வெள்ளி, 25 செப்டம்பர், 2015

வலைப்பதிவர் கையேட்டிற்கு விளம்பரம் தருக!


வரும் 11-10-2015 அன்று புதுக்கோட்டையில நிகழவிருக்கும் நமது “வலைப்பதிவர் திருவிழா-2015இல் வெளியிடவுள்ள “தமிழ்வலைப் பதிவர் கையேடு2015” நூலில் தொடர்ந்து எழுதி-இயங்கிக் கொண்டு இருக்கும் சுமார் 300பதிவர்கள் தமது வலைப்பக்கம் பற்றிய குறிப்புகளை அனுப்பியிருக் கிறார்கள் (மிகப்பலரும் நாம் தந்துள்ள கூகுள் படிவத்திலும், வேறுசிலர் நேரடியாக நமது மின்னஞ்சலுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்) அதோடு... 
மேலும் படிக்க -


அதோடு, 
பிரபல எழுத்தாளர்களின் வலைப்பக்கங்கள், ஏனைய பிரபல பிரமுகர்கள் வைத்திருக்கும் தமிழ் வலைப்பக்கங்களையும் நமது புதுகை நண்பர்கள் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு, நமது வலைச்சித்தர் திண்டுக்கல் பொன்.தனபாலன் அவர்கள் “வலை-நுணுக்கங்கள் எனும் வலைப்பக்கத் தொழில்நுட்பக் குறிப்புகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் நூலில் இடம்பெற உள்ளது. எப்படியும் ஐநூறு தமிழ்வலைப் பதிவர்களின் வலைப்பக்க முகவரிகள் நூலில் இடம்பெறவுள்ளன.

இந்தநூல் நமது விழாவுக்கு வருகை தரும் வலைப்பதிவர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படவுள்ளது. விழாவுக்கு வந்த வலைப்பதிவர்கள் தமக்காகவே கூடுதல் பிரதி கேட்டாலோ அல்லது மற்ற பதிவர்களுக்காகக் கேட்டாலோ, கூடுதல் பிரதி தேவைப் பட்டாலோ அதன் விலையான ரூ.150 தந்துதான் பெறவேண்டும் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறோம்.

நண்பர்களுக்கு இரண்டு வேண்டுகோள்கள் –
(1)   உங்களுக்குத் தெரிந்த பிரபல எழுத்தாளர்கள், கலைஇலக்கிய வாதிகள், கணினித்தமிழில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்வலைப்பதிவர்களின் வலைப்பக்கக் குறிப்புகளை நமது மின்னஞ்சலுக்கு  உடனே அனுப்பி உதவுங்கள். அவர்கள் “யாரைக்கேட்டு என் முகவரியைப் போட்டீர்கள்? என்று கேட்காத பெருந்தன்மையாளராக இருக்கட்டும். இயலுமெனில் தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ அவர்களிடம் அனுமதி பெற்றோ அல்லது பெறத்தக்க வழிகளைக் கூறியோ மின்னஞ்சல் தாருங்கள்.

(2)   சுமார் 150பக்கம் வரக்கூடிய நமது “வலைப்பதிவர் கையேடு-2015“இல் விளம்பரம் தந்து, நண்பர்களிடம் சேகரித்து அனுப்புங்கள். அவை நூல்கள் அல்லது கல்வி நிறுவனங்கள் அல்லது கலை-இலக்கியம்-கல்வி-சமூகப்பணி-நியாயமான வணிக நிறுவனங்களாக இருக்கலாம். (நிச்சயமாக வெளிநாட்டுக் குளிர்பானங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக இருக்க வேண்டாம். கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பணத்தில் நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை) பதிவர்கள் தமது நூல், நிறுவனங்களைப் பற்றித் தந்தாலே போதுமானது.

விளம்பர விவரம் –
வலைப்பதிவர் கையேட்டின் உள்பக்க விளம்பரக் கட்டணம்-

இருவண்ணம் முழுப்பக்கம் – ரூ.3,000
இருவண்ணம் மூன்றில் ஒருபங்கு – ரூ.1,000

ஒருவண்ணம் முழுப்பக்கம் – ரூ.1,500
ஒருவண்ணம் மூன்றில் ஒருபங்கு ரூ.500

விளம்பரத் தொகையை வங்கியில் செலுத்தவேண்டிய விவரம்

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
STATE BANK OF INDIA வங்கியில் செலுத்துவோர் தவிர,  மற்ற வங்கியில் செலுத்துவோர் ஆயிரம் ரூபாய்க்கு ரூ.50 சேர்த்து அனுப்ப வேண்டும்)


வங்கியில் செலுத்திய விவரத்தை (விளம்பர வாசகம் லோகோ, புகைப்படம் முதலான இணைப்புடன்) அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்-
bloggersmeet2015@gmail.com     000     செல்பேசி எண்-94431 93293

இவை அனைத்தும் வரும் 30-09-2015க்குள் என்பது முக்கியம்

--------------------------------------------------------------- 
அசையும் படத்திற்கு நன்றி - கூகுளார் மற்றும் நண்பர் மகா.சுந்தர். 

11 கருத்துகள்:

  1. ஐயா... விளக்கம் மிகவும் அருமை...

    நன்றி...

    வேண்டுகோள்களை நம் நண்பர்கள் நிறைவேற்றுவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வேண்டுகோளை நம் நட்புப் பதிவர்கள் நிறைவேற்றுவார்கள் என்றுதான் நாங்களும் நம்புகிறோம். நீங்களும் எங்கள் வேண்டுகோளை ஏற்று, ஓரிருநாளில் “வலைப்பக்கத் தொழில் நுட்பங்கள்“ பற்றிய குறிப்புகளை அனுப்பி வையுங்கள் அய்யா.

      நீக்கு
  2. விளம்பரத்துக்கு முயற்சித்து கொண்டு இருக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    நல்ல முயற்சி... வலைப்பதிவர் கையேட்டைஎங்களுக்கு இலவசமாக தபாலில் அனுப்பிவைக்கமுடியுமா...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி தவரூபன்! ஒரு பழமொழி கேள்விப்பட்டதில்லையா-
      “செத்தாடு காப்பணம், செமகூலி முக்காப் பணம்“னு? நூல்விலை ரூ.150தான், தங்களைப் போலும் ரூ.5000க்கும் மேல் நன்கொடை கொடுத்தவர்களுக்கு அஞ்சலில் அனுப்பும் யோசனையும் உண்டு. ஆனால் வெளிநாட்டுக்கு அனுப்பவே ஆயிரம் ரூபாயல்லவா கேட்பார்கள்? பார்க்கலாம் பின்னர் அந்த நூலையே ஆறுமாதம் கழித்தாவது மின்னூலாக்க முடியுமா என்று பார்ப்போம்..சரியா?

      நீக்கு
  4. விளம்பரம் முக்கியம் தான் அண்ணா....நானும் முயற்சிக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. விழா நெருங்கும் வேளையில் அவசியமான பதிவு. வலைப்பக்கங்களை குறிப்பிடுவதில் யாருக்கும் பிரச்சனையை இருக்காது என்று நினைக்கிறேன். இருந்தாலும் எச்சரிக்கையுடன் செயலபடுவது நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  6. (நிச்சயமாக வெளிநாட்டுக் குளிர்பானங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக இருக்க வேண்டாம். கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பணத்தில் நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை) ---பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. //நிச்சயமாக வெளிநாட்டுக் குளிர்பானங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக இருக்க வேண்டாம். கோடிகோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் அந்தப் பணத்தில் நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை// - செம்மை!... செம்மை!... என் சிரம் தாழ்ந்த வணக்கம்!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...