செவ்வாய், 8 செப்டம்பர், 2015

“அவர்கள் உண்மைகள்“ மதுரைத் தமிழனின் ஆலோசனைகள் பற்றி...



முதலில் இந்தப் பக்கத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்


 – (பாவி மனுஷன் 
அவரது பதிவுகளை 
யாரும் நகலெடுக்க முடியாதபடி ஏதோ செய்திருக்கிறார்! 
நமக்கும் அதைச் 
சொல்லித்தர 
மாட்டேங்குறார்)

மதுரைத் தமிழனின் விழா ஆலோசனைப் பதிவு-

இனி ஒவ்வொரு கருத்தாகப் பார்ப்போம்.


 01.      விழாவுக்கு வருவோரெல்லாருமே “விசிட்டிங் கார்டுபோல வைத்திருந்தால் இந்த யோசனை சரிதான். ஆனால், பெரும்பாலானோரிடம் இல்லையே? இவர் சொல்லும்படிச் செய்தால் நேரம் மிகவும் மிச்சப்படும். ஆனால், விழாவுக்கு வரும் பெரும்பாலான பதிவர்கள் ஒருசில நிமிடமாவது மேடையேறித் தனது முகத்தைக் காட்டவேண்டும் என்று நினைப்பது போலவே, விழாவுக்கு வர இயலாதவர்கள் நேரலையில் ஒவ்வொருவரையும் பார்த்துக்கொள்ளவும் இது ஒன்றுதான் வழி –இது போலும் காரணங்களால்தான் இதைத் தவிர்க்கமுடியவில்லை

 02.      மேடையேறும் பிரபல பதிவர்கள் கவனிக்க வேண்டிய கருத்து இது.

 03.      இது பிரபல பதிவர்கள் (அ) நட்புவட்டங்கள் கவனிக்க வேண்டியது.

 04.      இது ஆண்-பெண் பரஸ்பர நம்பகத் தன்மையைப் பொருத்த செயல். இதில் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லதே.

 05.      இது என்னை ஒழித்துக் கட்ட (அ) விழாவில் கலவரம் நடத்த எண்ணும் சதி. (இதை அமெரிக்க ஏகாதிபத்திய சதி எனலாம்)

 06.      இது நல்ல யோசனைதான் செய்யலாம்.

 07.      இது நேரம் தொடர்புடைய திட்டத்தின்பாற் பட்டது. அடுத்த விழாவிலாவது...?

 08.      சற்றே பொறுங்கள்... பெரிய போட்டிகளை இப்போதே நடத்த வாய்ப்புள்ளது. (நாளை அனேகமாக வந்து பாருங்கள்)

 09.      இதை ஒழுங்கு படுத்துவது கடினம். நிறைய ஒத்துழைப்புகள் தேவை (பரிசு கொண்டு வராதவரை அந்தப் பக்கம் விட முடியாது இல்லையா? அதுவே நன்றாக இருக்காது, மீண்டும் மீண்டும் மாற்றிக் கொள் வேண்டி(?) திரும்பவும் வருவோரை...?)

 10.  வலைமேய்ச்சலில் அகப்படாத புதியவர்களைப் பொறுமையாக அறிந்து, தாமே தொடர்பு கொள்ள, நட்பு வளர்க்க உதவும். மட்டுமின்றி நிலையான ஆவணம். வலைப்பக்கம் வராதவரிடமும் நூல்வழிக் கொண்டு செல்ல புத்தக விழாக்களில் உதவும். (முக்கியமான செய்தி விழாச் செலவுக்கு விளம்பரம் உதவும்)

 11.  திரு நீச்சல் காரனை மட்டுமல்ல இன்னும் வலையுலகம் தொடர்பான “பெரிய பெரிய“ ஆட்கள் இருவரைச் சிறப்பு விருந்தினராக அழைக்கிறோம்...சற்றே பொறுத்திருந்து பார்க்க வேண்டுகிறோம். இப்போதே அறிவிக்க முடியாத நிலை...!

 12.  இதுவும் அரிய யோசனையே. முயற்சி செய்வோம். ஏற்கெனவே இந்த நல்ல் யோசனையோடுதான் சில வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். பார்க்கலாம்..

