ஞாயிறு, 1 நவம்பர், 2015

வலைப்பதிவர் விழா 2015 - வரவு செலவு கணக்கு அறிக்கை

வணக்கம். வலைப்பதிவர்விழாவின் வரவுசெலவு அறிக்கையை, நிதிப்பொறுப்பாளர் சகோதரி மு.கீதா தயாரித்து விழாக்குழுவின் சார்பாக வெளியிட்டுள்ளார். அதனை இங்கு நானும் பகிர்கிறேன். அவரது உழைப்பும், ஈடுபாடும் விழா வெற்றிக்கு அடிப்படையாக நின்றதை அனைவரும் அறிவர்.


விழாவில் நன்றியுரை -
நிதிப்பொறுப்பாளர் மு.கீதா
--------------------------------------------------------------
விழாக்குழுவினர் அனைவரும் போட்டிபோட்டு உழைத்தாலும், இந்த விழாவின்வெற்றி முகத்திற்கு இரண்டு கண்கள் உண்டெனில் அவை இரண்டும்  நிதிப்பொறுப்பாளர் மு.கீதா, உணவுக்குழுத் தலைவர் இரா.ஜெயலட்சுமி இருவருமே ஆவர்.  இவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 

விழாக்குழுவின் ஏனைய பொறுப்பாளர்களின் கால நேரம்பாராத கடும் உழைப்பு சொல்லில் விவரிக்க இயலாது. அதன் அடிப்படையாக சமூக உணர்வுடன் கூடிய அன்பும், நமது மரபார்ந்த பண்பும் இருந்தது.

பதிவர்விழா-நம் குடும்பவிழா!
எங்கெங்கோ இருந்துகொண்டு, இந்த விழாவைத் தம்வீட்டு விழாவைப் போலெண்ணி, எழுதி-பணம் அனுப்பி-மற்றவர் ஈடுபாட்டை உசுப்பிவிட்டு எங்களை மறைமுகமாக ஆட்டுவித்த நம் பதிவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல? அவர்களை யெல்லாம் வணங்கி இந்த வரவுசெலவு அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம்.
நன்றி - http://velunatchiyar.blogspot.com/2015/10/2015_18.html 
-------------------------------------------------- 

               வங்கிக் கணக்கு வழி புரவலர் நிதி

வ.
எண்
தேதி
                  பெயர்
                 திருமிகு
தொகை
ரூபாய்
1
14.9.15
இளமதி ஜெர்மனி
5,000
2
14.9.15
பாரதிதாசன் பிரான்சு
5,000
3
16.9.15
மரு..உமர் பாரூக் -தேனி
5,000
4
16.9.15
புதுவை வேலு/யாதவன்நம்பி-பிரான்சு ரூ100பிடித்தம்  
11,010
5
18.9&,11.10.15
ஜோசப் விஜு-திருச்சி [1,000+5,000]
6,000
6
22.9&,3.10.15
பசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]
10,000
7
23.9.15
கர்னல். பா. கணேசன் -சென்னை
5,000
8

பெயர் குறிப்பிடாதவர்?
11,400
9
27.9.15
அம்பாளடியாள் -சுவிஸ்    
10,000
10
30.9.15
இனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]
5,000
11
8.10.15
மதுரைத்தமிழன்[அவர்கள் உண்மைகள்]
5,166
12
13.10.15
பரிவை சே.குமார்
5,000


கூடுதல்
83,576
   வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.
             ----------------------------------------------


