புதன், 9 செப்டம்பர், 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் - 28

தினமும்  உதிப்பதாலேயே  சூரியன்  அற்பமானதாகி  விடாது !
தினமும்  சாப்பிடறதால  அது  சாதாரண  செயலாகிவிட முடியாது!

வலைப்பதிவர்  திருவிழாவில்  சாப்பிடுவதற்கு  அன்போடு அழைக்கிறோம்.

இன்னக்கி  அசைவத்துக்குதான்  போறோம்----அதுவும்  இரவு உணவு மட்டும்.

                      முத்துப்பிள்ளை  கேண்டீன்

புதுக்கோட்டையில  பச்சப்புள்ளையக்  கேட்டாக்கூட  பளிச்சின்னு  சொல்லும்.
இந்த  கேண்டீன்  முட்டை மாஸ்  சாப்புடாம  ஊருக்குப் போனா  பாவம் வுடாது.
அவிச்ச  முட்டைய  நறுக்கிப்போட்டு தக்காளி  சேர்த்து ஒரு கிரேவி  (அது ரகசியம் )  ஊத்தி சுடச்சுட  வாழை இலையிலக்  கட்டித்தருவாங்க  பாருங்க.......
ச்சே...இலையக்கூட  திண்ணுப்புடலாம்!


சுத்து பரோட்டா , முட்டை லாப்பா ,  முட்டை கொத்து பரோட்டா , ஆப்பம், இடியாப்பம் , தோசை, பச்சப்புள்ள  கைமாதிரி குட்டிக்குட்டி  இட்லி........
இது  எல்லாத்துக்கும்  பாயாக் குழம்பு, கெட்டிக் குழம்பு, சிக்கன் குழம்பு (மூவண்ணக் குழம்பு)  ஊத்தி  ஊற வச்சு திண்ணா....திண்ணுக்கிட்டே......ம்!

காடை சுக்கா , மட்டன்  சுக்கா---சான்ஸ்ஸே  இல்ல!  பார்சலோடப் போங்க!

உலகத்தில்  பட்டினியால்  சாகிறவர்களைவிட,  அதிகம்  சாப்பிடுவதால்  சாகிறவர்கள்தான்  அதிகம்  என்று  கணக்கெடுத்திருக்கிறார்களாம்...!

இதுக்கெல்லாம்  நாம  பயப்படக்கூடாது  பாஸ் !  வாங்க  அன்பா  சாப்பிடுவோம் !  முத்துப்பிள்ளை  முட்டைமாஸுக்கு  உயிரே குடுக்கலாம்.

12 கருத்துகள்:

  1. சாப்பிட்டால் மட்டும் போதுமா ,சிந்திக்க வைக்க வேண்டாமா ?அதற்கொரு ஆலோசனை ;ஜோக்காளி தளத்தில் >>>>http://www.jokkaali.in/2015/09/blog-post_9.html
    சரித்திரம் மிக முக்கியம் ,வருகிற பதிவர் சந்திப்பில் அய்யா முத்துநிலவன் தலைமையில் பட்டி மன்றம் நடத்தி முடிவெடுத்து விடலாம் ,சிலுக்கு கடித்தது கொய்யாவா ,ஆப்பிளா என்று :)

    பதிலளிநீக்கு
  2. ஆஹா கலக்குறீங்க போங்க..

    பதிலளிநீக்கு
  3. அந்த ஜீவன்களும் பிழைத்துப் போகட்டுமே!..
    (இது பார்சல் - மாதிரி!.. பிரிச்சுப் பார்த்துக்குங்கோ!)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...