வியாழன், 15 அக்டோபர், 2015

பதிவர் விழா - குறையும், மேலும் சில படங்களும்!

         த.இ.க. உதவி இயக்குநர் முனைவர்  மா.தமிழ்ப்பரிதி  உரை

புதுக்கோட்டையில் நடந்து முடிந்த பதிவர் விழாவில் எந்தக் குறையும் இல்லை” என்றுவந்து சென்ற நம் பதிவர்கள் பதிவுகளைப் போட்டு வாழ்த்துகிறீர்கள். மற்றவர் பதிவுகளிலும் போய் பின்னூட்டங்களிட்டுப் பாராட்டுகிறீர்கள்! அந்த அன்பிற்கு எங்கள் இதய நன்றி!
 

ஆனால் நமது விழாவிலும் ஒரு பெரும் குறை நேர்ந்துவிட்டது....

ஆம் நண்பர்களே! அது...

பற்றாக்குறை!

எங்களுக்கு மனமிருந்த அளவிற்குப் பணமில்லை!

நண்பர்களே! பலரும் தெரிவித்திருப்பது போலஇது
பதிவர் திருவிழா மட்டுமல்லாமல்,
உணவுத்திருவிழா,
பண்பாட்டுத் திருவிழா,
புத்தகத் திருவிழா,
ஓவியத் திருவிழா,
இசைத் திருவிழா,
மரக்கன்று நடும்விழா,
சிந்தனை உரைவிழா  என எமது விழாக்குழுவினரின் அன்பை,விருந்தோம்பலைஉழைப்பைப் பாராட்டி வந்தாலும்,வெளியூரிலிருந்து வந்த பதிவர்களின் எண்ணிக்கைக் குறைவு காரணமாகஅவர்களுக்காக செய்த ஏற்பாடுகளில் விழாக்குழு ஏமாந்துபோனது உண்மைதான்!

வருவதாகப் பதிவு செய்தவர்களில் 
பாதிப்பேர் கூட வரவில்லை! 
-----------------------------
               விக்கி மீடியாவின் இந்தியத் திட்ட இயக்குநர் திரு அ.இரவிசங்கர் உரை
 சரி, “விழாக்குழு நம் வருகையை நம்பி உணவு மற்ற ஏற்பாடுகளைச் செய்திருப்பார்களே, வரமுடியவில்லை என்று ஒரு தகவலாவது சொல்வோம்” என்று சொல்லியிருக்கலாம். அப்படி ஒருவர் கூடச் சொல்லவுமில்லை என்பதுதான் ஏமாற்றத்தின் காரணம்!

“செய்யாத குற்றத்திற்குத் தண்டனை உண்டா?” என்று பையன் ஆசிரியரிடம் கேட்டானாம். அதற்கு அவர், “அது எப்படிப்பா? செய்யாத குற்றத்திற்கு தண்டனை தரமுடியும்?” என்று சொல்ல, “அப்படின்னாச் சரி, நா இன்னிக்கு வீட்டுப்பாடம் செய்யல” என்று போய்விட்டானாம்!

அதுமாதிரி, வராத குற்றத்திறகு யார் என்ன சொல்ல முடியும்?

வந்தவர்கள் எழுதுவதையும் சொல்வதையும் கேட்டு, “அடடா.. போய் வந்திருக்கலாம் போல“ என்று மனம் வருந்துவோரே! இந்த பதிவுலக ராஜ்யம் உங்களுடையது! உங்களை நம்பி ஏற்பாடுகள் செய்த எங்களை ரட்சிப்பீராக!

புரவலர் பட்டியல்படி சுமார் ஒரு லட்சம் ரூபாய் வந்திருப்பது உண்மை! நன்கொடைப் பட்டியலோ ரூ.100 முதல் தொடங்குகிறது! அந்த வகையில் புரவலர் தொகையும் சேர்த்து மொத்த வரவு 1.5ஐத் தாண்டவில்லை! ஆனால், செலவோ அதைத் தாண்டிவிட்டது! (இது தோராயமான கணக்குத்தான், சகோதரி கீதா முழுக்கணக்கும் பார்த்துச் சொன்னபிறகே எல்லாம் தெளிவாகும்)
புகழ்பெற்ற ஞானாலயாநூலக நிறுவுநர்
 
திருமிகு பா.கிருஷ்ணமூர்த்தி,
விழாவில் கௌரவிக்கப்படுகிறார்
---------------------------------------------------------------------------


எனவே, நன்கொடைப் பெயர்ப் பட்டியலுடன் தொகையை வெளியிடுவதோடு, வரவு-செலவு மொத்தத்தையும் வெளியிடும் முன்பாக பற்றாக்குறையாக வெளியிட விழாக்குழு விரும்பவில்லை. இன்னும் ஒருவாரத்தில் மொத்த வரவு-செலவையும் உறுதியாக வெளியிடுவோம். அதில் மாற்றில்லை.

