிவர் திருவிழா இணையதளம் வழி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தியாவில் பகல்அமெரிக்காவில் இரவு என்ற போதும் அங்கிருந்தும் வலைப்பதிவர்கள் அக்கறையோடு பார்த்து இட்டபதிவுகளும் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இதனைக் கண்டபோது கல்விகுறித்து வள்ளுவர் சொன்ன குறள் நினைவுக்குவந்தது.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையும் கல்லாத வாறு” - கற்றவர்களுக்கு எல்லா ஊரும்எல்லா நாடும் சொந்தமாகும். அப்படியிருந்தும் சாகும்வரையும் சிலர்ஏன் கல்விகற்காமல் இருக்கிறார்கள் என்றுகவலைப்பட்டார் வள்ளுவர். 

இந்தக் குறளின் கருத்தை இந்த நூற்றாண்டு இணையத்தோடு பொருத்திப்பார்த்தால்,
'யாதானும் நாடாமால் ஊராமால் எற்றுக்கு
இணையத்தோ டிணையாத வாறு?" என்று சொல்லத் தோன்றுகிறது.
                                    --- தொகுப்பு: மயிலைபாலு 
  (நன்றி -“இலக்கியச் சோலை“ -தீக்கதிர் நாளிதழ்
 02-11-2015 நாளிட்ட இணைப்பு)
---------------------------------------------
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழ்ப்பதிவர் நண்பர்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள் - 
அந்தந்தப் பகுதியில் வெளிவரும் தமிழ் நாளிதழ் வாரஇதழ் அச்சிதழ்களில் நமது பதிவர்திருவிழாப் பற்றிய செய்தித் தொகுப்புகளை எழுதி வெளியிட முயற்சிசெய்யுங்கள்.
செய்தி வெளிவந்தவுடன் அதனை இணைப்போடு அனுப்புங்கள்
எடுத்து, நமது தளத்தில் நன்றியோடு வெளியிடுவோம்.)
------------------------------------------------- 
--- http://valarumkavithai.blogspot.com/ வலைப்பக்கத்திலிருந்து...

ஞாயிறு, 1 நவம்பர், 2015

வலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை

வணக்கம். வலைப்பதிவர்விழாவின் வரவுசெலவு அறிக்கையை, நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதா தயாரித்து விழாக்குழுவின் சார்பாக வெளியிட்டுள்ளார். அதனை இங்கு நானும் பகிர்கிறேன். அவரது உழைப்பும், ஈடுபாடும் விழா வெற்றிக்கு அடிப்படையாக நின்றதை அனைவரும் அறிவர்.


விழாவில் நன்றியுரை -
நிதிப்பொறுப்பாளர் மு.கீதா
--------------------------------------------------------------
விழாக்குழுவினர் அனைவரும் போட்டிபோட்டு உழைத்தாலும், இந்த விழாவின்வெற்றி முகத்திற்கு இரண்டு கண்கள் உண்டெனில் அவை இரண்டும்  நிதிப்பொறுப்பாளர் மு.கீதா, உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமி இருவருமே ஆவர்.  இவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

விழாக்குழுவின் ஏனைய பொறுப்பாளர்களின் கால நேரம்பாராத கடும் உழைப்பு சொல்லில் விவரிக்க இயலாது. அதன் அடிப்படையாக சமூக உணர்வுடன் கூடிய அன்பும், நமது மரபார்ந்த பண்பும் இருந்தது.

பதிவர்விழா-நம் குடும்பவிழா!
எங்கெங்கோ இருந்துகொண்டு, இந்த விழாவைத் தம்வீட்டு விழாவைப் போலெண்ணி, எழுதி-பணம் அனுப்பி-மற்றவர் ஈடுபாட்டை உசுப்பிவிட்டு எங்களை மறைமுகமாக ஆட்டுவித்த நம் பதிவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? அவர்களை யெல்லாம் வணங்கி இந்த வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம்.
நன்றி - http://velunatchiyar.blogspot.com/2015/10/2015_18.html 
-------------------------------------------------- 

