வியாழன், 1 அக்டோபர், 2015

போட்டிகள் இரண்டுநாள் நீடிப்பு!

நமது மின்-இலக்கியப் போட்டிகளுக்குப் படைப்புகள் அனுப்புதற்கான இறுதிநாளை இரண்டுநாள் நீட்டித்திருக்கிறோம்.

அதாவது> போட்டிப் படைப்புகளை அனுப்ப இறுதிநாள் 30-09-2015 என அறிவித்திருந்தோம். அதனை, 02-10-2015 இரவு வரை அனுப்பலாம்.
தமிழ்-இணையக் கல்விக்கழக நண்பர்கள் மற்றும் நம் விழாக்குழு சார் நண்பர்களின் கருத்தின்படியும் நடுவர்களின் கருத்தைக் கேட்டும் இந்த நீட்டிப்பு தெரிவிக்கப்படுகிறது.

எனில், நடுவர்கள் தமது மதிப்பீட்டை 06-10-2015ஆம் தேதிக்குள் தரவும் முடிவுகளை 07-10-2015ஆம் தேதிக்குள் நமது தளத்தில் அறிவிக்கவும் விழாக்குழு முடிவுசெய்திருக்கிறது. நடுவர்களின் ஒத்துழைப்பை மிகவும் அன்போடு எதிர்பார்க்கிறோம். முடிவுகளை அறிவிக்கும்போதே நடுவர்கள் விவரமும் அறிவிக்கப்படும். அதுவரை நண்பர்கள் பொறுமை காக்க!

பொதுவான கருத்து –
படைப்புகள், குறிப்பாகக் கட்டுரைகள் இன்னும் அதிக எண்ணிக்கையில் வர வேண்டுமென விழாக்குழு மற்றும் த.இ.க. நண்பர்கள் எதிர்பார்க்கிறார்கள். படைப்பாளர்கள் இந்தக் குறிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

அதோடு, ஏற்கெனவே வலைப்பக்கம் தொடங்காமலே “வேர்டு“கோப்பாக படைப்புகளை அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் இந்த இரண்டு நாளுக்குள் வலைப்பக்கம் தொடங்கி அதில் தமது படைப்புகளை இட்டபின் அந்த இணைப்பை அனுப்ப இந்த நாள்நீட்டிப்பு உதவுமென நம்புகிறோம்.
பக்கஅளவு, உறுதிச்சான்றுமொழிகளை அவரவர் வலைப்பக்கத்தில் படைப்பின் இறுதியிலேயே இட்டு அந்த இணைப்பை மட்டும் நமது மின்னஞ்சலுக்கு அனுப்பினால் போதுமெனும் போட்டி விதிமுறைகளையும் பங்கேற்பாளர்க்குக் கவனப்படுத்துகிறோம்.

எண்ணிக்கை பெரிதல்ல, தரம்தான் முக்கியம். என்றாலும் சிலநேரம் எண்ணிக்கைதானே பெரிய மாற்றங்களுக்குக் காரணமாகிவிடுகிறது?! இது படைப்பின் வரியளவு, பக்க அளவு, படைப்புகளின் வரத்தளவு எல்லாவற்றின் மீதும் தாக்கம் செலுத்துகிறதல்லவா? படைப்பாளிகளே கவனியுங்கள்!

அளவு மாற்றம், குணமாற்றத்தை ஏற்படுத்திவிடும் 
என்பது உலக உண்மை.

தரமான, கூடுதலான படைப்புகளுக்கான
எமது காத்திருப்பு தொடர்கிறது -
மேலும் இரண்டுநாள்களுக்கு!

n  விழாக்குழு.

n  தொடர்பு மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com

11 கருத்துகள்:

  1. முடிவுகள் 07-01-2015 என்று இருப்பது 07-10-2015 என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் சரியா.?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா பக்க அளவு -ஒரு பக்கத்திற்கு எத்தனை வரிகள் இருக்க வேண்டும்?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா, நீங்கள் என்ன வருமான “வரி“கணக்கு அலுவலரா?
      படைப்புகளில் வரி என்பது பொதுவான அளவுதான் அய்யா.
      இப்படி ஸ்கேல் வைத்து அளந்து வீடு வாங்கலாம், வித்தையை வாங்க முடியாது இல்லையா? பொதுவாக அடைத்து நிற்காமல் படிப்பவரைச் சிரமப்படுத்தாமல் இருக்கவேண்டும, உள்ளடக்கமும் உருவமும். அது கவிதையாயினும் கட்டுரையாயினும் எந்தப் படைப்பாயினும்.சரியா?

      நீக்கு
  3. போட்டிகளுக்கு ஆக்கங்கள் அதிகம் வர ஊக்கம் தரும் அறிவிப்பு. விழாக்குழுவினருக்கும், பங்கேற்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நேற்றிரவில் இருந்தே இந்த அறிவிப்பினை எதிர்பார்த்திருந்தேன்..
    மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  5. இறுதிநாள் என்பதால் இரவு அவசர அவசரமாக கட்டுரையை எழுதி இரவு பதினொன்றரைக்கு அனுப்பினேன். அனுப்பியவுடன் தளத்தில் இணைக்கப்பட்டதறிந்து மிகுந்த வியப்படைந்தேன். அந்தளவுக்கு எல்லோரும் தூக்கத்தைத் தொலைத்து வேலை செய்கிறீர்கள்! உங்கள் உழைப்புக்குத் தலை வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  6. மரியாதைக்குரியவர்களே,
    வணக்கம்.வருகிற 2015அக்டோபர் 11 ந் தேதி அன்று புதுக்கோட்டையில் அனைவருக்கும் தமிழ்'99முறை தட்டச்சுவது பற்றிய விளத்துடன் துண்டுப்பிரசுரம் வழங்க உள்ளேன்.புதுமையாக இருக்க வேண்டும்.அனைவருக்கும் புரியும் விதமாக எளிமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு..மற்றவை நேரில்,,
    என அன்புடன்,
    C.பரமேஸ்வரன்,
    http://konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம் 638402

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...