             வங்கிக்கணக்கு வழி-நன்கொடை விவரம்

வரிசை
எண்
நாள்
      பெயர்
     திருமிகு
தொகை
ரூ
1
18.8.15
ஞா.கலையரசி-புதுச்சேரி
1,000
2
20.815
பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்
1,000
3
1.9.15
தமிழ்.இளங்கோ-திருச்சி
2,000
4
4.9.15
எங்கள் பிளாக் கௌதமன்,ஸ்ரீராம்-சென்னை
500
5
5.9.15
பி.எஸ்.டி.பிரசாத்-சென்னை
500
6
9.9.15
புலவர்.இராமானுசம்-சென்னை
1,000
7
9.9.15
ஜி.எம்.பாலசுப்ரமணியன்-பெங்களூர்
1,000
8
10.9.15
வினோத்-கிரேஸ்-அமெரிக்கா
1,000
9
14.9.15
யூஜின் ப்ரூஸ்
500
10
14.9.15
நடனசபாபதி-சென்னை
1,000
11
14.9.15
சென்னை பித்தன்
1,000
12
14.9.15
இராய. செல்லப்பா-காஞ்சிபுரம்
1,234
13
14.9.15
மருது பாண்டியன்
100
14
14.9.15
பொன். தனபாலன்-திண்டுக்கல்
1,000
15
14.9.15
செல்வராஜூ துரைராஜூ-குவைத்
3,000
16
15.9.15
வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சி
500
17
15.9.15
எஸ்.ஞானசம்பந்தம்-புதுச்சேரி
1,000
18
16.9.15
கீதா மதிவாணன் -ஆஸ்திரேலியா
1,000
19
16.9.15
சூரியநாராயணன்[சுப்பு தாத்தா]-சென்னை
500
20
18.9.15
மணவை ஜேம்ஸ்-திருச்சி
1,000
21
18.9.15
S.P. செந்தில் குமார்-மதுரை
500
22
18.9.15
கோவிந்தராஜூ -கரூர்
1,001
23
19.9.15
துளசிதரன்,கீதா-சென்னை
2,000
24
22.9.15
தளிர் சுரேஷ்-திருவள்ளூர்
1,000
25
23.9.15
ஆர்.வி.சரவணன்- குடந்தை
1,000
26
23.9.15
காமட்சி மகாலிங்கம் -மும்பை
1,000
27
25.9.15
இராமமூர்த்தி தீபா-மதுரை
1,000
28
25.9.15
பி.  அனுராதா
1,500
29
29.9.15
.பு.ஞானபிரகாசன் சென்னை
150
30
30.9.15

ஜி.ரமேஷ் உமா-சென்னை
1,000
31
6.10.15
சித்தையன் சிவகுமார் -மதுரை
501
32
9.10.15
முகம்மது நிஜாமுதீன்-
1,000
33
15.10.15
ராஜ்குமார் ரவி -கோவை
500
34
15.10.15
ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்
1,000
35
17.10.15
சுஜீத்[வெங்கட் நாகராஜ்]
1,000
36
20.10.15
உலகநாதன்
500
37
23.10.15
பொன்னுசாமி
250
37
27.10.15
கவிசெங்குட்டுவன்
250
38
28.10.15
கரூர்பூபகீதன்[.பூபாலகிருஷ்ணன்]
250


கூடுதல்
35,236


வங்கி கணக்கு- [போட்டிவிளம்பரம் / நூல் வெளியீடு]வரவு

வ.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூபாய்
1
4.9.15
கரந்தை ஜெயக்குமார் 
நூல் வெளியீடு
5000
2

ரூபன் மலேசியா
நூல் வெளியீடு திண்டுக்கல் தனபாலன் வழி
5000
3
16.9.15
விசு ஆசம்[துளசி கீதா திண்டுக்கல் தனபாலன் மற்ரும் வெஸ்டர்ன் யூனியன் வழியாக]
விளம்பரம், போட்டிகளுக்கு 10,000+18,781
28,781
4
18.9.15
மூன்றாம் சுழி துரை அப்பாதுரை
8,125
5
21.9.15
 தமிழ்களஞ்சியம்-வெற்றிக் கேடயம் 
15,000
6
2.10.15
ஆல்பிரட் தியாகராஜன்- நியூயார்க்
3,000
7
9.10.15
விஜய் கார்த்திக் அமெரிக்கா
3,000
8
12.10.15
தமிழ் இணையக்கல்வி கழகம்- போட்டி
50,000
9
29.10.15
பாரத்கல்லூரி -தஞ்சாவூர்
10,000


கூடுதல்
1,27,906
வங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு


வ.எண்
தேதி
பெயர்
தொகை
1
15.10.15
கலையரசி
3,000
2
21.10.15
எஸ்.பி. செந்தில் குமார்
1,000
3
16.10.15
ஜெ.சிவகுரு தஞ்சை
500
4

தளிர் சுரேஷ்
1,200


கூடுதல்
5,700


வங்கிக்கணக்குவழி மொத்தவரவு

.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கி பிடித்தம்
ரூ
மொத்த
தொகை
ரூ
1
புரவலர்
83,576