               வங்கிக் கணக்கு வழி புரவலர் நிதி

வ.
எண்
தேதி
                  பெயர்
                 திருமிகு
தொகை
ரூபாய்
1
14.9.15
இளமதி ஜெர்மனி
5,000
2
14.9.15
பாரதிதாசன் பிரான்சு
5,000
3
16.9.15
மரு..உமர் பாரூக் -தேனி
5,000
4
16.9.15
புதுவை வேலு/யாதவன்நம்பி-பிரான்சு ரூ100பிடித்தம்  
11,010
5
18.9&,11.10.15
ஜோசப் விஜு-திருச்சி [1,000+5,000]
6,000
6
22.9&,3.10.15
பசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]
10,000
7
23.9.15
கர்னல். பா. கணேசன் -சென்னை
5,000
8

பெயர் குறிப்பிடாதவர்?
11,400
9
27.9.15
அம்பாளடியாள் -சுவிஸ்    
10,000
10
30.9.15
இனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]
5,000
11
8.10.15
மதுரைத்தமிழன்[அவர்கள் உண்மைகள்]
5,166
12
13.10.15
பரிவை சே.குமார்
5,000


கூடுதல்
83,576
   வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.
             ----------------------------------------------


             வங்கிக்கணக்கு வழி-நன்கொடை விவரம்

வரிசை
எண்
நாள்
      பெயர்
     திருமிகு
தொகை
ரூ
1
18.8.15
ஞா.கலையரசி-புதுச்சேரி
1,000
2
20.815
பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்
1,000
3
1.9.15
தமிழ்.இளங்கோ-திருச்சி
2,000
4
4.9.15
எங்கள் பிளாக் கௌதமன்,ஸ்ரீராம்-சென்னை
500
5
5.9.15
பி.எஸ்.டி.பிரசாத்-சென்னை
500
6
9.9.15
புலவர்.இராமானுசம்-சென்னை
1,000
7
9.9.15
ஜி.எம்.பாலசுப்ரமணியன்-பெங்களூர்
1,000
8
10.9.15
வினோத்-கிரேஸ்-அமெரிக்கா
1,000
9
14.9.15
யூஜின் ப்ரூஸ்
500
10
14.9.15
நடனசபாபதி-சென்னை
1,000
11
14.9.15
சென்னை பித்தன்
1,000
12
14.9.15
இராய. செல்லப்பா-காஞ்சிபுரம்
1,234
13
14.9.15
மருது பாண்டியன்
100
14
14.9.15
பொன். தனபாலன்-திண்டுக்கல்
1,000
15
14.9.15
செல்வராஜூ துரைராஜூ-குவைத்
3,000
16
15.9.15
வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சி
500
17
15.9.15
எஸ்.ஞானசம்பந்தம்-புதுச்சேரி
1,000
18
16.9.15
கீதா மதிவாணன் -ஆஸ்திரேலியா
1,000
19
16.9.15
சூரியநாராயணன்[சுப்பு தாத்தா]-சென்னை
500
20
18.9.15
மணவை ஜேம்ஸ்-திருச்சி
1,000
21
18.9.15
S.P. செந்தில் குமார்-மதுரை
500
22
18.9.15
கோவிந்தராஜூ -கரூர்
1,001
23
19.9.15
துளசிதரன்,கீதா-சென்னை
2,000
24
22.9.15
தளிர் சுரேஷ்-திருவள்ளூர்
1,000
25
23.9.15
ஆர்.வி.சரவணன்- குடந்தை
1,000
26
23.9.15
காமட்சி மகாலிங்கம் -மும்பை
1,000
27
25.9.15
இராமமூர்த்தி தீபா-மதுரை
1,000
28
25.9.15
பி.  அனுராதா
1,500
29
29.9.15
.பு.ஞானபிரகாசன் சென்னை
150
30
30.9.15

ஜி.ரமேஷ் உமா-சென்னை
1,000
31
6.10.15
சித்தையன் சிவகுமார் -மதுரை
501
32
9.10.15
முகம்மது நிஜாமுதீன்-
1,000
33
15.10.15
ராஜ்குமார் ரவி -கோவை
500
34
15.10.15
ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்
1,000
35
17.10.15
சுஜீத்[வெங்கட் நாகராஜ்]
1,000
36
20.10.15
உலகநாதன்
500
37
23.10.15
பொன்னுசாமி
250
37
27.10.15
கவிசெங்குட்டுவன்
250
38
28.10.15
கரூர்பூபகீதன்[.பூபாலகிருஷ்ணன்]
250


கூடுதல்
35,236


வங்கி கணக்கு- [போட்டிவிளம்பரம் / நூல் வெளியீடு]வரவு

வ.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூபாய்
1
4.9.15
கரந்தை ஜெயக்குமார் 
நூல் வெளியீடு
5000
2

