சனி, 3 அக்டோபர், 2015

வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! பரிசு ரூ.10,000

இந்தப்போட்டியில் கலந்துகொள்ள
வலைப்பக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை
மின்னஞ்சல் இருந்தால் போதும்!


செய்ய வேண்டியது என்ன?http://bloggersmeet2015.blogspot.com/ எனும் நமது இணைய தளத்திலிருக்கும் →"போட்டிக்கு வந்த படைப்புகளை"← படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்" என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15 பேரைத் தேர்வு செய்ய வேண்டும். முதல் பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு! விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும்.
---------------------------------------
இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கும்
தினமணி நாளிதழுக்கு நன்றி (04-10-2015 திருச்சிப்பதிப்பு)
----------------------------------------------


போட்டிக்கான விதிமுறைகள் :

(01) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். ஏற்கனவே தமிழ் மின் இலக்கியப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்... மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address) இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம். கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்தில் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப்படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

(02) ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். (ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை, (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை இதே வரிசையில் தெரிவித்து பதினைந்து பரிசுக்கும் (5x3=15) தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது. இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை.

(03) ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது.

(04) வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

(05) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம்.

(06) இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

(07) விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

(08) வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல் முகவரி இரண்டும் இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

(09) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் :

இதனைப் பார்க்கும் நமது வலைப்பதிவர்கள், குறிப்பாகப் போட்டியாளர்கள் அனைவரும் மற்றும் நண்பர்களும் 
தத்தம் வலைப்பக்கங்களில் இதனைப் பகிர்ந்தும் தொடர்புள்ள செய்தித்தாள் ஊடகங்களில் வெளியிடச் செய்தும் பலரும் இப்போட்டியில் பங்கேற்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்

---விழாக்குழு---


பி.கு.
இ்ந்தப் போட்டிக்கான தொகையை மட்டுமின்றி விழாச் செலவுக்கும் மனமுவந்து தருவதாகச் சொல்லி,
விழா அரங்கில் தவிர வேறெங்கும் தன் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட "அந்த" நல்ல உள்ளத்திற்கு நன்றி


20 கருத்துகள்:

 1. விழாக்குழு : அசத்துங்க... நன்றி...

  அசர வைப்போம்...

  இதோ தனிப் பெட்டி தயாராகிக் கொண்டிருக்கிறது...

  பதிலளிநீக்கு
 2. விண்ணஞ்சல் என்று ,மின்னஞ்சலை சொல்லலாமே :)

  பதிலளிநீக்கு
 3. இந்தப் போட்டிக்கான தொகையை மட்டுமின்றி விழாச் செலவுக்கும் மனமுவந்து தருவதாகச் சொல்லி, விழாஅரங்கில் தவிர வேறெங்கும் தன்பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட ”அந்த“ நல்ல உள்ளத்திற்கு எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. ஆகா! அடுத்தடுத்த போட்டிகளை அறிவித்து அசத்துகிறீர்கள்! பதிவுகள் பலரைச் சென்றடைய இப்போட்டி உதவும்.

  பதிலளிநீக்கு
 5. இந்தப் போட்டிக்கான தொகையை மட்டுமின்றி விழாச் செலவுக்கும் மனமுவந்து தருவதாகச் சொல்லி, விழாஅரங்கில் தவிர வேறெங்கும் தன்பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட ”அந்த“ நல்ல உள்ளத்திற்கு எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. போட்டிக்கே ஒரு போட்டியா
  இதனைத்தான்
  போட்டாபோட்டி என்பார்களோ


  போட்டிற்கும் விழாசெலவிற்கும்
  மனமுவந்து நிதி அளிக்க முன் வந்த
  தமிழ் உள்ளத்திக்கு என் வாழ்த்துக்களும்
  நன்றியும்

