19-9-2015 மாலை சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக (TAMIL VIRTUAL ACADEMY- Formerly Tamil Virtual University) அலுவலகத்தில் அதன் இயக்குநர் திரு த.உதயச்சந்திரன் IASஅவர்களை நமது நண்பர்களுடன் சந்தித்து நமது புதுக்கோட்டைப் பதிவர் திருவிழா பற்றிப் பேசி வந்தது மகிழ்ச்சியும் தெளிவும் தருவதாக உள்ளது.
இயக்குநர் அவர்களிடம் பேசி, முன்வைத்த கருத்துகள் –
1. இயக்குநர் அவர்களும் இணை இயக்குநர் திரு தமிழ்ப்பரிதி அவர்களும் 11-10-2015 புதுக்கோட்டை விழாவில் கலந்துகொள்ள வருகை தருதல்
2. ஐந்து போட்டிளுக்குமான 15பரிசுகளோடு, மேலும் தகுதியான படைப்புகள் வந்தால், அவற்றைத் தொகுத்து மின்னூலா வெளியிடுதல்.
3. தேர்வுபெற்ற படைப்பாளிகளுக்கு ரொக்கப்பரிசு, கேடயத்துடன் த.இ.க. சான்றிதழ்களை இயக்குநர் அவர்களே வந்து வழங்கிட ஏற்பாடு செய்தல்.
3. த.இ.க.வின் இணையத்தில் நமது பதிவர் விழாப் போட்டிகள் பற்றிய செய்தி இணைப்புத் தருதல், பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்கள் மாணவர்கள் போட்டிகளை அறிய த.இ.க.விலிருந்து செய்தி அனுப்புதல்
5.வாய்ப்பிருந்தால், விழாவுக்கு முந்திய வாரம் (அ) விழாவுக்குப் பின்) எழுத்தாளர் –எழுத்தாளராக முயல்வோர் என 100பேர் கலந்துகொள்ளும் “வலைப்பக்கப் பயிற்சிப் பட்டறை“யை, த.இ.க. நடத்தித்தருதல்
- ஆகிய பொருள்களைப் பற்றி பதிவர்-நண்பர்கள் சொல்லச்சொல்ல, அமைதியாக்க் கேட்டுக் கொண்ட இயக்குநர் அவர்கள், “பெரும்பாலும் இவை தேவையானவைதான்“ என்று ஏற்றுக்கொண்டதோடு, தம்மால் இயலும்வரை இவற்றை செய்துதர முயல்வதாக இயல்பாகப் பேசியது மகிழ்வளித்தது. எதிரில் வந்தமர்ந்த பதிவர்களிடம் இயக்குநர் முதலில், “உங்கள் வலைப்பக்கங்களுக்கு எத்தனை ஃபாலோயர் இருக்கிறார்கள்?“ என்று கேட்டது, அவரது வலைப்பக்க ஆர்வத்தை நாமறியச் செய்தது.
இயக்குநர் அவர்களிடம் பேசியதிலிருந்து நாங்கள் தெரிந்து கொண்டது –
போட்டிகளில் எந்த அளவிற்கு அதிகமான பதிவர்கள் கலந்து கொள்கிறார்களோ அந்தளவிற்குத்தான் பதிவர்களைப் பற்றிய பொதுக் கருத்து உயரும் என்பது முக்கியமானது. (அதிலும் கவிதைகயை நாம் எழுதிக் குவித்துவிடுவோம் என்பதில் ஐயமில்லை) ஆக்கபூர்வமான கட்டுரைகளையே அதிகம் அவர்கள் எதிர்பார்ப்பது புரிந்தது உங்களுக்கு இது புரிகிறதா பதிவர் நண்பர்களே? “ஆக்கபூர்வமாக“- இது முக்கியம்!
யார்யார் போனோம்?
சகோதரி தில்லையகத்து கீதாவும், பாலகணேஷூம் கடைசி நேரத்தில் வர இயலாத சூழலில், சென்றுவந்த சென்னைப் பதிவர்கள் இராய.செல்லப்பா, தி.ந.முரளிதரன், மதுமதி, ஆதிரா ஆகியோருடன் விழா ஒருங்கிணைப்பாளரான நா.முத்துநிலவனும் கலந்துகொண்டார். (நமது மூத்த முன்னோடிப் பதிவர் “புலவர்குரல்“ திருமிகு இராமாநுசம் அவர்களின் உடல்நிலை கருதி அவர்களைச் சிரமப்படுத்தவில்லை)
இந்தச் சந்திப்பிற்கு உதவிய இளைஞர், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத திரு நீச்சல்காரன் அவர்கள்தான இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் வலைப்பதிவுகள் பற்றிப் பெரிய ஆய்வே செய்து வைத்திருக்கிறார் என்பது அவருடன் பேசியதிலிருந்தே தெரிந்தது. பதிவுகள் எழுதுவதில் மொழி மற்றும் பிரச்சினை என்னென்ன? கணினித் தமிழ் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் பதிவர் பணிகளை வளர்க்கலாம் என்பது பற்றியே அவர் பேசியது வியப்பும் மகிழ்ச்சியும் அளித்தது.
வேறொரு-நிறைவான, கைநிறைய ஊதியம் வரக்கூடிய- முழுநேரப் பணியிலிருக்கும் அவர், தம் ஆர்வத்தினால் மட்டுமே இப்பணிகளைத் தன்னார்வமாகச் செய்துவருகிறார்! இது வியப்பானது மட்டுமல்ல, அவரது ஈடுபாட்டின்மீதே ஒரு மரியாதையைத் தருவதாகவும் இருக்கிறது அல்லவா? இந்த ஈடுபாடு வலைப்பதிவுலகிற்க நன்மைதரும்!
