சனி, 17 அக்டோபர், 2015

நன்கொடை வேண்டாம். கையேடு விற்பனைக்கு உதவினால் போதும்

வரவேற்புப் பூ த்தூவி வரவேற்கும் பூக்கள் (ஆண்களும்தான்)
 பற்றாக்குறை என்றதும் ஏதோ லட்சக்கணக்கில் நட்டக்கணக்கு என்பதாகப் பலரும் நினைத்துவிட்டார்கள் போல.. அனுதாபங்கள் குவிகின்றன! அந்த அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லி மாளவில்லை!


பற்றாக்குறை இப்போதும் பணத்தில் அல்ல... பணத்தில் எந்த அளவாயினும் ஈடுகட்டக்கூடிய அளவிற்கு நம் விழாக்குழு நண்பர்களே பெரிய மனதோடும் போதுமான வசதியோடும் இருக்கிறார்கள்.. எனவே...



நண்பர்கள் யாரும் இனி
நன்கொடை அனுப்ப வேண்டாம்,
கையேடு விற்பனைக்கு
உதவினால் வரவேற்போம்!

எனவே, “பரிசுத்தொகையை முழுவதுமாகத் தருகிறோம், ஒருபாதியை ஏற்றுக்கொள்ளுங்கள்என்றெல்லாம் நீண்ட அன்புக்கரங்களை அதே அன்புடன் மறுத்துக்கொண்டிருக்கிறோம்! தங்களின் அன்பு போதும் தொகை வேண்டாம்!



--------------------------------- 
வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-
NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

இந்தக் கணக்கின் வழி தொகை செலுத்துவோர், அவர்தம் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை 
கையேடு அனுப்பவேண்டிய முகவரிகள் 
முதலான விவரங்களை
 +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கு (குறுஞ்செய்தி) எத்தனை நூல்கள் தேவை எனத் தகவல் தெரிவித்திடவும் 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
------------------------------------------------------------------------------------ 
விழா நன்றாக நடத்தினோம் என்று வந்தவர்கள் உணர்ந்தால் அவர்கள் இதுவரை நன்கொடைப் பட்டியலில் சேராதவர்கள் என்றால் தரட்டும். உரிமை கலந்த அன்புடன் பெற்றுக்கொள்கிறோம்.

கவிதை ஓவியங்களைப் பார்வையிடும் கவிதை ஓவியங்கள்
ஏற்கெனவே தந்தவர்கள், விழாவுக்கே வராதவர்கள் அன்புகூர்ந்து இனி நன்கொடை அனுப்ப வேண்டாம் என்று மிகுந்த அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

வலைப்பதிவர் கையேட்டிற்கு விவரங்கள் தந்தோர் அவர்களுக்கோ அவர்களின் நண்பர்களுக்கோ... 

கையேடு அனுப்பச் சொல்லி பணம் அனுப்பும்போது, கையோடு முகவரிகளையும் சேர்த்து மின்னஞ்சல் செய்யவேண்டாமா நண்பர்களே?! (பணம் அனுப்பும் போதே பெயரைக் குறிப்பிடாமல், அனாமத்தாக வைத்துக் கணக்கிடும்போது எவ்வளவு சிக்கல்...!)

பதிவர் அறிமுகம் -நகைச்சுவை கலந்து கலக்கும் மூத்த பதிவர்
முனைவர் பழனி கந்தசாமி அவர்கள்(அடுத்தடுத்த பதிவுகளில்
பதிவர் அறிமுகப் படங்கள் மட்டும் தொடரும்)
------------------------------------------------------------------------------------- 

 மீண்டும் 
ஒரு வாரத்திற்குள்,
இதே தளத்தில் 
யார்யார் எவ்வளவு தந்தார்கள் 
என்னும் விவரத்தோடும்
எந்தெந்த வகையில் என்னென்ன செலவாயிற்று என்னும் கணக்கோடும் 
உங்களைச் சந்திப்போம் 

உழைத்த களைப்பின் நிறைவில்
வாடிய முகத்தோடும் வாடாத மனத்தோடும்
எங்கள் நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதாவின் நன்றியுரை.
------------------------------------------------------


நன்றி. வணக்கம்.

11 கருத்துகள்:

  1. அறிமுகப் பேச்சாளர்களின் வரிசையில் முதன் முதலாக நம் ‘மன அலைகள்’ பதிவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்களைக் காட்டி சிறப்பித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

    அவர் மட்டுமே மிகவும் கம்பீரமாகவும், ரத்தின சுருக்கமாகவும் தன்னைப் பற்றியும் தன் வலைப்பதிவினைப்பற்றியும் ஓரிரு வார்த்தைகள் மட்டும் சொல்லிவிட்டு, விடைபெற்றுக்கொண்டவராகும்.

    தந்தைக்கு அடுத்ததாக அவர்களின் மகளையும் காட்டியுள்ளது மேலும் மிகச் சிறப்பாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உணர வேண்டியவர்கள் "உரிமை கலந்த அன்புடன்" உணர்ந்தால் சரி...

    விழாவிற்கே வர இயலாத நட்புகள் வழங்கிய நன்கொடைக்கு ஈடுயினை எதுவும் கிடையாது... அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் அக்டோபர் 17, 2015 10:10 முற்பகல்

      //விழாவிற்கே வர இயலாத நட்புகள் வழங்கிய நன்கொடைக்கு ஈடுயினை எதுவும் கிடையாது... அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல...//

      அடியேனும் இதில் ஒருவன் என்பதால், இதனை உணர்ந்து இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ள, நம் அருமை நண்பர் Mr. DD Sir அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். - அன்புடன் VGK

      நீக்கு
  3. புதுக்கோட்டைச் சந்திப்பு மனநிறைவு தருவதாய் அமைந்தது. திறமைமிகு அணியின் சலிக்காத உழைப்பால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழாக்குழுவினருக்கு மீண்டும் மனமார்ந்த பாராட்டுகள். நன்றிகள். டெல்லி நண்பர்களுக்கென பதிவர் கையேட்டின் மேலும் இரண்டு பிரதிகளை வாங்குவேன். டெல்லி திரும்பியதும் பணம் அனுப்புவேன். இப்போது சுற்றிக்கொண்டிருப்பது பெங்களூரில்.
    -ஏகாந்தன் , டெல்லி

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா

    எடுத்த காரியம் சிறப்பாக நடைபெற்றது மிக்க மகிழ்ச்சி ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் சந்திப்பு திறம்பட நடைபெற உழைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  6. @ ஏகாந்தன்
    இப்போது சுற்றிக் கொண்டிருப்பது பெங்களூரில் என்றால் அங்குதான் நான் வசிக்கிறேன் இயன்றால் வருகை தரலாமே என் தொலை பேசி எண் 080/28394331

    பதிலளிநீக்கு
  7. Tamil font problem.
    Thanks for invitation. Will try

    பதிலளிநீக்கு
  8. உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேட்டை பெறுவது எப்படி? என்ன விலை? யாருக்கு பணத்தை அனுப்பி வைக்க வேண்டும் போன்ற விபரங்கள் தேவை. என்னுடைய மின்னஞ்சல் முகவரி linuxkathirvel.info@gmail.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இணைப்பில் விளக்கங்கள் உள்ளன :- http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_15.html

      நன்றி ஐயா...

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...