வெள்ளி, 6 நவம்பர், 2015

வெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

புதுகை வலைப் பதிவர் திருவிழா-2015  சிறப்பாக நடந்ததில்,நமது வெளிநாட்டு நண்பர்களுக்குச் சிறப்பான இடமுண்டு. அவர்களின் உதவி மற்றும் உற்சாகப் பதிவுகளுடன் அங்கிருந்தே செல்பேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய நண்பர்களையும் மறக்க முடியுமா என்ன?!

ஆனால்அத்தகைய நண்பர்கள் விழாவில் வெளியிடப்பட்ட தமிழ் வலைப்பதிவர் கையேடு 
நூலை இன்னும் பார்க்கவில்லையே என்பது அவர்களைப் போலவே எங்கள் குழுவிற்கும் வருத்தமாகவே உள்ளது.

அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது,பின்வரும் நமது நண்பர்கள் தொடர்பில் வந்தார்கள். நானும் அவர்கள் கருத்துகளைக் கேட்டேன். அவர்களும் தெரிவித்தார்கள்...அதனால்...

வெளிநாட்டு நண்பர்கள் கையேடு பிரதிகளைப் பெற்றுக் கொள்ள... ஒரு யோசனை-
அருகில் (பக்கத்து நாடுகளில் இருப்போர்) இவர்களிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறோம். பெரும்பாலும் அடுத்துள்ள நாட்டுக்கான அஞ்சல் செலவை அவரவரே தரலாம்.  அதிகமிருக்காது. இந்தியாவிலிருந்து பெற்றால் அதிகமாகும். பின்வரும் நண்பர்களும் இதற்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்

யார்யாருக்கு எத்தனை கையேட்டுப் பிரதிகள் தேவை என்பதைப் பின்வரும் என் மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் இந்த  நமது நண்பர்களுக்குத் தெரிவித்து அவர்களுக்கு இங்கிருந்து மொத்தமாக அனுப்பி அவர்கள் வழியாக நீங்கள் நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

என்ன நண்பர்களே இதற்கு நீங்கள் நிச்சயமாக உதவுவீர்கள் என்று நம்புகிறேன். உதவ வேண்டுமென்று அன்புடன் உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த 
நம் அன்புறவானவர்களின் பதிவுகளையும் பாருங்கள்-

அமெரிக்கா -சகோதரர் விசு - http://vishcornelius.blogspot.com/ 
ஜெர்மனி -சகோதரி இளமதி - http://ilayanila16.blogspot.com/

இவர்கள் இருவரும் அவரவருக்கு அருகிலிருக்கும் நாடுகளில் வாழும் நண்பர்கள்கையேட்டுப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள உதவுவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பாரிஸ் – சகோதரர் நேசன்- http://www.thanimaram.org/ 
இவர் ஏற்கெனவே 75பிரதிகளை எடுத்து வையுங்கள் அதற்கான இந்தியத் தொகையை வங்கிக் கணக்கில் இப்போதே செலுத்திவிடுகிறேன்“ எனச் சொன்ன போதிலும்நான்தான் தடுத்து வைத்திருக்கிறேன். யார்யார் பிரதியை வாங்க விரும்புகிறார்கள் என்று தெரிந்து அதன்பின் அதற்குரிய தொகையை அனுப்பலாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

நண்பர்களே! நீங்கள் நினைத்தால் இவர்கள் போலும் நண்பர்களின் பெருந்தன்மைக்கு நம் அன்பைத் தெரிவிக்கும் வழியாக கையேட்டுப் பிரதிக்குப் பணமனுப்பி முகவரியும் தந்து உதவலாம்.

கணக்குப் போட்டுப் பார்த்தால் வெளிநாட்டு நண்பர்கள்இந்திய ரூபாயில் ஒரு பிரதி சற்றேறக்குறைய 350ரூபாய் தந்து வாங்கிவிட மாட்டீர்களா
(அமெரிக்கா கனடா நாட்டிலிருப்போர் மட்டும் ஒரு பிரதிக்கு ரூ.450 தர வேண்டியிருக்கும். இதுவே தனியாக ஒன்று அல்லது இரண்டு பிரதிகள் மட்டும் இங்கிருந்தே அனுப்ப குறைந்தது 2000ரூபாய் ஆகிறதுஇதுவே 4பிரதிகள் எனில் ரூ.2,500தான் ஆகிறது)
இந்தக் கணக்கைப் பாருங்கள் 