அதோடு-
முழுநேர நிதித் துறைச் செயலர் பொறுப்பிலிருக்கும் இயக்குநர் அவர்கள், தமது ஈடுபாட்டால் சனிக்கிழமை தோறும் தமிழ்இணையக் கல்விக் கழகப் பணிகளை இவ்வளவு ஆர்வத்தோடும், தெளிவான திட்டங்களோடும் செய்து வருவதறிந்து, நாமெல்லாம் நம் பணிகளுக்கு எப்படியெல்லாம் திட்டமிட்டு, உழைக்க வேண்டியுள்ளது என்பதைக் கற்றுக் கொண்டோம்.
விழாவுக்குச் சிறப்புச் சேர்க்க, யார்யாரை அழைக்கிறோம்?
இயக்குநர் திருமிகு த.உதயச்சந்திரன் IAS அவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோதுதான், சென்னையை அடுத்து “புத்தகக்காட்சி“ மதுரைக்கு வந்தது என்பதை அனைவரும் அறிவோம்! அவர்களுடன், விக்கிப்பீடியா இந்தியப் பொறுப்பாளரும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவருமான திருமிகு இரவிசங்கர் அவர்கள், நம் புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கப் பணிகளைத் தோற்றுவித்து, இரண்டு இணையப் பயிற்சிப் பட்டறை நடத்திட வழிகாட்டிய தமிழறிஞரும் –தற்போதைய கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் ஆகியோருடன், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் அவர்களுடன் பேசும்போது அவர்களே சில முறை குறிப்பிட்ட முன்னோடி வலைப்பதிவரும், “பூ“படக் கதாசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆகியோரை விழாவுக்குச் சிறப்புச்சேர்க்க அழைத்திருக்கிறோம்... டும் டும் டும்!
(பேசிமுடித்துக் கிளம்புமுன் எடுத்துக் கொண்ட படம் மேலுள்ளது)
அழைப்பிதழ் பற்றிப் புதுக்கோட்டை விழாக்குழு நண்பர்களுடன் இன்றும் நாளையும் பேசி நிகழ்ச்சி நிரலை இறுதிப் படுத்துவோம்...
அப்புறம் விழாப் பணிகள் பாய்ச்சல் வேகம்தான்....!!!
வலைப்பதிவர் கையேட்டில் பதிவு செய்யாதவர்களுக்கு 22ஆம் தேதிவரை பதிவு செய்யச் சொல்லலாமா? நீங்க என்ன நினைக்கிறீங்கன்னும் எழுதுங்க...
-- நா.முத்துநிலவன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்.
பல நல்ல முயற்சிகள் விதைக்கப்பட்டிருப்பது மகிழ்வாக இருக்கின்றது. ந்ல்ல ஆக்கப்பூர்வமான பணிகளின் ஆரம்பம் தெரிகின்றது. தமிழ் வாழும் வளரும்.....என்பதில் ஐயமில்லை. இத்தனைபேர் அதனைச் சீராட்டி, பாராட்டி வளர்க்க இருக்கும் போது என்ன பயம். வாழ்த்துகள்! பாராட்டுகள் குழுவினர் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகீதா அவர்கள் வர இயலாத சூழலில் மிகவும் வருத்தமே.
Ahaa.....22varai time ..tharalam Anna.
பதிலளிநீக்குவலைப்பதிவர் கையேட்டிற்கான விபரங்களை அனுப்பாத வலைப்பதிவர்கள் கால நீட்டிப்பை பயன்படுத்தி உடன் அனுப்பித் தரலாம். பெண்ணியல் சார்ந்த கட்டுரைப் போட்டியில் பெண் வலைப்பதிவர்கள் கூடுதலாக பங்கு பெறலாம். வலைப்பதிவர் விழாவிற்கான வேலைகள் வேகம் பிடித்திருப்பதை அறியும் போது சந்தோசமாக உள்ளது.
பதிலளிநீக்குஇப்பொழுதே பணிகள் பாய்ச்சல் வேகத்தில்தான் சென்று கொண்டிருக்கின்றன
பதிலளிநீக்குஇன்னும் வேகம் கூடப் போகிறதா
ஆகா
தங்களின் அயராத உழைப்பிற்க்கு வாழ்துகள்.
பதிலளிநீக்கு>>> வலைப்பதிவர் கையேட்டில் பதிவு செய்யாதவர்களுக்கு 22ஆம் தேதி வரை பதிவு செய்யச் சொல்லலாமா?..<<<
பதிலளிநீக்குநிச்சயம் தரலாம்!..
அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..
வணக்கம்! பதுவு செய்ய 22தேதி வரை கொடுத்திருப்பது நல்ல விசயம்!! நன்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஆஹா! ஒவ்வொரு நாளும் புதுப்புது முயற்சிகள் அனைவரது ஒத்துழைப்பும் ஆவலும் காண மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்கு22ந்தேதி வரை நீட்டிக்கலாம் என்பதே என் கருத்தும்.
சிறப்பாக திட்டமிடுகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகாலம் நீட்டிக்க நீட்டிக்க... இன்னும் நீட்டிப்பார்கள் என்ற மந்த நிலை உருவாகிவிடப்போகிறது. செப்.22 நாளோடு பதிவுக் காலத்தை இறுதி செய்வது நல்லது. கையேடு தயாரிப்புப்பணிக்குக் காலம் போதாது.
பதிலளிநீக்குவாய்ப்பளிக்கலாம்.போட்டி என்பது பலரும் கலந்து கொள்ளும்பொழுதுதானே சிறக்கும்.
பதிலளிநீக்குவிழா சிறப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அனைத்துக்குமான வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு