சனி, 24 அக்டோபர், 2015

பதிவர்விழா - கவிதை-ஓவியக் காட்சிகள்

எடுத்த கவிதைகள் எல்லாம்
ஓவியமாக எழுதப்படவில்லை,
எழுதிய ஓவியங்களெல்லாம்
இங்கே இடப்படவும் இல்லை
-------------------------------------------------------------


பற்பல பணிகள்-இடர்ப்பாடுகளிடையே 
கவிதைகளைத் தொகுத்துத் தந்த
நமது விழாக்குழுவினர்
கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,
கவிஞர் வைகறை, கவிஞர் மு.கீதா  இவர்களோடு,
இவற்றை வரைவதில் 
ஓவியர்களை ஒருங்கிணைத்த கவிஞர்.ஸ்டாலின் சரவணன், 
ஓவியர் எஸ்.ஏ.கருப்பையா
சு.மதியழகன், ஆர்.நீலா ஆகிய நம்
விழாக்குழுவினர்க்கு நன்றி.
வரைந்தளித்த ஓவியர்கள் 
செல்வநாயகம், கருப்பையா, கண்ணன்,  ராமன், அன்புராஜ், சேரன்,
விஜய், நாகராஜ், ரவி  மற்றும்
எஸ்.ஏ.கருப்பையா 
ஆகியோரின் கலைக் கைகளுக்கு 
நன்றி! நன்றி!!  நன்றி!!!
--------------------------------------------------------------- 
(இவர்களில் விழாவில் இருந்தோரை அழைத்து மேடையிலேயே மரியாதை செய்தோம்)  விழாக்குழுவிலிருந்து  எங்கள் அய்யா
முனைவர் நா.அருள்முருகன் அவர்களது 
ஒரு கவிதை -மேலே-ஓவியமாகியுள்ளது.
-------------------------------------- 
அடுத்த கவிதை ஓவியம்
உண(ர்)வுக்குழுத் தலைவர்
இரா.ஜெயலட்சுமியுடையது
ஆக, இந்த 22இல் இரண்டுதான் 
விழாக்குழுக் கவிஞருடையவை!
மற்றவை நமது பதிவர்களின் கவிதைகள்தாம்.
(இந்த விகிதத்தை விஞ்சிவிடவில்லை
ஏனைய ஓவியங்களும்)
இவையும் இன்னும் வரும்...
------------------------------------------------------- 
ஏற்கெனவே சொன்ன பதிவர் சுயஅறிமுகம்
பரிசுபெற்ற படைப்பாளிகளின் படங்கள்
அடுத்தடுத்து... தொடரும்...
(இடையில் ஒரு மாற்றத்திற்காக இது)
6 கருத்துகள்:

 1. அனைத்தும் அருமை. ஓவியங்களும் கவிதைகளும் ஒன்றையொன்று விஞ்சிக் கொண்டிருந்தன .எனக்கு மிகவும் பிடித்தது ஜெயலட்சுமி அவர்களின் கவிதை . விழாக் குழுவினரின் இந்த புதுமுயற்சிக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கவிதை ஓவியங்கள் அருமை...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. பாவரிகளை வெளிப்படுத்தும் ஓவியங்களா
  ஓவியங்களை வெளிப்படுத்தும் பாவரிகளா
  எல்லாமே அருமை!
  தொடருங்கள்
  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
 4. ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்கு வரும் ஓவியங்கள், ஏற்ற கவிதைகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஓவியமும் கவிதைகளும் காவியங்களாகக் காட்சி தருகின்றன!
  மிக மிக அருமை!

  பதிலளிநீக்கு
 6. நன்றி முரளிதரன் சகோ, குமார் சகோ, யாழ்பாவண்ணன் சகோ, ஜம்பு சார் & இளமதி.

  ஸ்பெஷல் நன்றி - புதுகை வலைப்பதிவர் குழு., முத்துநிலவன் சகோ, டிடி சகோ, ப்ரகாஷ் சகோ, மற்றும் வலைப்பதிவ சகோதரிகள் & புதுகை வலைப்பதிவர் மாநாடு :)

  மற்றும் சிறப்பாக சிற்பம் போல் எங்கள் கவிதைகளை ஓவியமாய்ச் செதுக்கிய உயர்வான கரங்களுக்கும் அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...