 13.  கடைசி யோசனை – (இது நம்முடையது) அந்த மாறுவேடத்தில் திரியும் மதுரைத் தமிழன் யாரென்று கண்டுபிடித்துத் தருவோர்க்கு ஆயிரம் பொற்காசுகளை அவரே வந்து மேடையில் தருவார் என்று அறிவிக்கலாம். (மாட்னீங்களா?)

நகைச்சுவைக்காகவே கடைசி யோசனையை எழுதினாலும், அமெரிக்காவில் இருந்துகொண்டு, எந்த அளவிற்கு இந்த விழாப் பற்றிய ஈடுபாடு இருந்தால் இவ்வளவு யோசித்து பதிவிட்டிருக்க வேண்டும்? அய்யா நெகிழ்ந்து மகிழ்ந்து விழாக்குழு நிற்கிறது.
அதற்காக எமது நன்றிகலந்த நெடுஞ்சாண் கிடை வணக்கம் தமிழா!

ஆமா... வலைப்பதிவர் கையேடு பற்றிய கருத்தில் ஒருமைப் படாததால்தான் இன்னும் பதியாமல் இருக்கிறீர்களா? 
பதியுங்கள் சாமி. 

சுமார் 25லட்சம் பார்வை கொண்ட நீங்கள் பதிவர் கையேடு பற்றிஒரு பதிவு போட்டால் நிச்சயமாக அது 400பதிவர்கள் பதிவதில் கொண்டு விடும் என்று நம்புகிறோம். செய்வீர்களா?
சும்மா “செஞ்சிறுவோம்“னு மாரி மாதிரி சொல்லக்கூடாது ஆமா... சொல்லிட்டேன்

நன்றி நன்றியோ நன்றி.

ஆமா... நன்கொடை ஸ்பான்சர் வாங்கித்தர மாட்டேளா?
செய்வீங்க..“சொல்லாமலே பெரியர்“ 
என்ன இருந்தாலும் நீங்க பெரியவர்தான் இல்லையா?

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
ஒருங்கிணைப்பாளர் – “வலைப்பதிவர் திருவிழா-2015

மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை.

16 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்னதெல்லாம் செய்து விடுவார் என்று நம்புகிறேன்...

    இல்லையென்றால்.......................

    (அவர் வருவது உறுதியாகி விட்டதால்) எதற்கும் ஒரு பூரிக்கட்டை தேவை... பரிசாக கொடுக்க... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எனக்கு சகோ என இதுவரை நினைத்து இருந்தேன் இப்பதான் தெரியுது எனது மனைவிக்கு சகோ என்று....ஹும்ம்ம்ம்ம்ம்ம்

      நீக்கு
  2. ஒருவாரமாக கொஞ்சம் பிஸி! இணையம் பக்கம் வரமுடியவில்லை! நானும் வர முடியாத சூழ்நிலை என்றாலும் வருவதற்கான வாய்ப்புக்களை தேடி உருவாக்கி வருகிறேன்! மகனின் காதணிவிழா வெள்ளியன்று நடைபெறவுள்ளது. அதன் பிறகு விழாவுக்கு என்னால் இயன்ற பங்களிப்பை நல்குகிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனின் காதணி விழாவைச் சிறப்பாக முடித்து, நமது விழாவுக்கும் அவசியம் வந்துவிடுங்களய்யா. “இயன்ற பங்களிப்பு“க்கும் எங்கள் மகிழ்ச்சியும் நன்றியும்.

      நீக்கு
  3. இருங்க ...இந்த மதுரைத் தமிழன் இப்படித்தான் அந்தக் கடைசி அதாங்க மாறுவேடம் இல்லைனா வேறு ஒரு பதிவர் பெயர் என்று ஏதாவது லொள்ளு பண்ணுவார்னு நினைச்சுத்தான்..நாங்க எங்க தளத்துலயும் அவரைக் கண்டுபிடிப்போர்க்கு பரிசு அவரையே கேளுங்கனு சொல்லிருந்தோம்....