  பதிலளிநீக்கு
 7. போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிகளில் மாற்றம் தெரிகிறது. போட்டிகள் இரண்டு நாட்கள் நீட்டிப்பு என்னும் பதிவில் 7-ம் தேதி தளத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றிருந்தது. இதில் 10-ம் தேதி என்றிருக்கிறது. ஏன் இந்தக் கன்ஃப்யூஷன். எது சரி என்று தெரிவிக்க வேண்டுகிறேன் போட்டிக்கு போட்டி நிதி அறிவித்ததனால் இந்த மாற்றமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். எந்தக் குழப்பமும் இல்லை. முதலில் போட்டிகளை இரண்டுநாள் தள்ளி வைக்கும்போது 7ஆம்தேதி முடிவுகள் வரும் என்று சொன்னதும் உண்மை. பிறகு விமரிசனப்போட்டி வந்தபிறகு “நடுவர் முடிவுகளுடன் ஒத்துப்போகும் முடிவு“ என்பதால் அதையும் தக்ளி வைக்க நேர்ந்தது. “போட்டிக்கு நிதி வந்ததால் வந்த மாற்றமா?” என்கிறீர்கள் இல்லை..வலைப்பபதிவர் தாண்டியும் வலைப்பக்கம் பார்க்க வந்த வந்த வசதி என்கிறோம். நமக்குள் பேசிக்கொண்டே இருப்பதைவிட மற்றவரை வலைப்பக்கம் வரவைப்பதுதானே நம் நோக்கம்? அதுதான் இந்த விமர்சனப் போட்டி. இதில் கன்ஃப்யூஷன். எதுவும் இல்லை.

   நீக்கு
 8. அருமை சகோ..

  இதை ப்லாகில் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிப்போட்டுக்கலாமா..?

  யார் அந்த நல்ல உள்ளம். ? வாழ்க வாழ்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோதரி நல்லாப் போடுங்க... எல்லாரையும் போடச் சொல்லி நம் நண்பர்களுக்கெல்லாம் அனுப்புங்க.. முடிந்தவரை வலைப்பதிவர் தாண்டியும் இந்தச் செய்தி போனால் வலைப்பக்கம் பலரும் வருவர்

   நீக்கு
 9. போட்டிகள் கலகலப்பூட்டுகின்றது.நன்கொடை தரும் அந்த நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. போட்டியைத் தொடர்ந்து போட்டியா? வாழ்த்துக்கள். மண்ணஞ்சல் சொல்லை அதிகம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. என்ன வளம் இல்லை? நம்ம தமிழ் மொழியில்!....
  தரணி போற்ற இன்னும் வளரட்டும் தமிழ்!,
  மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். கல்தோன்றா,மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான தமிழில் ,சொல்வளம் மிகுந்த தமிழில்,இலக்கியவளம் மிகுந்த தமிழில் எற்கனவே சொற்பெருக்கமிகுந்து பொங்கிவழியும் தமிழில் இன்னும் சொற்பெருக்கமடைவது கண்டு என்னுள்ளம் பேருவகை அடைகிறதுங்க.ஆமாங்க 'மண்ணஞ்சல்' என்பதைத்தாங்க சொல்றேங்க...மின்னஞ்சலைக்கூட விண்ணஞ்சல் என்று கூட சொல்லலாம் என்றுகூட கருத்துப்பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு தமிழ்மீது பெருமை கொள்கிறேன்.
  என அன்புடன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம் -638402

  பதிலளிநீக்கு
 12. இந்திய மன்னஞ்சல் இல்லாதவிடத்து இலங்கை மன்னஞ்சல் தரமுடியுமா? ஆனாலும் தற்பொழுது கட்டாரில் வாழ்கிறேன் ..... பதிலுக்கு காத்திருக்கிறேன் .
  நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனாமதேயர்களைத் தவிர்க்கத்தான் இந்த ஏற்பாடு நண்பரே. மற்றபடி தங்களுக்குத் தமிழ்நாட்டில் முகவரி உள்ள யாருடைய முகவரியும் தரலாம். தவிர்க்க இயலாவிடில் இலங்கை முகவரியே தாருங்கள். போட்டிவிதிகளின் கடைசி (10)விதியைக் கவனப்படுத்துகிறோம்.

   நீக்கு
 13. ஆஉறா,, சும்மா இருந்தாலும் சுகமா மின்னஞ்சல் மண்ணஞ்சல் ( வார்த்தை அருமை ) மூலம் போட்டியில் கலந்து கொள்ள வாய்பளிக்கும் புதுக்கோட்டை மகாராசாக்களே நீவிர் வாழ வாழ்த்தும் அன்பர்... சிவபார்க்கவி, திருச்சி

  பதிலளிநீக்கு
 14. Sema !! Super !! ,அசத்துங்க ..வாழ்த்துகள் அனைவருக்கும் !! :)

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...