வெள்ளி, 11 செப்டம்பர், 2015

நமக்கு சோறு முக்கியம் பாஸ் ! 26 /30

பசித்தவனுக்கு  சோறுதான்   கடவுள் !

புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவில்  நீங்கள்  சாப்பிடும்போது  ஒரு  பருக்கை கூட  தவறி  கீழே விழக்கூடாது.  ஏன்  தெரியுமா ?   அந்த  பருக்கை  வயலில்  நெல்லா  முளைச்சப்ப  உதிர்ந்து போயிருக்கலாம்.  ஆனா  அப்படிப் போகல.... களத்துல  கதிர்  அடிக்கும்போது  காத்துல பறந்து  போயிருக்கலாம். அப்படியும்  போகல..... நெல்லு  அவிக்கும்போது  தீஞ்சு  போயிருக்கலாம். அப்புடியும்  போகல...... அரிசியா  தீட்டும்போது  உடைஞ்சு போயிருக்கலாம்.  அப்புடியும்  போகல......வேற  யாராவது  வீட்டுக்குப்  போயிருக்கலாம். அப்புடியும்  போகாம  நம்ம  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  தப்பி  வந்து  அதுலேயும்  உங்க  இலையில  வந்து  உட்காருதுன்னா... அது  உங்களுக்கு  மட்டுமே  ஆன  சோறு  பாஸ் !

ஒரு  பருக்கையே  இவ்வளவு  பயணம்  செஞ்சு  புதுக்கோட்டை  வலைப்பதிவர்  திருவிழாவுக்கு  வரும்போது  நீங்கள்   மட்டும்  என்ன  ........வாங்க   சாப்பிடலாம்
     
             அப்பு  கறீஸ்...அசைவம்  ரொம்ப  நல்லாயிருக்கும்

9 கருத்துகள்:

  1. பருக்கை நன்றே.. பருக்கை நன்றே!..
    பழைய சோறாயினும் வெறுக்கை அன்றே!..

    ஆமாங்க.. பருக்கை தானே உயிரின் இருக்கை!..

    பதிலளிநீக்கு
  2. அப்படியா.....அந்த பருக்கையை சாப்பிட வேண்டும் என்றுதான் இன்று எனக்கு பசிக்கவில்லையோ...????????

    பதிலளிநீக்கு
  3. ஆமாம்! ஒரு பருக்கை கூட வீணாக்கவும் கூடாது....அதையும் கருத்தில் கொள்ளலாம் விழாவில்...இல்லையா?!! வேண்டும் என்பதை மட்டும் சாப்பிட்டு வீணாவதைத் தவிர்க்கலாமே..எத்தனையோ பேர் பசியில் வாடிக் கொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகள், குழந்தைகள் இருக்க....தவறு இல்லை தானே நாங்கள் சொல்லுவது....

    பதிலளிநீக்கு
  4. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கை உதாரணம்! ஆனா..தாயீ!
    ஒரு விழா உணவுக்கு உங்கள் பதிவே ரணகளம்! கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  5. நச்சுன்னு சொல்லியிருக்கீங்க...
    விழா சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. அருமையாக சொன்னீங்க சோறு நமக்குத்தான்! விழா சிறப்பாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  7. ஆத்தாடி...ஒரு பருக்கைப் பயணம் சூப்பர்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...