புதுக்கோட்டை பதிவர் திருவிழாவுக்கு
வருவோருக்கான வழித்தடம் -
வருவோருக்கான வழித்தடம் -
புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கான மேப்:
பழைய பேருந்து நிலையத்திலிருந்து செல்வதற்கான மேப்:
(1) பேருந்தில் வருவோர் கவனத்திற்கு -
தஞ்சை, திருச்சியிலிருந்து பேருந்தில் வருவோர்
இறங்கவேண்டிய இடம் - புதிய பேருந்து நிலையம்தான். 'கொஞ்சம் முன்னால் இறங்கி நடக்கலாமே?' என்று நினைப்போர், புதிய பேருந்து நிலையத்திற்கு முந்திய நிறுத்தமான அரசு தலைமை மருத்துவ மனையில் இறங்கி பழைய பேருந்து நிலையம் வழியாக ஆலங்குடிச் சாலையில் இருக்கும் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்திற்கு வந்துவிடலாம்.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிய இரட்டைச் சாலையில் சுமார் 200மீ. தொலைவில பழைய பேருந்து நிலையம். அதைக்கடந்து அதே திசையில் சுமார் 150மீ.தூரம் கடந்தால் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம். மொத்தத்தில், புதிய பேருந்துநிலையத்திலிருந்தே நடந்து போகும் தூரம்தான் (சுமார் அரை கி.மீ.)
மதுரையிலிருந்து வருவோர் இறங்க வேண்டிய இடம் - பழைய பேருந்துநிலையம் இங்கிருந்து நிகழ்ச்சி நடக்குமிடம் கிழக்கே போகும் சாலையில் 250மீட்டர். (புதியபேருந்து நிலையம் போனாலும், அங்கிருந்து மீண்டும் பழைய பேருந்து நிலைய வழியாகத்தான் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்திற்கு வரவேண்டும் எனவே, மதுரையிலிருந்து வருவோர், புதிய பேருந்து நிலையத்திற்கு முந்திய பழைய பேருந்து நிலைய நிறுத்தத்திலேயே இறங்கி எளிதாக வந்துவிடலாம்.)
“இல்லை நான் நகரப்பேருந்தில் வரணும்னு நினைக்கிறேன்” அப்பிடிங்கிறவங்க - புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலைய வழி ஆலங்குடி, அறந்தாங்கி போகும் நகரப் பேருந்தில் ஏறி “பேராங்குளம்” அப்படிங்கிற நிறுத்தத்துல இறங்கி மேற்கு நோக்கி நடந்தால், 50மீட்டர் தூரம்தான் ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம்.
“நா ஆட்டோவுல வந்துடுவேன்”-அப்பிடிங்கிறவங்க, புதிய பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் மன்றம் 50ரூ. அல்லது
பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30 அதிகபட்சம் 40ரூ. தந்தால் போதும். (ஆனால் இது நடைபழகும் தூரம்தான்)
(2) தொடர்வண்டி(ரயில்)வழி வருவோர் கவனத்திற்கு -
ரயில் நிலையம் ஊருக்கு வெளியில் இருப்பதால், அங்கிருந்து
புதிய பேருந்து நிலையம் வந்துதான் வரவேண்டும். ஒவ்வொரு முக்கியமான ரயில் வருகையின் போதும் புதிய பேருந்து நிலையம் வருவதற்கான நகரப்பேருந்து இருக்கும்.
(3) மகிழ்வுந்து (கார்)வழி வருவோர் கவனத்திற்கு - பேருந்து மற்றும் மகிழ்வுந்து வழியாக வருவதில் பெரிய தூர வேறுபாடு இல்லை என்பதால் பேருந்து வழியிலேயே வரலாம். எனினும், திருச்சியிலிருந்து வருவோர் திருக்கோகர்ணம் அருங்காட்சி யகத்தில் -பேருந்து வழியில் பிரிந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, 4சாலைத் திருப்பத்தில் தென்புறச் சாலையில் திரும்பி, மகளிர் கல்லூரி வந்து -புதிய பழைய பேருந்து நிலையங்களைக் கடந்து அதே நேர்ச்சாலையில் நேராக மக்கள் மன்றம் வந்துவிடலாம்.
அப்பறம்..(4), (5) விமான நிலையமோ கப்பல் துறைமுகமோ இன்னும் புதுக்கோட்டை நகருக்கு வரல.. என்பதால்... சரி... சரி.. வந்து சேருங்க வரவேற்கக் காத்திருக்கிறோம் -- அன்புடன் விழாக்குழு.
-------------------------------------------------------------------
வேண்டுகோள் (1)
(தொடரும்)------

முன்பதிவு செய்தோ, செய்யாமலோ, விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரையும், தேநீர், குறிப்பேடு, பேனா அடையாள அட்டையுடன் சுவையான மதிய உணவும் தந்து உபசரிக்க விழாக்குழு காத்துள்ளது.
ஆனால் –
முன்னதாக, படிவம் நிரப்பி அனுப்பி, வருகையை உறுதி செய்தவர்க்கு மட்டுமே வலைப்பதிவர் கையேடும் அதனோடு தரப்படும் கைப்பையும் வழங்கப்படும். (இவர்களின எண்ணிக்கை, சரியாக 232 பேர் எண்ணிக்கையை உயர்த்த இயலாது)
பதிவு செய்யாத வருகையாளர்கள் தாராளமாக வரலாம். ஆனால், அவர்கள், முன்னதாகத் தெரிவிக்காத காரணத்தால், கையேடு, கைப்பையை எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறோம். இவற்றை முன் திட்டமின்றிச் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்.

விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாதவரும், “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015”-ல் இடம் பெறலாம். ஆனால், விழாவுக்கு நேரில் வந்து கலந்துகொள்வோர்க்கு மட்டுமே வலைப்பதிவர் கையேடு, விழா நினைவுப் பரிசாக அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது என்பதையும் முன்கூட்டியே தெரிவித்திருக்கிறோம்.
கையேட்டுக்குத் தமது வலை பற்றிய தகவல் படிவத்தை முன்பே அனுப்பாமல் விழாவில் கலந்துகொள்ள வருவோர்க்கோ, படிவம் அனுப்பியும் விழாவுக்கு வராதவர்க்கோ இலவசக் கையேடு வழங்கும் திட்டமில்லை என்பதையும் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம்.
விழாச் செலவுக்கு ரூ.5,000 மற்றும் அதற்கும் மேலாக நன்கொடை தந்த புரவலர்களுக்கு மட்டும், அவர்களது முகவரிக்கோ அல்லது அவர்கள் விரும்பும் (இந்திய) முகவரிக்கோ கையேடு ஒன்று அன்புடன் அனுப்பி வைக்கப்படும்.

மற்றவர்கள், விரும்பினால், விழா அரங்கில் விழாச்சலுகையாக ரூ.150 மதிப்புள்ள நூலை ரூ.100க்கு வாங்கிக் கொள்ளலாம்.
மற்றபடி -
விழா நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால்...
விழாவுக்கு வரும் நண்பர்கள் தாமாகத் தரும் நன்கொடை எதுவாயினும் விழாக்குழு அன்போடு ஏற்றுக் கொள்ளும். அதற்கு, சீருடை அணிந்த விழாக்குழுவினர் வழிகாட்டுவார்கள். நன்றி.
------அடுத்து.. ஒரு முக்கியமான வேண்டுகோள் (தொடரும்)------
நான் ஹெலிகப்படரில் வரலாம் என நினைத்து இருந்தேன் ஆனா நீங்க அதற்கு வழி சொல்லாததால் விழாவிற்கு வரவில்லை
பதிலளிநீக்குஅண்ணா..கூட்டாஞ்சோறு செந்தில்குமார் பதிவில் தூரங்களையும் எழுதியுள்ளார் அதையும் இந்த வலையில் இணைத்துக்கொள்ளலாம்...
பதிலளிநீக்குநான் நடந்தே வந்து விடுவேன். எங்கிட்ட கொஞ்சம் காசு கம்மி.
பதிலளிநீக்குமரியாதைக்குரிய பழனி கந்தசாமி ஐயா, வணக்கம்.தங்களது பக்குவமான சந்திப்பு எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுங்க...
நீக்குஇன்று மாலை சந்திப்போம்...
பதிலளிநீக்குவருகிறேன் விளம்பரம் முயற்சி அடுத்த பதிவர் சந்திப்பில் கடும் உழைப்பில் உள்ள விழா ஏற்பாடு குழுவினர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குவருகிறேன் விளம்பரம் முயற்சி அடுத்த பதிவர் சந்திப்பில் கடும் உழைப்பில் உள்ள விழா ஏற்பாடு குழுவினர்களுக்கு நன்றி
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி அய்யா! விழாவுக்கான நிகழ்ச்சி நிரலை (நேரம்) வெளியிட்டால் வலைப்பதிவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள உதவும்.
பதிலளிநீக்குவழிகாட்டலுக்கு நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்!
பதிலளிநீக்குவலைப் பதிவர் திருவிழா 2015
நிகழ்வுக்கு வர முடியாத குழலின்னிசை வலைப் பூ
பதிவரான எனக்கு புதுவை வேலு/யாதவன் நம்பி கையேடு (வலைப்பதிவர்கள் முகவரியுடன் கூடிய குறிப்பு நூல்)
அவசியம் தேவைப் படுகிறது. தாங்கள் தயவுகூர்ந்து எனது முகவரிக்கு அனுப்பி வைக்க மிகவும் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். அதற்குண்டான அஞ்சல் செலவை கையேடு கிடைக்கப் பெற்றதும் அனுப்பி வைக்கின்றேன்.
விழாக் குழுவினர் ஆவன செய்ய வேண்டுகிறேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான வழி(காட்டல்!)
பதிலளிநீக்குபுதிதாக வருவோர்க்கு சரியான வழிகாட்டல்
பதிலளிநீக்கு