செவ்வாய், 8 செப்டம்பர், 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ்_29

சாப்பிடுவது  வயிற்றை  நிரப்புகிற  செயல்பாடு  மட்டுமல்ல
மற்றவர்களோடு  பகிர்ந்து  கொள்கிற  மனப்பான்மையும்தான்!
சாப்பாட்டோடு  பல  அனுபவங்களையும்  பகிர்ந்து  கொள்ள
புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  அன்போடு  அழைக்கிறோம்!        இன்னக்கி  நாம  சாப்பிடப் போற  இடம் .....
           சாஸ்தா  மெஸ்  (சைவம்  மட்டும் )

காலையில்----வழக்கமான  இட்லி  தோசை  பொங்கல்  பூரி  வடைதான்.
நண்பகலில்--சோறு பருப்புப்பொடி நெய்யோட!  தினம்  ஒரு  கீரைக்கூட்டு. பருப்பு  உருண்டைக்குழம்பு,  மோர்க்குழம்பு , வாழைப்பூ வடை, வெங்காய பக்கோடா,  வத்தல் வடகம்  அப்பளம்......

மாலையில்---வெள்ளைப் பணியாரம்,  கந்தரப்பம், புட்டு, இடியாப்பம்
                            கோஸ்மல்லிச் சட்டினிங்கோ.......

இரவில்-----நவதானிய தோசை  வெஜிடபிள் தோசை  புதினா தோசை
                     மொடக்கத்தான் தோசை +தூதுவளைச் சட்டினியோட


நேற்று  பழனியப்பா மெஸ்-----அண்ணன்
இன்று சாஸ்தா  மெஸ்----தம்பிங்கோ!

இரண்டு பேரும்  பிராண்டடு  நெசமனிதர்கள்,  பரிமாறப்படும் செறிவில்!

எல்லா  விலங்கினங்களின்  உணவுப்  பழக்கத்தையும் நிச்சயமா சொல்லிடலாம்! “எந்த  உணவைச்  சாப்பிடுவாங்க?”   என முன்கூட்டியே  சொல்லிவிட  முடியாத  உணவுப்பழக்கத்தைக்  கொண்டிருக்கிற ஒரே  ஜீவராசி.......நாம்தான்!

15 கருத்துகள்:

 1. டைம் செட்டிங் ஸூப்பர் அங்கு டிக் டிக் டிக்
  இங்கு மனம் பக் பக் பக்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணியாரம், கந்தரப்பம், புட்டு மற்றும் செட்டிநாட்டு இடியாப்பம் அதிலும் சாஸ்தா மெஸ்சில் இட்லி தோசைக்கே ஒரு கத்தரிக்கா கொத்சு வைப்பாங்க பாருங்க... அட அட..!

   நீக்கு
 2. ஆகா! நவதானிய தோசையும் தூதுவளைச் சட்னியும் ஒரு பார்செல் ப்ளீஸ், ஜெயாம்மா :-)

  பதிலளிநீக்கு
 3. ம்.. நமக்குக் கொடுத்து வைக்கவில்லை!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்புடியெல்லாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது

   நீக்கு
 4. இருந்தாலும் அக்டோபர் 10ஆம் தேதி ப்ரதோஷம், 11ஆம் தேதி சிவராத்திரினு காலண்டர்ல போட்டிருக்கான்.. விழாவுல சைவம்தானே? (புதுக்கோட்டையின் புகழ்பெற்ற முட்டைமாஸ் வெளியில எங்க கிடைக்கும்ங்கறதையும் எழுதிடுங்கோ..)

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...