    நேரில் பார்த்த முத்துநிலவன் ஐயாவையே டபாய்த்துவிடுவாரா என்ன?!!!!!!!!!! வெல்லூருக்கு வரவெ இல்லை என்று சொல்லுகின்றாரே..ஹஹஹ் அவர் புத்தகம் வாங்கி டாலர் கொடுத்ததும் கீதாவிடம்....அவருடன் மீண்டும் சென்னையை நோக்கிப் பயணித்த மூங்கில்காற்று முரளிதரன், செல்லப்பா சார்....முரளிதரன் அவர் தளத்தில் அவருடன் பேசியது பற்றி பகிர்ந்திருந்தாரே....

    அங்க மட்டும் இல்லைங்க உங்களுக்கு பூரிக்கட்டை....இங்க ஏகப்பட்ட சகோதரிகள் இருக்காங்க...எல்லாரும் உங்களுக்குப் பூரிக்கட்டை வரவேற்பே கொடுத்துருவாங்க...ஹஹஹ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத்தமிழன் பெயரில் வந்ததது அவரது நண்பரே ,அவரைதான் நீங்கள் இன்னும் மதுரைத்தமிழன் என்று அப்பாவியாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு நாள் மதுரைத்தமிழன் உங்களை கண்டிப்பாக நேரில் சந்திப்பான் அப்போதுதான் உங்களுக்கு உண்மையான மதுரைத்தமிழன் யாரென்று தெரியும் அதுவரை இந்த சஸ்பெண்ஸ் தொடரும்...

      நீக்கு
    2. ஆமா ஆமா அவர் மதுரைத் தமிழன் இல்ல எனக்கு அப்பவே தெரியும்... அது வந்து அவரது க்ளோனிங்! ஆனால் உண்மையான அவரது அடையாளம் எல்லாருக்கும் தெரியும் அதுதான் பூரிக்கட்டை அடிவாங்கி நெளிஞ்சிருக்கும் தாடை..!

      நீக்கு
  4. ஹாஹா நான் யார்? நீ யார்? மதுரைத் தமிழன் யார்? :-)
    பூரிகட்டை விற்பனை அமோகம்! ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கிரேஸ் மதுரைத்தமிழன் உங்க நாட்டை சார்ந்தவர்தானே அவரைப்பற்றிய முழுவிபரம் அறிந்து பதிவாக இடலாமே?

      நீக்கு
  5. //பாவி மனுஷன் அவரது பதிவுகளை யாரும் நகலெடுக்க முடியாதபடி ஏதோ செய்திருக்கிறார்!
    நமக்கும் அதைச் சொல்லித்தர மாட்டேங்குறார்)//

    தனபாலனை அருகில் வைத்து கொண்டு இப்படி கேட்கலாமா? இப்படி காப்பி பண்ணாமல் இருக்கச்
    செய்வது மிக எளிது அதைவிட மிக எளிது அப்படி செய்ததை காப்பி பண்னுவது...


    ///ஆமா... நன்கொடை ஸ்பான்சர் வாங்கித்தர மாட்டேளா?
    செய்வீங்க..“சொல்லாமலே பெரியர்“
    என்ன இருந்தாலும் நீங்க பெரியவர்தான் இல்லையா? ///

    நீங்க மட்டும் பட்டிமன்றத்திற்கு ஒத்துகொண்டு இருந்தால் உங்களுக்கு மிகப் பெரிய ஸ்பான்ஸர் கிடைத்திருக்கும் அதானுங்க நாம் விசு சாரும் அவரது நண்பர் பரதேசியும் நல்ல பேச்சாளர்கள் அவர்கள் கலந்து கொள்ளும் விழாவிற்கு எல்லாம் மிகப் பெரிய தொகையை தருவார்கள் அதை கெடுத்திட்டீங்களே..


    சரி இன்னொரு நல்ல ஸ்பான்ஸ்ரை ரெகமெண்ட் பண்ணுறேன் அதை வீட்டுவிடாமல் கெட்டியா பிடிச்சுகுங்க அதைவிட்டு விடாதீங்க அந்த ஸ்பான்ஸர் வேறு யாரும் அல்ல எனது மாப்பிள்ளை மதுதான்(எனது சகோ மைதிலி வாழ்க்கைதுணைவர்)


    /வலைப்பதிவர் கையேடு பற்றிய கருத்தில் ஒருமைப் படாததால்தான் இன்னும் பதியாமல் இருக்கிறீர்களா?
    பதியுங்கள் சாமி. //
    என்ன சாமி இப்படி கேட்டுப்புட்டீங்க அப்படியெல்லாம் நான் நினைச்சு இருந்தா நான் இப்படி எல்லாம் பதிவுகள் போட்டு இருக்கமாட்டேன். என்னை பற்றி நானே என்ன எழுதுவது எனத் தெரியவில்லை சாமி உங்களுக்கு என் தளத்தை பற்றி என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிடுங்கள் சாமி உங்களுக்கு ஆயிரம் புண்ணியம் வந்து சேரும்.