2
விளம்பரம் ,போட்டி
1,27,906


3
நன்கொடை
35,236


4
புத்தகம்
5700கூடுதல்
2,52,418
558
2,51,860
கையில் வந்த வரவு-புரவலர் நிதி

.எண்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
தங்கம் மூர்த்தி
12,000
2
மதுரை ரமணி
5000
3
ஜெயலெட்சுமி
5000
4
               கூடுதல்  
22,000


கையில் வந்த வரவு-நன்கொடை நிதி

.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
4.8.15
நா.முத்துநிலவன் புதுக்கோட்டை
2000
2
4.8.15
பொன்.கருப்பையா புதுக்கோட்டை
1000
3
4.8.15
மு.கீதா புதுக்கோட்டை
2000
4
4.8.15
கருணைச்செல்வி புதுக்கோட்டை

1000
5
4.8.15

கஸ்தூரிரங்கன் புதுக்கோட்டை
1,000
6
4.8.15
மைதிலி புதுக்கோட்டை
2,001
7
4.8.15
கா.மாலதி புதுக்கோட்டை
1,000
8
4.8.15
சி.குருநாதசுந்தரம் புதுக்கோட்டை
1,000
9
4.8.15
.கிருஷ்ணவேணி புதுக்கோட்டை
1,000
10
.9.15
கில்லர்ஜி-அபுதாபி வெஸ்டர்ன் யூனியன் வழியாக
2,222
11
12.09.15
தி.ந.முரளிதரன் -சென்னை 
1000
12
4.10.15
ரேவதி புதுக்கோட்டை
500
13
1.10.15
மகாசுந்தர் புதுக்கோட்டை
1,500
14
2.10.15
சூசைக்கலாமேரி த.ஆ புதுக்கோட்டை
1,000
15
6.10.15
அப்துல்ஜலீல் புதுக்கோட்டை
1,000
16
6.10.15
.பாண்டியன் மணப்பாறை
1,500
17
7.10.15

பஷீர் அலி கீரமங்கலம்
2,000
18
9.10.15
பாலசுப்ரமணியன்-புதுக்கோட்டை
1,500
19
10.10.15
அமிர்தாதமிழ் புதுக்கோட்டை
1,000
20
10.10.15
கவியாழிகண்ணதாசன்-சென்னை
1,000
21
10.10.15
உமையாள்காயத்ரி-காரைக்குடி
500
22
10.10.15
ஜோக்காளி பகவான் ஜி-மதுரை
500
23
10.10.15
கு..திருப்பதி புதுக்கோட்டை
1,000
24
11.10.15
சீனா [எ]சிதம்பரம்-மதுரை
2,000
25
11.10.15
தமிழ்வாசி பிரகாஷ்-மதுரை
500
26
11.10.15
ஸ்டாலின் சரவணன் புதுக்கோட்டை
1,000
27
11.10.15
எழில்-கோவை
1,000
28
11.10.15
நீச்சல்காரன் இராஜாராம்-சென்னை
200
29
13.10.15
சுமதி புதுக்கோட்டை
500
30
13.10.15
மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை
500
31
18.10.15
மீரா.செல்வக்குமார் புதுக்கோட்டை
1000
32
19.10.15
வைகறை புதுக்கோட்டை 
1000
33
19.10.15
சோலச்சி புதுக்கோட்டை
1000


கூடுதல்
36923


கையில் வரவு-புத்தக விற்பனை


1
விழாவில்  விற்பனை
ரூ. 5938
2
வைகறைமூலம்
ரூ.  200

கூடுதல்
ரூ. 6,138கையில் வரவு-விளம்பரம்


.எண்
நாள்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
11.10.15
வி.சி.வில்வம் திருச்சி
1,500
2
11.10.15
அம்சப்பிரியா கோவை
500
3
11.10.15
பூபாலன் கோவை

500
4
11.10.15
குறிப்பேடு-பேனா [கு..திருப்பதி]
2,250
5
29.10.15
இராஜ்குமார்[பதாகை ]
2,000
6
29.10.15
பாரதி புத்தகாலயம்
1,000