ரூபன் மலேசியா
நூல் வெளியீடு திண்டுக்கல் தனபாலன் வழி
5000
3
16.9.15
விசு ஆசம்[துளசி கீதா திண்டுக்கல் தனபாலன் மற்ரும் வெஸ்டர்ன் யூனியன் வழியாக]
விளம்பரம், போட்டிகளுக்கு 10,000+18,781
28,781
4
18.9.15
மூன்றாம் சுழி துரை அப்பாதுரை
8,125
5
21.9.15
 தமிழ்களஞ்சியம்-வெற்றிக் கேடயம் 
15,000
6
2.10.15
ஆல்பிரட் தியாகராஜன்- நியூயார்க்
3,000
7
9.10.15
விஜய் கார்த்திக் அமெரிக்கா
3,000
8
12.10.15
தமிழ் இணையக்கல்வி கழகம்- போட்டி
50,000
9
29.10.15
பாரத்கல்லூரி -தஞ்சாவூர்
10,000


கூடுதல்
1,27,906




வங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு


வ.எண்
தேதி
பெயர்
தொகை
1
15.10.15
கலையரசி
3,000
2
21.10.15
எஸ்.பி. செந்தில் குமார்
1,000
3
16.10.15
ஜெ.சிவகுரு தஞ்சை
500
4

தளிர் சுரேஷ்
1,200


கூடுதல்
5,700


வங்கிக்கணக்குவழி மொத்தவரவு

.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கி பிடித்தம்
ரூ
மொத்த
தொகை
ரூ
1
புரவலர்
83,576


2
விளம்பரம் ,போட்டி
1,27,906


3
நன்கொடை
35,236


4
புத்தகம்
5700



கூடுதல்
2,52,418
558
2,51,860




கையில் வந்த வரவு-புரவலர் நிதி

.எண்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
தங்கம் மூர்த்தி
12,000
2
மதுரை ரமணி
5000
3
ஜெயலெட்சுமி
5000
4
               கூடுதல்  
22,000


கையில் வந்த வரவு-நன்கொடை நிதி

.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
4.8.15
நா.முத்துநிலவன் புதுக்கோட்டை
2000
2
4.8.15
பொன்.கருப்பையா புதுக்கோட்டை
1000
3
4.8.15
மு.கீதா புதுக்கோட்டை
2000
4
4.8.15
கருணைச்செல்வி புதுக்கோட்டை

1000
5
4.8.15

கஸ்தூரிரங்கன் புதுக்கோட்டை
1,000
6
4.8.15
மைதிலி புதுக்கோட்டை
2,001
7
4.8.15
கா.மாலதி புதுக்கோட்டை
1,000
8
4.8.15
சி.குருநாதசுந்தரம் புதுக்கோட்டை
1,000
9
4.8.15
.கிருஷ்ணவேணி புதுக்கோட்டை
1,000
10
.9.15
கில்லர்ஜி-அபுதாபி வெஸ்டர்ன் யூனியன் வழியாக
2,222
11
12.09.15
தி.ந.முரளிதரன் -சென்னை 
1000
12
4.10.15
ரேவதி புதுக்கோட்டை
500
13
1.10.15
மகாசுந்தர் புதுக்கோட்டை
1,500
14
2.10.15
சூசைக்கலாமேரி த.ஆ புதுக்கோட்டை
1,000
15
6.10.15
அப்துல்ஜலீல் புதுக்கோட்டை
1,000
16
6.10.15
.பாண்டியன் மணப்பாறை
1,500
17
7.10.15

பஷீர் அலி கீரமங்கலம்
2,000
18
9.10.15
பாலசுப்ரமணியன்-புதுக்கோட்டை
1,500
19
10.10.15
அமிர்தாதமிழ் புதுக்கோட்டை
1,000
20
10.10.15
கவியாழிகண்ணதாசன்-சென்னை
1,000
21
10.10.15
உமையாள்காயத்ரி-காரைக்குடி
500
22
10.10.15
ஜோக்காளி பகவான் ஜி-மதுரை
500
23
10.10.15
கு..திருப்பதி புதுக்கோட்டை
1,000
24
11.10.15
சீனா [எ]சிதம்பரம்-மதுரை
2,000
25
11.10.15
தமிழ்வாசி பிரகாஷ்-மதுரை
500
26
11.10.15
ஸ்டாலின் சரவணன் புதுக்கோட்டை
1,000
27
11.10.15
எழில்-கோவை
1,000
28
11.10.15
நீச்சல்காரன் இராஜாராம்-சென்னை
200
29
13.10.15
சுமதி புதுக்கோட்டை
500
30
13.10.15
மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை
500
31
18.10.15
மீரா.செல்வக்குமார் புதுக்கோட்டை
1000
32
19.10.15
வைகறை புதுக்கோட்டை 
1000
33
19.10.15
சோலச்சி புதுக்கோட்டை
1000


