ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

பதிவில் முதலிடம் சென்னை

“வலைப்பதிவர் திருவிழா - 2015” நிகழ்வில் கலந்துகொள்ளும் வலைப்பதிவர் பட்டியல் தினமும் வெளியிடப்படும்.பார்க்க -
http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

இதில், விழாவை நடத்துகின்ற புதுக்கோட்டை மாவட்ட நண்பர்கள் -நாம் நடத்துநர் அல்லவோ? எனும் வினாவுடன் -எண்ணிக்கையில் பற்பலராக இருந்தும், பதிவுசெய்யாமல் வேலையை மட்டும் செய்து வருகின்றனர்.


அதனால், இப்போதைக்கு பதிவுசெய்த பதிவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, நமது முன்னோடி மாவட்டமான சென்னை என்பதில் எங்களுக்கும் பெருமைதான்.
சென்னை மாவட்டப் பதிவர்களுக்கு வணக்கமும்  
எங்கள் விழாக்குழுவின் 
பொறாமை கலந்த வாழ்த்தும் உரித்தாகிறது!

ஆனாலும் விரைவில் வேறு எந்த மாவட்டமாவது இதில் முந்திக்கொள்ளும் முன்பாக புதுக்கோட்டை மாவட்டப் பதிவர்கள் விரைந்து தம் பெயரைப் பட்டியலில் பதிவு செய்து விடுவார்கள் என்று நம்புகிறோம்...

எனவே... சென்னை நண்பர்கள் நம் வழிகாட்டிகள்...முதலிரு பதிவர் சந்திப்பைச் சிறப்பாக நடத்தியவர்கள் எனும் வகையில் அவர்களுக்கு நம் வணக்கத்தைச் செலுத்துகிறோம்.

அப்ப நீங்க...?(புதுக்கோட்டை)
அப்ப நீங்க...?(வெளிமாவட்டங்கள்)
அப்ப நீங்க...?(வெளிமாநிலங்கள்)
அப்ப நீங்க...?(வெளிநாடுகள்)

மாவட்ட -மாநில -வெளிநாடு-வாரியாகத் தொகுத்தளிக்கும் பெரிய பணியைத் தன் மெய்வருத்தம்  பாராமல் செய்துவரும் “வலைச்சித்தர்” திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி
உடன் ஒரு வேண்டுகோள் - இந்தத் தளத்திலும் அந்தப் பட்டியலை ஏற்றிட உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
--------------------------------------------------------------------- 

10 கருத்துகள்:

 1. தொடர்கின்றோம் ஐயா! அருமையான ஏற்பாடுகள்!

  பதிலளிநீக்கு
 2. ஆகா
  தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல
  வலைப் பூவின் தலைநகரும்
  சென்னைதான் போலிருக்கிறது
  சென்னைப் பதிவர்களை வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 3. இந்த தளத்திலும் செய்து விடலாம் ஐயா...

  பதிலளிநீக்கு
 4. ஆஹா! புதுக்கோட்டை நண்பர்களே பணிகளுக்கிடையில் வருகையைப் பதிவு செய்யுங்கள். சென்னை நண்பர்களின் பங்களிப்பு போற்றத்தக்கது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. பதிவு செய்துவிடுகிறோம் அய்யா

  பதிலளிநீக்கு
 6. பதிவு செய்கின்றோம்...சார்

  பதிலளிநீக்கு
 7. முதலிடம் பிடித்த சென்னை மாவட்டப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. மாநாடு நமது வாழ்த்துகள் எமது
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...