கூடுதல்
7,750
                        
          
              கையில் வந்த மொத்த தொகை


.எண்
விவரம்
தொகை
ரூ
1
நன்கொடை
36,923
2
புரவலர்
22,000
3
விளம்பரம்
7750
4
புத்தகவிற்பனை
6138

கூடுதல்
72,811
மொத்த வரவு விவரம்


.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கிப் பிடித்தம்
தொகை
1
வங்கிக்கணக்கு
  2,52,418
558
2,51,860
2
கையில்
72,811
-
 72,811

மொத்தவரவு


3,24,671


மொத்த செலவு விவரம்

.எண்

விவரம்
தொகை
ரூ
கூடுதல்
1
மண்டபச்செலவுகள்
1]மண்டபம்,(மின்செலவு,உட்பட)
11,6102]மேடைஅலங்காரம்,கார்ப்பெட்,
88803]ஒலி,ஒளி தலையணை பெட்ஷீட்
10,0004]இசைக்குழு
2,4005]ஒளிப்படம்[ஃபோட்டோ]
3,0006]ஓவியக்கண்காட்சி
3,0007]உணவு[மளிகை,கூலி,பாத்திரவாடகை]
75,0008]நெகிழிப்பதாகை(விளம்பரம்,அரங்கம்)
7,100
1,20,990
2]
பரிசுப்பொருள்கள்
1]தோள்பை
41,0002]கையேடு
30,0003]போட்டிப்பரிசு தொகை[..]
50,0004]விமர்சனப்போட்டி[பரிசு தராத வரவு]
   5,0005]கேடயங்கள்,பேட்ஜ்,குறிப்பேடுகள்
30,000
1,56,000
3]
நிகழ்ச்சிக்கானசெலவு
1]அழைப்பிதழ் [அச்சிட அனுப்ப]
5,0002]சிறப்பு அழைப்பாளர்கள்  தங்குமிடம்
4,3833]சிறப்புப் பேச்சாளர் 
[போக்குவரத்து,அறைவாடகையுடன்]
27,000நேரலை ஒளிபரப்பு மற்றும் நினைவுப் பரிசுப் புத்தகங்களுக்கான செலவுகள்
8,469
44,852


மொத்த செலவு

3,21,842


              

           மொத்த வரவு செலவுமொத்த வரவு

 ரூ. 3,24,671

மொத்த செலவு

ரூ. 3,21,842

கையிருப்பு தொகை

 ரூ.  2,829


விழாச்சிறக்க முதல்நாளே வந்து ஆலோசனைகள் தந்து ஒருநாள் முழுவதும்
இருந்து சிறப்பித்த எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்,
சிறப்பு விருந்தினராக வந்து சிறப்புச் செய்த துணைவேந்தர் முனைவர்
சொ.சுப்பையா அவர்கள், தஇக உதவி இயக்குநர் முனைவர் 
மா.தமிழ்ப் பரிதி அவர்கள், விக்கிமீடியாவின் இந்தியத் திட்ட
ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் பெரிய பொறுப்பில் இருந்தாலும் 
உறவுபோல நட்புப் பாராட்டிய திரு அ.இரவிசங்கர் அவர்களை உள்ளிட்ட
பெருமக்களுக்கு இதய நன்றி தவிர வேறென்ன சொல்ல?

இந்த விழா, பெரும் வீச்சுக்குச் செல்லக் காரணமான போட்டிகளை நடத்த 
முன்வந்து பொருளுதவி செய்த த.இ.க இயக்குநர் அய்யா த.உதயச்சந்திரன் 
அவர்கள், அவர்களுடன் தொடர்பு ஏற்படக் காரணமான நண்பர் நீச்சல்காரன்
ராஜாராமன் அவர்கள் தந்த ஊக்கத்தால் சிறுவிழா பெருவிழா ஆனதென்பது
மிகையன்று.

போட்டிகளுக்கு நடுவர்களாகப் பொறுப்பேற்று மிகச்சிறப்பாகப் பங்களித்த 
சான்றோர்ளான நடுவர்கள், உற்சாகமிகுதியோடு 260படைப்புகளைத் தந்த போட்டியாளர்களின் பங்களிப்பே விழா நேர்த்திக்கு
அடிப்படையானது. 

இவர்களின் உற்சாகம் மேலும் தொடர ஏதாவது செய்தாக வேண்டும்,
பார்க்கலாம்.