கூடுதல்
36923


கையில் வரவு-புத்தக விற்பனை


1
விழாவில்  விற்பனை
ரூ. 5938
2
வைகறைமூலம்
ரூ.  200

கூடுதல்
ரூ. 6,138



கையில் வரவு-விளம்பரம்


.எண்
நாள்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
11.10.15
வி.சி.வில்வம் திருச்சி
1,500
2
11.10.15
அம்சப்பிரியா கோவை
500
3
11.10.15
பூபாலன் கோவை

500
4
11.10.15
குறிப்பேடு-பேனா [கு..திருப்பதி]
2,250
5
29.10.15
இராஜ்குமார்[பதாகை ]
2,000
6
29.10.15
பாரதி புத்தகாலயம்
1,000


கூடுதல்
7,750
                        
          
              கையில் வந்த மொத்த தொகை


.எண்
விவரம்
தொகை
ரூ
1
நன்கொடை
36,923
2
புரவலர்
22,000
3
விளம்பரம்
7750
4
புத்தகவிற்பனை
6138

கூடுதல்
72,811




மொத்த வரவு விவரம்


.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கிப் பிடித்தம்
தொகை
1
வங்கிக்கணக்கு
  2,52,418
558
2,51,860
2
கையில்
72,811
-
 72,811

மொத்தவரவு


3,24,671






மொத்த செலவு விவரம்

.எண்

விவரம்
தொகை
ரூ
கூடுதல்
1
மண்டபச்செலவுகள்
1]மண்டபம்,(மின்செலவு,உட்பட)
11,610



2]மேடைஅலங்காரம்,கார்ப்பெட்,
8880



3]ஒலி,ஒளி தலையணை பெட்ஷீட்
10,000



4]இசைக்குழு
2,400



5]ஒளிப்படம்[ஃபோட்டோ]
3,000



6]ஓவியக்கண்காட்சி
3,000



7]உணவு[மளிகை,கூலி,பாத்திரவாடகை]
75,000



8]நெகிழிப்பதாகை(விளம்பரம்,அரங்கம்)
7,100
1,20,990
2]
பரிசுப்பொருள்கள்
1]தோள்பை
41,000



2]கையேடு
30,000



3]போட்டிப்பரிசு தொகை[..]
50,000



4]விமர்சனப்போட்டி[பரிசு தராத வரவு]
   5,000



5]கேடயங்கள்,பேட்ஜ்,குறிப்பேடுகள்
30,000
1,56,000
3]
நிகழ்ச்சிக்கானசெலவு
1]அழைப்பிதழ் [அச்சிட அனுப்ப]
5,000



2]சிறப்பு அழைப்பாளர்கள்  தங்குமிடம்
4,383



3]சிறப்புப் பேச்சாளர் 
[போக்குவரத்து,அறைவாடகையுடன்]
27,000



நேரலை ஒளிபரப்பு மற்றும் நினைவுப் பரிசுப் புத்தகங்களுக்கான செலவுகள்
8,469
44,852


மொத்த செலவு

3,21,842


              

           மொத்த வரவு செலவு



மொத்த வரவு

 ரூ. 3,24,671

மொத்த செலவு

ரூ. 3,21,842

கையிருப்பு தொகை

 ரூ.  2,829


விழாச்சிறக்க முதல்நாளே வந்து ஆலோசனைகள் தந்து ஒருநாள் முழுவதும்
இருந்து சிறப்பித்த எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்,
சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புச் செய்த துணைவேந்தர் முனைவர்
சொ.சுப்பையா அவர்கள், தஇக உதவி இயக்குநர் முனைவர் 
மா.தமிழ்ப் பரிதி அவர்கள், விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட
ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரிய பொறுப்பில் இருந்தாலும் 
உறவுபோல நட்புப் பாராட்டிய திரு அ.இரவிசங்கர் அவர்களை உள்ளிட்ட
பெருமக்களுக்கு இதய நன்றி தவிர வேறென்ன சொல்ல?