விழாக்குழுவிலும் ரூ.5000தந்தோர் சிலருண்டு! ஒன்றும் தராதோரும் உண்டு! இவர்களை மட்டுமின்றி, பதிவு செய்த அனைவரையும், முன்பு சிறிது தந்தோரையும் இதுவரை தராதோரையும் இப்போது மீண்டும் உரிமையுடன் கேட்கிறோம். நன்கொடைப் பட்டியலில் உங்கள் பெயர் நல்ல தொகையுடன் இடம்பெற நீங்கள்தான் உதவவேண்டும்.
------------------------------------------------
விக்கிபீடியாவில் தொடர்ந்து எழுதிவரும்  தஞ்சைப் பதிவர் முனைவர் பா.ஜம்புலிங்கம் விழாவில் கௌரவிக்கப்படுகிறார்
-------------------------------------------------------------------------------------------------------------- 
என்ன செய்யலாம் என்று யோசித்த போது...
நடந்த விழா பற்றிய கருத்துக் கேட்பதற்காக நேற்று (13-10-2015) மாலை வழக்கம்போல நம் நண்பர்களின் UK -INFOTECH இல் கூடிய விழாக்குழு பின்வரும் ஆலோசனைகளை முன்வைக்கிறது -

இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட
(1)  கையேட்டுக்காகப் பதிவுசெய்த அனைவரும் பணம்அனுப்பி, புத்தகம் வாங்கிக்கொண்டால் சரியாகிவிடும் என்பது முதல் யோசனை . 

ஒரு பிரதி ரூ.150 எனினும் ரூ.250 அனுப்பினால் எங்கள் செலவில் இரண்டுபிரதிகளை அனுப்பி வைக்கிறோம்.ரூ.500எனில் 4பிரதிகள்.

(2)   ரூ.1,000 அனுப்புவோர், விரும்பினால், அவர்களது நண்பர்கள் 4பேருக்கு இரண்டிரண்டாகவோ, 8 பேருக்குத் தனித்தனியாகவோ முகவரி தந்தால் எங்கள் செலவில் நாங்களே அந்த முகவரிகளுக்கு அனுப்பிவைப்போம். கவனிக்க - ரூ.1000 அனுப்புவோர்க்கு மட்டுமெ இப்படிப் பிரித்தனுப்பும் பணியைச் செய்ய முடியும். அதற்குக் குறைவாக அனுப்பினால் ஒரே முகவரிக்குத்தான் அனுப்ப முடியும். எப்படியும் தமிழ்நாடு தாண்டும் முகவரிகளுக்கு அஞ்சல்செலவை ஏற்கவேண்டும்.

(3)   வெளிநாடுகளில் வசிப்போர் விரும்பினால், விமானம் (அ) கப்பலில் அனுப்பும் செலவையும் ஏற்போர்க்கு, கேட்கும் பிரதிகளை அனுப்பலாம். அல்லது அவர்தம் நண்பர்களின் தமிழக முகவரிக்கு அனுப்ப மேற்காணும் தொகையை மட்டும் அனுப்பினால் போதுமானது (வெளிநாட்டுக்கு நூல்களை அனுப்பும் நண்பர்கள் எளிய வழி என்னவென்று தெரிவித்தால் அதன்படி செய்வோம்)
நான்குபக்க வண்ண அட்டைகளுடன்
உயர்ந்த தாளில் அச்சிடப்பட்ட கையேடு
331 தமிழ்-வலைப்பதிவர் விவரம் - 144 பக்கம்
(க்யூ ஆர் கோடுடன்)

----------------------------------------------------------------- 
நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்...
 இப்படியான நூல் விற்பனையில் ஒரு 30,000 ரூபாய் வந்தால் இந்தக் குறையும் –அதாவது பற்றாக்குறையும் – இல்லாமல் போகும்.

குமுதம் வார இதழ் ஒருபிரதி கூட விற்காமல் போனாலும் வாராவாரம் ஓர் இதழுக்கு 5ரூபாய் லாபம் என எங்கோ படித்தேன். அவ்வளவு விளம்பர வருமானமாம்! (அப்படியெனில் விற்கும் 6லட்சம் பிரதிகளுக்கு எவ்வளவு லாபம்? கணக்குப் பார்த்துக்கோங்க..) ஆனால், நமக்கோ கையேட்டுக்கு அவ்வளவாக விளம்பரமும் கிடைக்கவில்லை.

எனவே, நண்பர்கள் தமது நண்பர்களுக்குப் பிரதிகளை அனுப்புவதற்கும் விழாக்குழுவுக்குச் செய்யும் உதவியாகவும் கையேட்டை வாங்கி உதவ வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம்.

வழக்கம் போல வங்கிக் கணக்கு விவரம் –

“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்த விவரம் வருமாறு :-

NAME - MUTHU BASKARAN N 
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320

---------------------------------------------------------------- 
இதில் STATE   BANK   OF   INDIA வங்கி தவிர மற்ற வங்கிகளில் பணம் போட்டால், இந்த வங்கியில் ரூ.50, 100 என்று பிடித்தம் வேறு செய்து எடுத்துவிடும் வங்கி நடைமுறை நண்பர்களுக்குப் புரிய வேண்டும்

பணத்தை வங்கியில் செலுத்திவிட்டால் எனது செல்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துவிடும். ஆனால் யார் பணம் அனுப்பியது எனும் விவரத்தையும், கையேட்டுப் பிரதிகளை அனுப்ப வேண்டிய நண்பர்கள் முகவரிகளையும் மின்னஞ்சலில் உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்.

ஆக.. நம்ம கணக்கு வழக்கும் நட்பும் உறவும் இன்னமும் தொடருது!

ஆமா..எதிலயும் கொஞ்சமாச்சும் பாக்கி வைச்சாத்தான் நட்போ உறவோ தொடரும்னு சொல்றாங்களே... அது இதுதானோ?
------------------------------------
பி.கு. இதுதான் குறையா அய்யா..என்போர் ஆறுதலுக்காக விழாவில் என்னால் நேர்நத இரண்டு தவறுகளைச் சொல்லிவிடுகிறேன் -

(1) நடுவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட கேடயத்தில் அய்யா திரு செல்லப்பா யாகசாமி அவர்களின் கேடயமும், திரு முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் கேடயமும் விட்டுப்போனது. கடைசி நேரத்தில் தடுமாறி, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். அவர்களின் பெருந்தன்மையான பண்பால் நெகிழ்ந்தும் போனோம்.
(பின்னர் தயாரித்து விட்டோம், விரைவில் தந்தனுப்புவோம்)

(2)அவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டுச் செய்த சகோதரி மு.கீதா நன்றியுரையைப் பெரிதாகத் தயாரித்து வைத்திருந்தும் 5மணியைத் தாண்டிவிட்டதால் சுருக்கமாகச் சொல்லும்படி நான் சொன்னதால் அவர்கள் மட்டுமின்றி வேறுசில பதிவர்களும் வருந்தியது உண்மை. (சகோதரி சரியாகவே புரிந்துகொண்டாலும் எனக்கு உறுத்துகிறது) - நா.மு.விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்.
--------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. உண்மைதான் அண்ணா...பதிவு செய்திருந்த 232 மற்றும் பார்வையாளர்கள் 100 என முடிவு செய்து 300 பேருக்கு உணவு செய்தால் 350 பேருக்கு தயாரித்திருந்த உணவு வீணானது,கைப்பை ,கையேடு என பாதி பேருக்கு மேல் வராத காரணத்தால் அதுவும் தேங்கி நிற்கின்றது...எதிர்பார்த்த அளவு கையேடு விற்பனை ஆகவில்லை...நட்டக்கணக்கு எழுதவும் எனக்கு விருப்பமில்லை... மகிழ்வோடுதான் செய்தோம்..என்பதால் இதை சரிசெய்ய முயற்சிப்போம்...கொஞ்சம் விளம்பரம் வந்திருந்தால் கூட நமக்கு கையைப்பிடிக்காது....

    பதிலளிநீக்கு
  2. நன்றி தான் எழுதிவிட்டேனே அண்ணா ...அது சரிதான் அன்று ஆன காலதாமதத்திற்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் கீதா. இதனால்தான் இரட்டையர்களாக நின்று நீங்களும் தங்கை -உண(ர்)வுக்குழுத் தலைவியான -ஜெயலட்சுமியும் விழாக்குழுவுக்குக் கிடைத்த மாபெரும் கொடை. வெற்றியின் இருபெரும் தூண்கள் நீங்கள் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை, வந்தவர்கள் பார்த்தே உணர்ந்து கொண்டார்கள்.

      நீக்கு
  3. குறையொன்றுமில்லை என்ற குறையைத் தீர்ப்பதற்காக பற்றாக்குறை வந்துவிட்டது போலுள்ளது. ஒவ்வொரு வலைப்பதிவரும் குறைந்தது இவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்று நிர்ணயித்திருந்தால் இக்குறை வராமலிருந்திருக்குமோ என்பது என் எண்ணம். அதிகமாக பணம் வசூல் ஆகும் என்று எண்ணியிருந்தேன். என் தவறான கணிப்பை இப்போது உணர்கிறேன். பொறுத்துக்கொள்க. நன்கொடையாளர் பட்டியலில் இன்று நான் சேர்ந்துவிட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஒவ்வொரு வலைப்பதிவரும் குறைந்தது இவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்று நிர்ணயித்திருந்தால்' என்பதை முதலிலேயே வேண்டாம் என்று விழாக்குழு முடிவெடுத்து, வந்துகலந்து கொள்வோர்க்குப் பெருமை சேர்க்கவே -பரிசாகத் தருவதென்று- முடிவெடுத்தோம்.

      நீக்கு
  4. பணப்பற்றாக்குறை வருமென நானும் ஊகித்து இருந்தேன்! பதிவு செய்தவர்களில் பாதிப்பேர் எப்போதுமே வருவது இல்லை! நான் இரண்டு மூன்று பின்னூட்டங்களில் தகவல் தெரிவித்தேன் வரமுடியவில்லை என்று. சனிக்கிழமை காலை வரை கூட மாற்று ஏற்பாடு கிடைத்தால் புறப்படுவதாக ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் கை கூடவில்லை! என்னிடம் இந்தியன் வங்கி கணக்கு இருக்கிறது. 50 ரூ பிடித்துக் கொள்வார்கள் எனில் சேர்த்து அனுப்புகிறேன். அல்லது தங்களின் முகவரி அளித்தால் மணியார்டர் செய்துவிடுகிறேன் தபால் செலவும் சேர்த்து அனுப்புகிறேன். ஆயிரம் ரூபாய் வரை அனுப்ப தற்சமயம் இயலும். எனக்கு வலைபதிவர் கையேடு இரண்டு பிரதி மட்டும் அனுப்பி வைத்தால் போதுமானது. ஞானாலயாவிற்கு உதவும் எண்ணமும் இருக்கிறது. புதுக்கோட்டை வரும்போது பேசுகிறேன்! தகவல் தர இயலாமல் போனதற்கு வருந்துகிறேன்! வேறு வகையில் உதவ முடியுமா என்று நண்பர்களிடம் விசாரிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் உணர்வுக்கு நன்றி அய்யா. பணவிடையெல்லாம் வேண்டாமய்யா. வங்கிக்கணக்கிலேயே போட்டுவிடுங்கள். முகவரியுடன் மின்னஞ்சல் ஒன்றும் தாருங்கள். மிக்க நன்றி

      நீக்கு
    2. இன்று உங்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தி உள்ளேன்! மின்னஞ்சலும் அனுப்பி விட்டேன் ஐயா!

      நீக்கு
    3. தொகை வந்துவிட்டது அய்யா. முகவரியும் வந்தது. இன்று அனுப்ப வாய்க்கவில்லை. நாளை கட்டாயமாகத் தாங்கள் தந்த முகவரிக்கு வலைப்பதிவர் கையேட்டை அனுப்புவோம் த ங்கள் பதிவிலும் எழுதியதற்கு நனிநன்றி அய்யா

      நீக்கு
    4. புத்தகப் பிரதிகளை அனுப்பிவிட்டோம்
      கிடைத்த விவரம் தெரிவிக்க வேண்டுகிறோம் அய்யா. நன்றி

      நீக்கு
  5. விழா மிக சிறப்பாக நடை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. நிதிப் பற்றாக்குறை கவலை அளிக்கிறது
    நடுவர்களுக்கு கேடயம் வழங்குதல் போன்ற செலவுகளை குறைத்திருக்கலாம். போட்டிகளில் வென்றோர் தானாக முன்வந்து பரிசுத் தொகையில் சிறுபகுதியை அளித்தால் நல்லது. பற்றாக்குறையை பகிர்ந்து கொள்ள அழைப்பு விடுங்கள். ஏற்கனவே நன்கொடை அளித்திருந்தாலும் விரும்புவோர் சுமையை பகிர்ந்து கொள்வோம். நான் தயார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவலையைப் பகிர்ந்துகொண்ட தங்களன்பிற்கு நன்றி முரளி. பரிசுக்கேடயத்திற்கு, தஇக பணம் தரவில்லை. தமிழ்க்களஞ்சியம் இணையம்தான் தந்தது. போட்டிக்கான பரிசுத்தொகையோடு, நடுவர்களுக்கான கேடயத்திற்கும் தஇக தருவதாக முன்னர் சொல்லியிருந்ததைப் பின்னர் கைவிட்டு, விழாவுக்கு அடுத்தநாள்தான் பரிசுத் தொகையே கிடைத்தது! (முதல்நாளிரவு செய்தியறிந்து, விழாக்குழு நண்பர்கள் ரூ.50,000 பகிர்ந்து போட்டு, விழாவில் பரிசுத் தொகையை வழங்கிவிட விழாக்குழுவே ஏற்பாடு செய்தது!) எனவே நடுவர்களுக்குக் கேடயத்தை வழங்கிய தொகையை விழாக்குழுவே ஏற்றது. பொறுப்பேற்றுச் சிறக்கச் செய்த நடுவர்களுக்கு அதுகூடச் செய்யாவிட்டால் அது முறையல்ல அல்லவா? இதை ஏனோ தஇக புரிந்துகொள்ளவில்லை. நாங்களும் விட்டுவிட்டோம். எனினும் தஇக போட்டித் தொகையைத் ஏற்று நடத்தியது விழாவிற்கு ஒரு பெரும் ஈர்ப்பைத் தந்தது உண்மை. நன்றி

      நீக்கு
  6. நீங்கள் அன்று செய்திருந்த ஏற்பாடுகளைக் கவனித்த போதே கண்டிப்பாக பணம் நிறைய செலவாகியிருக்கும் எனத் தெரிந்தது. ஒரு மாத காலமாக சரியான உறக்கமின்றி ஒடி ஓடி உழைத்ததோடு பணத்தையும் வாரி இறைத்திருக்கிறீர்கள் என்றால் கேட்கவே மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. நண்பர்கள் அனைவரும் கையேட்டை வாங்கி பற்றாக்குறையைச் சரிக்கட்ட உதவவேண்டும். என்னால் முடிந்த அளவு நாளை வங்கியில் பணம் செலுத்துவேன். இன்முகத்துடன் உபசரித்த விழாக்குழுவினர் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களே தொகையைத் தரவேண்டுவதில்லை சகோதரி. கையேட்டில் பதிவுபெற்ற -விழாவுக்கு வராத- பதிவர்களுக்குத் தகவல் தந்து வாங்கிக் கொள்ளச் சொன்னாலே பேருதவியாகும்.

      நீக்கு
    2. இன்று தாங்கள் செலுத்திய தொகையும் வந்தது. தாங்கள் குறிப்பிட்டிருந்த படி நாளையே கையேட்டு நூல் பிரதிகளை அனுப்பி வைப்போம். தொடக்கத்திலிருந்தே, தாங்கள் இந்த விழாவின் நோக்கையும், எங்கள் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் சரியாகப் புரிந்து அதற்கேற்றவாறு செயல்பட்டு, நீங்களே சிலரது நன்கொடையைத் திரட்டி அனுப்பியது மட்டுமின்றி விழாவிலும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்து, இப்போது நூல்விற்பனைக்கும் உதவுவது தங்களின் நல்ல புரிதலையும், சிறந்த ஒத்துழைப்பையும் காட்டுவதாகஉள்ளது சகோதரி. தங்களைப் போல், நமது பதிவர் நண்பர்களிடத்தில் நல்ல புரிதல் வளர்ந்துவிடடால் நாங்கள் மட்டுமல்ல, யார்வேண்டுமானாலும் நம்பதிவர் விழாக்களை எங்கும் எப்போதும் நடத்தலாம். நன்றிம்மா.

      நீக்கு
    3. நூல் பிரதிகள் அனுப்பினோமே? கிடைத்த விவரம் தெரிவிக்க வேண்டுகிறோம் சகோதரி. நன்றி.

      நீக்கு
  7. கையேட்டில் பெயர் விபரம் வர வேண்டும் என்றால் 100 , 150 என நிர்ணயம் செய்திருந்தால் கையேட்டிற்கான செலவை ஓரளவு சமாளித்திருக்கலாம் என கில்லர்ஜி அண்ணனிடம் பேசும் போது சொன்னேன். இப்போது சொல்வதை முன்னரே சொல்லியிருக்கலாம்... பற்றாக்குறை வரும் என்பதை யாரும் நினைக்கவில்லை... அதனால் சொல்லவில்லை என்பதே உண்மை என்பதை அறிந்தேன்... கையேட்டினை விழாவிற்கு வராத நண்பர்கள் பணம் கொடுத்து உதவினால் புதுகை உறவுகளுக்கு கொஞ்சமேனும் கை கொடுத்தது போல் இருக்கும்...
    நமக்கு நாமே உதவலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுபற்றியும் விழாக்குழுவில் பேசினோம் நண்பரே. ஆனால், வந்து சிறப்பிக்கும் நம் உறவினர்களிடம் “மொய்“வாங்குவது போல அமைந்துவிடலாகாது என்பதில் உறுதியாக இருந்தோம் வராதவர்களால் வந்த நெருக்கடி இது. கையேட்டுப் பிரதிகள் தேங்கியதை விற்பனை செய்ய உதவினாலே போதும். மற்றபடி இதுவொன்றும் தீர்கக முடியாத நெருக்கடியல்ல! எனவேதான் எமது விழாக்குழு நண்பர்கள் இதைப் பெரிது படுத்தவில்லை .

      நீக்கு
    2. நெருக்கடி தீர்ந்துவிட்டது நண்பரே. தங்கள்ன்பிற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் வரவு-செலவுக்கணக்கைத் தெரிவிப்போம்

      நீக்கு
  8. புதுகைப் பதிவர்களின் சிறப்பான திட்டமிடல் போற்றுதற்குரியது.. ஆனால் பிற பதிவர்கள் அதற்கான ஒத்துழைப்பை நல்காமை ஒரு பெரும் குறைதான். வர இயலாதவர்கள் தகவல் தெரிவித்திருந்திருக்கவேண்டும்... இதனால் செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். பதிவர்கள் அனைவரும் இதை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த முறைகளிலாவது செயல்படவேண்டும்.. அனைவரின் ஊண் உறக்கமற்ற உழைப்பு நெகிழவைக்கிறது. பாடுபட்ட நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  9. கணவருக்கு ஆஞ்சியோகிராம் திடீரென்று எடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் எப்படி தொலை பேசியில் தெரிவிக்கத் தோன்றும். விழாக்குழுவினர் புரிந்து கொள்வார்கள் என முன்பு ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்.அதைக் காணவில்லை.. எனினும் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் ஒன்றுமில்லை சகோதரி. தங்களைப் போன்ற நன்மனத்தார் அன்பினால் விழா நன்றாகவே நடந்தது.

      நீக்கு
  10. அய்யா, வணக்கம், தங்களின் வருத்தத்தில் நானும் பங்கேற்கிறேன். காரணம் விழாவிற்கு வருவதாகப் பதிவு செய்திருந்த நானும் சில தவிர்க்க முடியாத சூழலால் வர இயலவில்லை. தர்போது தங்களின் வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 250 அனுப்பியுள்ளேன். (IMPS REF NO : 530019582239)
    தாங்கள் அதைப்- பெற்று எனது கீழ்க் கண்ட முகவரிக்கு நூல்களை அனுப்பி உதவிட வேண்டுகிறேன்.
    முகவரி :
    கவி. செங்குட்டுவன்,
    119, கச்சேரி சாலை
    ஊத்தங்கரை - 635207
    அலைபேசி : 9842712109

    பதிலளிநீக்கு
  11. பகிர்ந்து கொண்ட விபரங்களுக்கு நன்றி. நான்கு கையேடுகளுக்கு தொகை முன்பே அனுப்பி விட்டேன். நன்றி

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...