    உங்கள் விழா பற்றி என்ன தகவல் வேண்டுமானாலும் நான் பதிய தயாராக இருக்கிறேன் நீங்களோ தனபாலனோ என்ன அங்கு பதிய வேண்டுமாலும் எழுதி அனுப்புங்கள் அதை அப்படியே எடிட் பண்ணாமல் வெளியிடுகிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழரே! உங்கள் பதிலின் ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னாலிருக்கும் நமது விழாக் குறித்த அக்கறையும் பெருமிதமும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாத்திரை விழா முடியும் வரை வேலை செய்யும். நன்றி நன்றி.வணக்கம். (மீண்டும் வருவோம்.. இப்படித்தான் எங்கள் குழுநண்பர்கள் குழுக் கூட்டம் முடிந்து திரும்பும் போதே செல்பேசி சிணுங்கும்.. மீண்டும் கூட்டம் பற்றிக் கூடாமலே பேசுவோம்..விழா முடியும்வரை இந்தக் கதைதான்...கனவுகூட இந்த விழாதான் என்று எங்கள் வீட்டு பூரிக்கட்டை ச்சே..என் மனைவி சொல்கிறார்..னா பாருங்களேன்!)

      நீக்கு
  6. திரு. மதுரைத் தமிழனின் கருத்துக்களும் அதற்கு ஐயாவின் பதில்களும் அருமை....
    வெளிநாட்டில் இருக்கும் எல்லாருக்குமே விழா குறித்த ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது... வர முடியாத சூழலே... ஆனால் விழா அன்று மனசெல்லாம் அங்குதான்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலை வேண்டாம் கவிஞரே! நேரலையில் நிகழ்ச்சிகள் கிடைக்கும் அதற்கான ஏற்பாடுகளை நமது மது நண்பர்கள் கவனித்து வருகிறார்கள்.. ஆயினும் உங்களையெல்லாம் எங்களால் சந்திக்க முடியவிலலையே என்பதுான் எங்கள் ஆற்றாமை. பதிவிற்கும் பதிலிற்கும் நன்றி வணக்கம்

      நீக்கு
    2. நமது விழாப்பற்றி, எல்லாருக்கும் முன்னதாகவே தாங்கள் பதிவிட்டிருந்ததை பார்த்து மகிழ்ந்தாலும் எனது தாமதம் குறித்து வருந்தினேன். http://vayalaan.blogspot.com/2015/08/2015.html மிக்க நன்றி வயலாரே! தொடரட்டும் நம் தொடர்புகள்.நன்றி

      நீக்கு
  7. தளவடிவமைப்பு சூப்பருங்கண்ணா.
    வடிவமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
    மதுரைத்தமிழரின் கருத்து தக்க விளக்கம் தந்த உங்களுக்கும் எனது பாராட்டுக்கள் அண்ணா. கனவிலும் இதைப்பற்றிய யோசனையே ம்ம் கலக்கப்போவது யாரு புதுகைப்பதிவர்களாச்சே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தள வடிவமைப்பைத் தொடங்கியது எங்கள் ஸ்ரீமலையப்பன் எனும் இளைய நதி...அது மகாநதியானது திண்டுக்கல்லார் கைங்கர்யம்.. ஆகவே உன் பாராட்டை இருவருக்கும் பார்சல் ரெண்டு... (அட இது நம்ம ஜெயாம்மா சாப்பாட்டுக் கடைகளைச் சுத்திக்காட்டினாங்களா பின்னாடியே திரிஞ்ச பாதிப்பும்மா...நீ ஒன்னும் நினைக்காதே!)

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...