இந்த விழா, பெரும் வீச்சுக்குச் செல்லக் காரணமான போட்டிகளை நடத்த 
முன்வந்து பொருளுதவி செய்த த.இ.க இயக்குநர் அய்யா த.உதயச்சந்திரன் 
அவர்கள், அவர்களுடன் தொடர்பு ஏற்படக் காரணமான நண்பர் நீச்சல்காரன்
ராஜாராமன் அவர்கள் தந்த ஊக்கத்தால் சிறுவிழா பெருவிழா ஆனதென்பது
மிகையன்று.

போட்டிகளுக்கு நடுவர்களாகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகப் பங்களித்த 
சான்றோர்ளான நடுவர்கள், உற்சாகமிகுதியோடு 260படைப்புகளைத் தந்த போட்டியாளர்களின் பங்களிப்பே விழா நேர்த்திக்கு
அடிப்படையானது. 

இவர்களின் உற்சாகம் மேலும் தொடர ஏதாவது செய்தாக வேண்டும்,
பார்க்கலாம்.

விழாவுக்கு வந்த பதிவர் அனைவர்க்கும் மனமுவந்து தரப்பட்ட சுமார் 
300 நூல்கள் உள்பட அவரவர் கைக்காசு போட்டு அலைந்து திரிந்த 
நண்பர்களின் உழைப்பும் ஈடுபாடும் மதிப்பிட முடியாதது.

விழாக்குழுக் கூடியபோதெல்லாம் மணப்பாறையிலிருந்து வந்த அ.பாண்டியன்
போலவும் ஆலங்குடியிலிருந்துகொண்டே ஓவியங்களை வரைந்து தந்த 
ஓவியர்களைப் போலவும், அவர்களை ஒருங்கிணைத்த நீலா, ஸ்டாலின், 
எஸ்.ஏ.கருப்பையா போலவும், கவிதைகளைத் தொகுத்துத் தந்த தங்கை
மைதிலி(அவரது மழலைகள் நிறை-மகி) போலவும், திருச்சிமாவட்டம் 
முழுவதும் அலைந்து விழாவின் உணவில் ருசிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இரா.ஜெயலட்சுமி போலவும், நேரலை நிகழ்வுக்காக உழைத்த UK Infotech 
தம்பிகள், வழிகாட்டிய மது கஸ்தூரிரெங்கன், கையேட்டுக்காக வேர்வை சிந்திய ஸ்ரீமலையப்பன், நாக.பாலாஜி உள்ளிட்ட “விதை-கலாம்” தம்பிகள் முகுந்தன்,
காசி பாண்டி, இரவு-பகல் பாராமல் உழைத்த விஞர்கள் வைகறை,
மீரா.செல்வக்குமார், பாவலர் பொன்.க, தமிழாசிரியர்கள் கு.ம.திருப்பதி, குரு, 
மகா.சுந்தர் மற்றும் விளம்பரம் வாங்க, நிதி திரட்ட விழாவன்று  அத்தனை
 நிகழ்வின் துளிகளிலும் தமது வேர்வைத் துளிகளை இழைத்து விழாவை 
மணக்கச் செய்த மாலதி ரேவதி, வேணி, சுமதி, நாகநாதன், சோலச்சி, 
திருமதி வைகறை, தமிழ்அமிர்தா (அவர்தம் குழந்தைகள்) இன்ஃபோடெக் லீலா,
புனிதா, உள்ளிட்ட நம் சகோதர - சகோதரிகளின் அன்பின் விளைவே இந்த 
விழா! (கையேட்டின் எனது முன்னுரையிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்)

விளம்பரம் தந்தோர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதிஉதவிசெய்து விழாப்
புரவலராகவும், நன்கொடையாளராகவும் நெஞ்சில் இடம்பிடித்த நல்லோரின்
எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்திசெய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம்.

சொல்லமுடியாத நெருக்கடிகளில் எல்லாம் கைகொடுத்த கவிஞர்
தங்கம்.மூர்த்தி மற்றும் நண்பர் எஸ்.டி.பஷீர்அலியின் உதவிகளுக்கெல்லாம கைம்மாறில்லை!