விழாவுக்கு வந்த பதிவர் அனைவர்க்கும் மனமுவந்து தரப்பட்ட சுமார் 
300 நூல்கள் உள்பட அவரவர் கைக்காசு போட்டு அலைந்து திரிந்த 
நண்பர்களின் உழைப்பும் ஈடுபாடும் மதிப்பிட முடியாதது.

விழாக்குழுக் கூடியபோதெல்லாம் மணப்பாறையிலிருந்து வந்த அ.பாண்டியன்
போலவும் ஆலங்குடியிலிருந்துகொண்டே ஓவியங்களை வரைந்து தந்த 
ஓவியர்களைப் போலவும், அவர்களை ஒருங்கிணைத்த நீலா, ஸ்டாலின், 
எஸ்.ஏ.கருப்பையா போலவும், கவிதைகளைத் தொகுத்துத் தந்த தங்கை
மைதிலி(அவரது மழலைகள் நிறை-மகி) போலவும், திருச்சிமாவட்டம் 
முழுவதும் அலைந்து விழாவின் உணவில் ருசிக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்த இரா.ஜெயலட்சுமி போலவும், நேரலை நிகழ்வுக்காக உழைத்த UK Infotech 
தம்பிகள், வழிகாட்டிய மது கஸ்தூரிரெங்கன், கையேட்டுக்காக வேர்வை சிந்திய ஸ்ரீமலையப்பன், நாக.பாலாஜி உள்ளிட்ட “விதை-கலாம்” தம்பிகள் முகுந்தன்,
காசி பாண்டி, இரவு-பகல் பாராமல் உழைத்த விஞர்கள் வைகறை,
மீரா.செல்வக்குமார், பாவலர் பொன்.க, தமிழாசிரியர்கள் கு.ம.திருப்பதி, குரு, 
மகா.சுந்தர் மற்றும் விளம்பரம் வாங்க, நிதி திரட்ட விழாவன்று  அத்தனை
 நிகழ்வின் துளிகளிலும் தமது வேர்வைத் துளிகளை இழைத்து விழாவை 
மணக்கச் செய்த மாலதி ரேவதி, வேணி, சுமதி, நாகநாதன், சோலச்சி, 
திருமதி வைகறை, தமிழ்அமிர்தா (அவர்தம் குழந்தைகள்) இன்ஃபோடெக் லீலா,
புனிதா, உள்ளிட்ட நம் சகோதர - சகோதரிகளின் அன்பின் விளைவே இந்த 
விழா! (கையேட்டின் எனது முன்னுரையிலும் இதனைப் பதிவு செய்திருக்கிறேன்)

விளம்பரம் தந்தோர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நிதிஉதவிசெய்து விழாப்
புரவலராகவும், நன்கொடையாளராகவும் நெஞ்சில் இடம்பிடித்த நல்லோரின்
எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்திசெய்திருக்கிறோம் என்றே நம்புகிறோம்.

சொல்லமுடியாத நெருக்கடிகளில் எல்லாம் கைகொடுத்த கவிஞர்
தங்கம்.மூர்த்தி மற்றும் நண்பர் எஸ்.டி.பஷீர்அலியின் உதவிகளுக்கெல்லாம கைம்மாறில்லை!

இந்த நட்பும் ஈடுபாடும் அடுத்தவர் திறமையை மதிக்கும் ஜனநாயக
 உணர்வுடன் கூடிய உழைப்பும், இன்னும் பல விழாக்களை நடத்த 
அடிப்படையாகும். அடுத்த பதிவர் விழா எங்கு வேண்டுமானாலும்
நடக்கட்டும். ஆனால், அடுத்தடுத்துப் பயிற்சிவகுப்புகளும் கணினித்
தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவும் புதுக்கோட்டையில் தொடரும்.
தொடர வேண்டும்.

தமிழ்ப் பதிவர் குடும்ப அன்பின் தொடர்ச்சியை இப்போது போலவே 
இனியும் எப்போதும் வேண்டுகிறோம். 

வழிகாட்டிய முன்னோடி-மூத்தோரின் வாழ்த்துகளை, வலைச்சித்தரின்
அன்பை, உலகத் தமிழ்வலைப்பதிவர் அனைவரின் உளப்பூர்வமான ஆதரவை இன்றுபோல் என்றும் தொடர வேண்டுகிறோம். 

