ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அழைப்பிதழ் வேண்டுவோர் முகவரி தருக!


நமது விழா அழைப்பிதழ், இருபக்க பலவண்ண அட்டையில் அச்சாகி வருகிறது. அனேகமாக 01-10-2015 அன்று கிடைக்கக் கூடும். அச்சு அழைப்பிதழ், பதிவர் நண்பர்களுக்கு நூல்அஞ்சலில் அனுப்ப விழாக்குழு விரும்புகிறது. (ரூ.5அஞ்சல்தலை ஒட்டி, உறையை ஒட்டாமல் சான்றஞ்சலில் இட்டு வரும்)

எனவே, அழைப்பிதழை அஞ்சலில் பெற விருப்பமுள்ளவர் மட்டும் உடனடியாகத் தமது அஞ்சல் முகவரியை நமது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டுகிறோம். மின்னஞ்சல் subject பகுதியில் “முகவரி“ என்று தமிழிலோ அல்லது Blogger Address  என்று ஆங்கிலத்திலோ குறிப்பிடவும். 

இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் முகவரி இடவேண்டாம். அதிலும்  பெண் பதிவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டுகிறோம். (நமது பதிவர்கள் நல்லவர்கள், ஆனால் பதிவர் மட்டுமா இந்தப் பதிவுகளைப் பார்க்கிறார்? எல்லாரும்தானே பார்க்கிறார்கள்? .... ஆகவேதான்..)

வெளிநாட்டு நண்பர்கள் மன்னிக்க. உங்களின் ஆத்மார்த்தமான உதவியால் தான்இந்த விழா சிறப்பாக ஏற்பாடாகி வருகிறது. அதனால், உங்கள் தமிழக முகவரியைத் தந்தால் அவசியம் இந்தியாவுக்குள் எங்காயினும் அனுப்பி வைப்போம். ஏற்கெனவே சொன்ன பழமொழிதான் – “செத்தாடு காப்பணம் செமகூலி முக்காப் பணம்“ங்கிற மாதிரிதான் வெளிநாட்டு அஞ்சல் செலவு அள்ளிவிடும். எனவே பதிவர் சந்திப்புகளின் வழக்கப்படி நமது தளத்தில் போடுகிறோம். (ஆமா..போங்க நீங்கதான் வரப்போறதில்லல்ல..? அப்பறம் தளத்திலயே பார்த்துக் கோங்க... வேற என்ன பண்ண?)

இன்னொரு வேண்டுகோள் – படைப்பு அனுப்புவோர், அந்தப் படைப்பை தமது வலைப்பக்கத்தில் உரிய உறுதிமொழிகளோடு இட்டு, இணைப்பை மட்டும் நமது மின்னஞ்சலுக்கு அனுப்பும்போது, subject பகுதியில் “போட்டிக்கான படைப்புஎன்று குறிப்பிடுவது வகைபிரிக்க எளிதாகும்.

அதுபோலவே, நன்கொடை மற்றும் விளம்பரம் அனுப்புவோர் அதுபற்றி உடனடியாகத் தமது தளத்தை க்குறிப்பிட்டு மின்னஞ்சல் தந்தால்தான் தளத்தில் ஏற்ற முடியும். ஒரு நல்ல தொகை வந்து மூன்று நாளாகிறது...! யாரென்ற விவரம் இன்னும் வரவில்லை!! தேதி, பெயர், ஊர் தெரிவித்தால்தான் அந்த விவரத்தைப் பதிவேற்ற முடியும்.


அன்புடன் – விழாக்குழு, 
27-09-2015

7 கருத்துகள்:

 1. அழைப்பிதழை வலைப் பூவில் வெளியிடலாமே ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக உறுதியாக அழகாக..வெளியிடுவோம்
   அதிலென்ன சந்தேகம்? அஞ்சலில் பெற விரும்புவோர்க்கு மட்டுமே இந்தக் குறிப்பு

   நீக்கு
 2. அழைப்பிதழை வலைப்பூவில் வெளியிட்டால் போதுமானது.

  விழா சிறக்க எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அழைப்பிதழ் கேட்டுப் பெறுவதல்ல!..

  ஆயினும் - இந்த விழாவிற்கான அழைப்பிதழ் - காலப் பொக்கிஷம்!..

  கலைப் பொருள்களுடன் சேர்த்து வைப்பதற்கு - கண்டிப்பாக வேண்டும்..

  எனவே - மின்னஞ்சலில்,
  எனது - தஞ்சை முகவரியை அனுப்பி வைக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 4. அற்புதம்..
  மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம். எனது வசிப்பிட முகவரியை அனுப்பியுள்ளேன்.அழைப்பிதழ் ஒன்று அனுப்புங்க. என அன்புடன்,
  C.பரமேஸ்வரன்,
  சத்தியமங்கலம்-
  ஈரோடு மாவட்டம்638402

  பதிலளிநீக்கு
 5. அழைப்பிதழ் அனுப்ப சிலவு அதிகம்
  வலைச்சரத்தில் போட்டால் போதும்சென்னையில் இருந்து வந்தால்
  வசதி எப்படி
  நான் வேளச்சேரி நண்பர்கள் அருகில் இருந்தால் வசதி
  ரயிலில் வசதியா பஸ்ஸிலா

  பதிலளிநீக்கு
 6. வலைப்பூவில் வெளியிடலாம். பெரும்பாலானவர்கள் வலைப்பதிவர்களே. அவ்வாறு இல்லாதவர்களுக்கு அழைப்பிதழை அனுப்பலாம்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...