அமெரிக்கா,கனடா நாடுகளுக்கு 4பிரதிரூ.2,500,
     40பிரதிரூ.16,000 60பிரதி-ரூ.20,000
(இதில் கவனியுங்கள் நேரடியாக இங்கிருந்து அனுப்பினால் ஒரு பிரதியே ரூ.625ஆகிறது ஆயினும் ஒருபிரதி அனுப்ப இயலாது காரணம் குறைந்தபட்ச கட்டணமே ஆயிரத்திற்குமேல்! ஆனால்அதிகமான பிரதிகளை அனுப்ப நேரும்போதுதான் சராசரியாக ஒரு பிரதி முறையே ரூ.400, ரூ.335 என்று  குறைகிறது. ஆக மொத்தமாக அனுப்பி திரு விசு வழியே பெறுவதே சிக்கனமானது. என்ன? அங்குள்ளவர் அனைவருமாகக்குறைந்தது 40பிரதியாவது வாங்க உறுதி தர வேண்டும். அப்போது தான்திரு விசு அவர்கள் முகவரிக்கு அனுப்ப முடியும். தமிழ்ப்பதிவர் நண்பர்கள் தமக்கு மட்டுமல்ல, அங்குள்ள தமிழ்ப்பதிவர், இலக்கிய அமைப்புகள், தமிழறிஞர்கள், இதழ்கள் என உரியவர்க்கு அன்புடன் வாங்கித் தரலாமே?)

ஜெர்மன்,பிரான்சு,சுவிஸ் நாடுகளுக்கு 4க்குரூ.2,000,
40பிரதிரூ.13,000 60பிரதி-ரூ.18,000
(இங்கும் அவ்வாறேஇங்கிருந்து 4பிரதி அனுப்பினால்ஒரு பிரதி ரூ.500ஆகிறது ஆனால் ஒரு பிரதிக்கான கட்டணமே அதிகமாகிறது. மொத்தமாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் சுமார் 40பேர் அல்லது 2,4 பிரதிகள் என ஒரு15 -20பேராவது வாங்கிக் கொள்ள உறுதி தந்தால் சகோதரி இளமதிக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் அவரிடம் ரூ.325 (அல்லது அதிகமானோர் கேட்டால் ஒருபிரதிக்கு 300ரூ.வீதம்) தந்து பெற்றுக் கொள்ளலாம். எளிய சிக்கனமாகும்.

எனவேவெளிநாடு வாழ் தமிழ் வலைப்பதிவர்கள்-ஒவ்வொருவரும் 4அல்லது 8கையேடுகளை வாங்கிடப் பொறுப்பேற்றுக்கொண்டால்புதுக்கோட்டையில் அடுத்த கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவை இன்னும் தெம்பாக சிறப்பாக நடத்துவோம். 

அப்போது ஒரு வலை-இலக்கிய மலர் வெளியிடுவதாக இருக்கிறோம்... இப்போதே சொல்லிவைக்கிறோம்... தொழில் நுட்ப விளக்கங்கள், கட்டுரை-கவிதை, கவிதை ஓவியங்களுடன் கூடிய வலைப்படைப்புகள் என, சிறப்பான மலராகக் கொண்டு வர ஆசைப்படுகிறோம்! படைப்புகள் அனுப்ப தயாராகிக் கொள்ளுங்கள்...!   

இந்தப் பக்கம் -இலங்கை,சிங்கை,மலேசிய நாடுகளில் வாழும் வலைநண்பர்கள் நூல்பெற இவ்வாறு யாரும் பொறுப்பேற்றுக் கொள்வதாக இருந்தால் அன்புடன் தெரிவியுங்கள். அனுப்பும் செலவைக் கேட்டுச் சொல்வேன். அதன்பின் உங்கள் பகுதிக்கும் வருவோம்.

எல்லாவற்றுக்கும் மின்னஞ்சல் அல்லது பின்னூட்டம் எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.

எனது மின்னஞ்சல்  muthunilavanpdk@gmail.com 
(E.mail   Subject பகுதியில் பதிவர் கையேடு தேவை“ என்று குறிப்பிட்டால் அவற்றைத் தனியே எடுத்து, பதில் அனுப்ப, நண்பர்களுக்கும் தெரிவிக்க உதவியாகும்)

எதிர்பார்ப்புடன்,
நா.முத்துநிலவன்,
பதிவர் விழாக்குழு-2015,
கணினித் தமிழ்ச்சங்கம்புதுக்கோட்டை.
எனது செல்பேசி எண்  +91 9443193293

1 கருத்து:

  1. இலவசமாக மின்னூலாகவும் தருவதற்கு வாய்ப்பிருந்தால் நல்ல வரவேற்பு இருக்குமே. இலவசமாக வெளியிட்டாலும் உதவும் நல்மனங்கள் புத்தகமாகவும் வாங்கிக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...