விழா வெற்றியில் மகிழ்ந்து, என் ஒருவன் கழுத்துக்கு மாலைகட்டி வந்த 
நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் - அடுத்தமுறை மாலை 
கட்டும்போது, இவ்வளவு பெரிய மாலையாகக் கட்டிவராமல்,
கழுத்தளவுக்கே அளவெடுத்து சில நூறு மாலைகளைக் கட்டச்
சொல்லுங்கள். 

ஏனெனில், மேற்காணும் ஒவ்வொருவரின் கைகளையும் குலுக்கி, மாலை 
அணிவிக்க வேண்டும். அதோடு, விழாவன்று தனது வேலைகளை ஒதுக்கி
வைத்துவிட்டு, சிரமம் பாராமல் டெல்லி, மும்பை, பெங்களுரு, பாலக்காடு,
சென்னை, மதுரை, பழனி என்று தூரதூரமான ஊர்களிலிருந்தும் வந்து 
சிறப்பித்தார்களே அந்த நமது மூத்த-முன்னோடி-மற்றும் இளைய
பதிவர்களின் வருகைக்கு முதலில் மாலை போட்டுவிட்டு அப்புறம் 
விழாக்குழுவின் கழுத்துக்கு வாருங்கள்! அவர்தம் அலைச்சலுக்கும்
சிரமம் பாராத அன்பிற்கும் நன்றி கூறுவோம்.

இனி, மீதமுள்ள வலைப்பதிவர் கையேடு விற்பனை, அடுத்த விழாவுக்கான முன்பணமாக ஏற்கப்படும். கணினித் தமிழ்ச்சங்கப் பணிகள் தொடரும். 

அனைவர்க்கும் நன்றி வணக்கம்.  

விடை பெறும் முன் ஒரு சொல்கேளீர் -
நன்கொடையாக சுமார் ரூ.28,781 தந்திருக்கும் அமெரிக்கத் தமிழ்ப் பதிவர்
திரு விசுஅவர்களின் வேண்டுகோளை ஏற்கமுடியாமல், அவர் செய்த
உதவியைச் சொல்லிக்காட்டக் காரணம் உண்டு. உதவி இருக்கட்டும்..
அவர் சொன்ன ரகசிய வாரத்தைகள்...விழாக்குழுவுக்கே தெரியாது(!) -
“நல்லா நடத்துகங்க அய்யா, கைப்பிடித்தம் வந்தா நா பாத்துக்கிறேன்”
இதைவிட வேறென்ன உதவி செய்ய முடியும்! உங்களது நல்ல 
மனசுக்கேற்ப கைப்பிடித்தம் ஏதும் வரவில்லை விசு அவர்களே!
தங்களின் உற்சாக வார்த்தைகளின் மந்திரம் விழாவைச் சிறக்கச் செய்ய
எங்களை உசுப்பிவிட்டது என்பதே உண்மை! நன்றி நண்பா! 


சரி.. நமது அன்பின் பணிகளை
வலைச்சித்தரின் தொடர் உதவிகளோடு 
பதிவுகளில் தொடர்வோம். தொடருங்கள்... 

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர் - பதிவர் திருவிழாக்குழு-2015,,
மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை
01-11-2015 காலை மணி10.00
----------------------------------------------------------------

12 கருத்துகள்:

 1. உண்மையில்
  உண்மையை வெளிப்படுத்துபவரை
  உலகம் போற்றுகிறது.
  "விழாக்குழு,
  பதிவர் திருவிழா-2015,
  புதுக்கோட்டை" என்ற குழுவினரை விட
  சிறப்பாக அடுத்த பதிவர் சந்திப்பை நாடாத்த
  எண்ணியுள்ள எல்லோருக்கும்
  இத்தளத்தில் வெளியான
  பதிவுகள் யாவும் நல்வழிகாட்டலே!

