சனி, 10 அக்டோபர், 2015

போட்டி முடிவுகள்

வகை (1) 
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்


முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன் - மாயனூர், கரூர் மாவட்டம்
   26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
   14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு P.S.D.பிரசாத் - சென்னை
   16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை

வகை(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
   13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு கோபி சரபோஜி - சிங்கை
   10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3) பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி
   10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. →உன்தடம் மாற்றிடு தாயே!



வகை(4) புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
   40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு இரா.பூபாலன் - கோயம்புத்தூர்
   69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு வைகறை - புதுக்கோட்டை
   27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5) மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
   20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு மகா.சுந்தர் - புதுக்கோட்டை
   25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
   02. →கனவுகளும் நனவாகும்

விமரிசனப் போட்டி

முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி

ஒரே இடத்தை பகிர்ந்து கொள்ளும் படைப்பாளிகளுக்கு,
வெற்றிக் கேடயங்கள் தனித்தனியே வழங்கப்படும்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் நாளைய விழாவில் (11.10.2015)
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அதோடு தமிழ்க்களஞ்சியம் (http://www.tamilkalanchiyam.com) வழங்கும்
வெற்றிக் கேடயங்கள் வழங்கப் படும்.

தங்களது கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படங்களை bloggersmeet2015@gmail.com மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்ப வேண்டுகிறோம்.

நன்றிக்குரிய நடுவர்கள்

முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம்
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன்
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
(எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன்
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன்
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன்
(விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின்
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

குறுகிய காலத்தில் ஆர்வத்தோடு போட்டியில் பங்கு கொண்ட படைப்பாளிகளுக்கு பாராட்டுகள்.

நமது விழாவோடு இணைந்து செயல்படுத்திய தமிழ் இணையக் கல்விக்கழக நிர்வாகிகளுக்கு நன்றி.

வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

ஒருங்கிணைப்பு

விழாக் குழுவின் சார்பாக

நா.முத்துநிலவன், திண்டுக்கல் பொன்.தனபாலன்

32 கருத்துகள்:

  1. வெற்றி பெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். கட்டுரைப் போட்டியில் எனது கட்டுரை இரண்டாம் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு
  3. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள். நானும் அந்த மகிழ்வில் இருக்கிறேன் என்பதில் இரட்டிப்பு சந்தோசம்.

    பதிலளிநீக்கு
  5. போட்டியில் கலந்து கொண்டதே எனக்கு பெருமகிழ்வு. பரிசு பெற்றிருப்பது என் மகிழ்ச்சியை இருமடங்காக்குகிறது. போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், ஊக்குவித்த அன்பு வலைநட்புகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம்நிறைந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வெற்றி பெற்ற அனைவருக்கும்
    எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. வெற்றி பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  11. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    புதுமையாகவும், மிகச்சிறப்பாகவும் கட்டுரை + கவிதைகளைத் தேர்வு செய்துள்ள நடுவர் குழுவுக்கு என் நன்றிகள்.

    கருத்துக்கணிப்புப் போட்டியில் வெற்றிபெற்றுள்ள ’ஊஞ்சல்’ வலைப்பதிவர் - புதுச்சேரி - திருமதி. கலையரசி அவர்களுக்கும் எங்கள் ஊராம் திருச்சி திரு. துரை. தியாகராஜ் அவர்களுக்கும் என் கூடுதல் பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும்.

    நாளைய விழா மிகச்சிறப்பாக நடைபெற + வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. வென்றோருக்கும் பங்கு பெற்றோருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  15. வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப்போட்டியில் என்னுடைய ‘கான் ஊடுருவும் கயமை’ கட்டுரை இரண்டாமிடம் பெற்றுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. இப்படியொரு பெருத்த அங்கீகாரம் கிடைத்திருப்பதை விடவும் இதுபோன்ற சூழலியல் காக்கும் பதிவுகளால் பொதுமக்கள் மனத்தில் விழிப்புணர்வு உண்டாகுமானால் அதுவே நம்முடைய மிகப்பெரிய வெற்றி… தேர்ந்தெடுத்த நடுவர் குழாமுக்கும் வாய்ப்பினை வழங்கி ஊக்குவித்த புதுகை வலைப்பதிவர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி. வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா! இனிய அதிர்ச்சி! போட்டி நடத்திய விழாக்குழுவினர்க்கும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்கும் மனமார்ந்த நன்றி. ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் கட்டுரைக்குப் பரிசளித்த நடுவர்களுக்கும் மகிழ்வுடன் சிரம் தாழ்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறேன்.
    தமிழ் இணையக் கழகத்தை இணைத்துப் போட்டிக்கு வித்திட்ட திருமிகு.முத்துநிலவன் அண்ணாவிற்கு சிறப்பு நன்றி. பதிவுகளை ஒருங்கிணைத்த டிடி அண்ணாவிற்கும் சிறப்பு நன்றி.