இந்த நட்பும் ஈடுபாடும் அடுத்தவர் திறமையை மதிக்கும் ஜனநாயக
 உணர்வுடன் கூடிய உழைப்பும், இன்னும் பல விழாக்களை நடத்த 
அடிப்படையாகும். அடுத்த பதிவர் விழா எங்கு வேண்டுமானாலும்
நடக்கட்டும். ஆனால், அடுத்தடுத்துப் பயிற்சிவகுப்புகளும் கணினித்
தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவும் புதுக்கோட்டையில் தொடரும்.
தொடர வேண்டும்.

தமிழ்ப் பதிவர் குடும்ப அன்பின் தொடர்ச்சியை இப்போது போலவே 
இனியும் எப்போதும் வேண்டுகிறோம். 

வழிகாட்டிய முன்னோடி-மூத்தோரின் வாழ்த்துகளை, வலைச்சித்தரின்
அன்பை, உலகத் தமிழ்வலைப்பதிவர் அனைவரின் உளப்பூர்வமான ஆதரவை இன்றுபோல் என்றும் தொடர வேண்டுகிறோம். 

விழா வெற்றியில் மகிழ்ந்து, என் ஒருவன் கழுத்துக்கு மாலைகட்டி வந்த 
நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அடுத்தமுறை மாலை 
கட்டும்போது, இவ்வளவு பெரிய மாலையாகக் கட்டிவராமல்,
கழுத்தளவுக்கே அளவெடுத்து சில நூறு மாலைகளைக் கட்டச்
சொல்லுங்கள். 

ஏனெனில், மேற்காணும் ஒவ்வொருவரின் கைகளையும் குலுக்கி, மாலை 
அணிவிக்க வேண்டும். அதோடு, விழாவன்று தனது வேலைகளை ஒதுக்கி
வைத்துவிட்டு, சிரமம் பாராமல் டெல்லி, மும்பை, பெங்களுரு, பாலக்காடு,
சென்னை, மதுரை, பழனி என்று தூரதூரமான ஊர்களிலிருந்தும் வந்து 
சிறப்பித்தார்களே அந்த நமது மூத்த-முன்னோடி-மற்றும் இளைய
பதிவர்களின் வருகைக்கு முதலில் மாலை போட்டுவிட்டு அப்புறம் 
விழாக்குழுவின் கழுத்துக்கு வாருங்கள்! அவர்தம் அலைச்சலுக்கும்
சிரமம் பாராத அன்பிற்கும் நன்றி கூறுவோம்.

இனி, மீதமுள்ள வலைப்பதிவர் கையேடு விற்பனை, அடுத்த விழாவுக்கான முன்பணமாக ஏற்கப்படும். கணினித் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடரும். 

அனைவர்க்கும் நன்றி வணக்கம்.  

விடை பெறும் முன் ஒரு சொல்கேளீர் -
நன்கொடையாக சுமார் ரூ.28,781 தந்திருக்கும் அமெரிக்கத் தமிழ்ப் பதிவர்
திரு விசுஅவர்களின் வேண்டுகோளை ஏற்கமுடியாமல், அவர் செய்த
உதவியைச் சொல்லிக்காட்டக் காரணம் உண்டு. உதவி இருக்கட்டும்..
அவர் சொன்ன ரகசிய வாரத்தைகள்...விழாக்குழுவுக்கே தெரியாது(!) -
“நல்லா நடத்துகங்க அய்யா, கைப்பிடித்தம் வந்தா நா பாத்துக்கிறேன்”
இதைவிட வேறென்ன உதவி செய்ய முடியும்! உங்களது நல்ல 
மனசுக்கேற்ப கைப்பிடித்தம் ஏதும் வரவில்லை விசு அவர்களே!
தங்களின் உற்சாக வார்த்தைகளின் மந்திரம் விழாவைச் சிறக்கச் செய்ய
எங்களை உசுப்பிவிட்டது என்பதே உண்மை! நன்றி நண்பா! 


சரி.. நமது அன்பின் பணிகளை
வலைச்சித்தரின் தொடர் உதவிகளோடு 
பதிவுகளில் தொடர்வோம். தொடருங்கள்... 

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர் - பதிவர் திருவிழாக்குழு-2015,,
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
01-11-2015 காலை மணி10.00
----------------------------------------------------------------
Related Posts Plugin for WordPress, Blogger...