  பதிலளிநீக்கு
 2. பொன்னான நேரத்தையும்
  பொருளையும் ஈன்று
  பகலிரவு பாராது புதுகையிலே
  பொறுமையுடன் உழைப்பையும் நல்கி,
  புகழ் குவித்த பெருமக்கள் அனைவருமே
  பெருமைக்குரியவர் .
  பார் போற்றிடும் இப்
  பணியிலே பங்கு கொண்ட அனைவருக்கும்
  இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. வரவு செலவை கண்காணிக்கும் பணி என்பது எவ்வளவு சிரமமானது என்பதை பலரும் அறிவோம். வரவுக்குள் செலவு செய்து, செலவைக் கட்டுக்குள் வைப்பதும், எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவுசெய்வதும், வரவுக்கு மீறி செலவு அதிகப்படியானால் அடுத்தென்ன செய்வது என்று ஆலோசிப்பதும், அதற்கான மாற்றுத்திட்டங்களை மனத்தில் வகுப்பதும் என ஒவ்வொன்றும்... மலைக்கவைக்கும் பணி....அதை மிகச்சிறப்பாக செய்து முடித்ததோடு எவ்வளவு நேர்த்தியாகவும் சிரத்தையாகவும் வரவு செலவு விவரத்தைத் தொகுத்து அளித்துள்ளீர்கள்! தோழி கீதாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். புதுக்கோட்டை விழாக்குழுவினரை எண்ணி பெருமிதமாயுள்ளது. அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அண்ணா பதிவர் விழாப்பணி இத்துடன் முடிஞ்சிடுச்சா...கரந்தை அண்ணா சொன்னது போல வெறுமையா இருக்குமோ இனி....

  பதிலளிநீக்கு
 5. புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வோம். விழாவிற்கான நாள் குறிக்கத் தொடங்கியது முதல் கணக்கு விவரம் அளித்தவரை அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு பெரிய சாதனையைப் படைக்கத் துணை நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வோம். தொடர்வோம் நம் உறவை. நன்றி. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் குடும்ப நிகழ்வாக
  நடத்தேறியது பதிவர் விழா!
  அதற்காகச் சகல வழிகளிகளும்
  உதவிய அன்பு உறவுகள் ஆர்வலர்கள் அனைவருக்கும்
  உளமார்ந்த நன்றியுடன், திறம்பட விழாவை
  நடத்திப் பதிவர் உலகுக்குப் பெருமை சேர்த்த
  விழாக்குழுவினருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. மிகத் திறம்பட செயல்பட்ட சகோ கீதா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்! நல்ல விரிவான கணக்கு. கணக்கு எழுதுவது என்பது அத்தனை எளிதானது அல்ல. பல சமயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவு இருக்கும். அதைத் திறம்பட, செம்மையாகச் செய்தமைக்கு பாராட்டுகள் சகோ...வலைப்பதிவர் விழா குழுவினருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. பற்றாக்குறையை போக்குவதில் விசு ஆசம் அவர்கள் மிகவும் உதவியுள்ளார் என்று அறிய முடிகிறது! கையேட்டினை பதிவர்கள் நிறைய பேர் வாங்காதது வருத்தம் அளிக்கிறது. புதுகை சகாக்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சிக்கு என்னால் ஆன உதவிகள் எப்போதும் உண்டு! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் இந்தச் செயலுக்கான உழைப்பை வார்த்தைகளில் பாராட்டி அடக்கி விடமுடியாது உங்கள் அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட் – கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 10. .
  நிதி பொறுப்பாளர் என்கிற முறையில் சகோதரி கீதா அவர்கள் தந்துள்ள
  வரவு - செலவு அறிக்கை, குழப்பத்திற்கிடமின்றி, துல்லியமாக கண்ணாடிபோல் உள்ளது. தனது பொறுப்பினை திறம்பட செய்து முடித்திட்ட சகோதரி கீதா அவர்களுக்கு மிக்க நன்றி!

  அதோடு விழாவில் தொடர்புடைய அனைவருக்கும் மற்றும் ஒருங்கிணைப்பாளாராய் வழி நடத்திய தங்களுக்கும் நன்றிகள்!!!
  !
  !
  !

  பதிலளிநீக்கு
 11. வ.எண்: 8 பெயர் குறிப்பிடாதவரக்கு என் சிறப்பு நன்றி. special thanks. நல்ல மனம் வாழ்க.
  கணினித் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனாலும் அவர் செல்பேசி எண்ணில் பலமுறை தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை, அல்லது தொடர்பு எல்லைக்கப்பால் அல்லது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...