    வெற்றிபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் கலந்துகொண்ட அனைவருக்கும் உளமார்ந்த இனிய வாழ்த்துகள்!.

    நன்றி! நன்றி! நன்றி!

    பதிலளிநீக்கு
  17. வெற்றிபெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  18. போட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்த குழுவினருக்கும், இம்முயற்சியில் முன் நிற்கும் விழாக்குழுவினருக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  19. போட்டியில் கலந்து கொள்வதே எனக்கு பெருமையான ஒன்றாக இருந்தது. அதில் முதல் பரிசு பெற்றது அந்த மகிழ்ச்சியை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. எனக்கு இந்த பெருமையை தந்த நடுவர் குழுவுக்கும் புதுக்கோட்டை விழாக்குழுவினருக்கும் எனது நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. என்னுடன் இணைந்து வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. பெண்கள் முன்னேற்றம் குறித்த எனது கட்டுரைக்கு இரண்டாம் பரிசு அளித்தமைக்கு நடுவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  24. போட்டியில் வெற்றிபெற்றோருக்கு
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  25. விமர்சனப் போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்திருப்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி. போட்டிக்கு வந்த அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கப் போதுமான நேரம் கிடைக்காத காரணத்தால், கடைசி நாளில் கடைசி மணிநேரத்தில் தான் பங்குக் கொண்டேன். அதற்குப் பரிசு கிடைத்திருப்பதையறிந்த போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி இல்லாதிருந்தால் நான் அத்தனை பதிவுகளையும் வாசித்திருப்பேனா என்பது சந்தேகமே. எனவே பலதரப்பட்ட படைப்பாளர்களின் பதிவுகளை வாசிக்கவும், பல புதிய பதிவர்களின் எழுத்துத்திறனை அறிந்து கொள்ளவும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
    மின் இலக்கிய போட்டி முடிந்த தறுவாயில் எதிர்பாராத் திருப்பமாக இப்போட்டியை அறிவித்த விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் முத்துநிலவன் அவர்களுக்கும் இப்போட்டிக்குப் பரிசளிக்க முன் வந்த பெயர் வெளியிட விரும்பாத அந்த ‘நல்ல’ உள்ளத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
    இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நடுவர்களின் முடிவுகளோடு விமர்சனப்போட்டி முடிவுகளைச் சரிபார்த்து இரவு முழுதும் கண் துஞ்சாமல் வேலை பார்த்து முடிவுகளை வெளியிட்ட அண்ணன் முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன் சார் ஆகியோரின் கடின உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்.
    பரிசு கிடைத்த விபரத்துடன் வாழ்த்தையும் தனி மெயிலில் தெரிவித்த திரு கோபு சார் அவர்களுக்கு என் நன்றி. வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
    போட்டிகளில் வென்ற அனைத்துப் படைப்பாளர்களுக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  26. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
  28. பரிசு வென்றோருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி! நான் நன்கறிந்த ஜோசப் விஜு ஐயா, பல காலமாக நான் கேள்விப்பட்டு வரும் பெயருக்குரியவரான கருமலைத் தமிழாழன் ஐயா போன்றவர்கள் பரிசு பெற்றிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!

    அதே நேரம், என் நண்பரும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு வெகு அருமையான ஒரு வழியை முன்வைத்தவருமான மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு அந்தக் கட்டுரைக்காகப் பரிசு கண்டிப்பாய்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். கிடைக்காததில் மிகுந்த ஏமாற்றம்! அந்தக் கட்டுரைக்கு எப்படிப் பரிசு கொடுக்காமல் விட முடிந்தது எனப் புரியவில்லை! இருந்தாலும் அதே பிரிவிலிருக்கும் மற்ற கட்டுரைகளைப் படிக்காதவன் எனும் முறையில் அது பற்றி நான் எதுவும் கூற இயலாது.

    என் பங்களிப்பைப் பொறுத்த வரை, மோதிரக் கைகளால்தாம் குட்டுப்பட்டிருக்கிறேன் என்றெண்ணி ஆறுதலோடு விடைபெறும் அதே நேரம், நான் அந்தக் கட்டுரையை எழுதியதன் முதன்மை நோக்கமே வலைப்பதிவர் திருவிழாவில் குறிப்பிட்ட அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். கண்டிப்பாக அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!

    பதிலளிநீக்கு

  30. வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  31. வெற்றி பெற்ற அனைவருக்கும்
    எனது வாழ்த்துகளைத்
    தெரிவித்து மகிழ்கிறேன்...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...