திங்கள், 5 அக்டோபர், 2015

தினமணி ஆசிரியருக்கு நம் அழைப்பிதழை நேரில் தந்தோம்!

“ஞானாலயா” நூலகத்திற்கு வந்த தினமணி ஆசிரியர் திரு கே.வைத்திய நாதன் அவர்களை  நேரில் சந்தித்து, அழைப்பிதழைத் தரும் நா.முத்துநிலவன், கவிஞர் தங்கம்மூர்த்தி, மீரா.செல்வகுமார், மகா.சுந்தர், மு.கீதா முதலான நம் விழாக் குழுவினருடன், தஞ்சை முனைவர் பா.ஜம்புலிங்கம், கரந்தை ஜெயக்குமார்


இன்றுதான் அழைப்பிதழ் கொடுக்க தொடங்கினோம்! நேற்று ஒருபெரும் குழுவே உட்கார்ந்து, பெயர் முகவரிகளை ஒட்டி, வகைபிரித்து வைத்திருந்த்தை எடுத்துக் கொண்டு இன்று கிளம்பினோம்..

இன்று காலை 10மணிக்கு விழாக்குழு நண்பரும் கவிஞருமான மீரா.செல்வக்குமார் அலுவலகத்தில் சந்தித்துக் கிளம்புவது என்று பேச்சு!

கவிஞரும் நம் விழாப் பொருளருமான தங்கை மு.கீதா முன்பே வந்திருக்க, தஞ்சையிலிருந்து நம் பதிவர்-சகோதரர்கள் கரந்தை ஜெயக்குமார், முனைவர் பா.ஜம்புலிங்கம் இருவருடன் எழுத்தாளர் சோலச்சியும் அன்புடன் வந்து இணைந்துகொண்டனர்! 
பயணம் தொடங்கியது...

விழாக்குழு இனிய நண்பரும், புதுகை நகரத்தின் முக்கியப்பிரமுகரும், அற்புதக் கவிஞருமான தங்கம்மூர்த்தி அவர்களை சந்திக்கப் போய்க்கொண்டு இருக்கும்போதே அவரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று சிணுங்கி வந்தது ...
“தினமணி ஆசிரியர் ஞானாலயாவுக்கு வருகிறார், வாருங்களேன்

எனது கட்டுரைகள் தினமணியில் வந்த போதெல்லாம் தொலைபேசியில் பேசியிருந்த ஆசிரியரை, முதன்முதலாகச சந்திக்கும் ஆவல் பிறந்தது!

கவிஞர் தங்கம் மூர்த்தியுடன் விழாக்குழுவினரும் கிளம்பி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்க்கு அழைப்பைத் தந்து திரும்பினால்.. புதுக்கோட்டை நல்லோர் பலரும் அங்கிருக்க, அழைப்பிதழைத் தந்தோம்.

தினமணி ஆசிரியர் மகிழ்வுந்தில் வந்து இறங்கினார்!  

அவரிடம் அழைப்பைத் தந்தவுடன் நிமிர்ந்து பார்த்து- 
“நான் இப்படி ஒரு விழா நடத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன்..நீங்கள் முந்திக்கொண்டீர்களா?என்று சொல்லியவாறு மகிழ்ச்சியோடு அழைப்பிதழை வாங்கிப் பார்த்தார். 

நேற்று முதல் “விமரிசனப்போட்டி“ தினமணியின் இணையப் பக்கத்தில் வருவதை நினைவு கூர்ந்தார். செய்தியாளர் திரு மோகன்ராம் அவர்களுக்கு நன்றி!

இப்படி முதல்நாளே சான்றோர் பலரைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க முடிந்த மகிழ்ச்சியில், தேநீர் அருந்தித் தஞ்சை நண்பர்களை வழியனுப்பிவிட்டு விழாவுக்கு வரும் பதிவர்க்கு வழங்கவுள்ள கைப்பை செலவை ஏற்கும் நிறுவனங்கள் பற்றிப்பேசினோம்..

பிற்பகல், நமது விழா நிகழ்வுகளை நேரலை ஒளிபரப்பிற்கான ஏற்பாடு களிலும், வலைப்பதிவர் கையேட்டைத் தயாரிக்கும் பணிகளிலும் மூழ்கியிருக்கும் “யூ.கே.இன்ஃபோடெக்“ நிறுவனரும், நம் ஸ்ரீமலையின் “விதை-கலாம்“ அமைப்பின் தொடர் சேவையாளருமான இளைஞர் யூ.கே.கார்த்தியின் அலுவலகத்தில் இன்றைய மாலைச் சந்திப்பு!

ஸ்ரீமலை, கார்த்தி, பொன்.க.அய்யா, மு.கீதா, மது-கஸ்தூரி, திருப்பதி, குருநாசுந்தரம், மகா.சுந்தர் என விழாக்குழு நண்பர்கள் பலரும் வந்து சேர்ந்துகொள்ள “கைப்பை“ சற்றே மாறி தோள்பை ஆனது... 
விவரம் விழாவில்!...


சரி.. “போட்டிக்குப் போட்டி“ வரவு பற்றி நமது வலைத் தளத்தின் பக்கம் பார்த்தீர்களா? அதற்குள் 7பேர் எழுதிவிட்டார்கள்..!  அப்ப நீங்க...?

10 கருத்துகள்:

  1. விழா ஏற்பாடுகள் மும்முரமாகச் சென்று கொண்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. விழா நடக்கும்போது விழாக் குழுவினர் அனைவரும் மன அமைதி காத்திடவேண்டும். அதிக "டென்ஷன்" தேவையே இல்லை.

    பதிலளிநீக்கு
  2. தங்களையெல்லாம் புதுகையில் சந்தித்ததில் மகிழ்ச்சியே ஐயா

    பதிலளிநீக்கு
  3. தங்கள் தலைமையிலான விழாக்குழுவினரின் அபாரமான உழைப்பையும், ஈடுபாட்டையும் நானும் கரந்தை ஜெயக்குமாரும் கண்டு வியப்புற்றோம். உங்களது பயணத்தில் சிறிது தூரம் கலந்துகொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நம் அனைவரின் ஈடுபாட்டுடன் விழாவைச் சிறப்புற நடத்துவோம். சந்திப்போம், வரும் ஞாயிறு.

    பதிலளிநீக்கு
  4. அர்ப்பணிப்பு உணர்வுடன் - விழாக்குழுவினரின் அயராத உழைப்பைக் கண்டு -
    அதில் நமது பங்கு இல்லையே.. - என மனம் ஏங்குகின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  5. அபார உழைப்பு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. அடடா. புதுக்கோட்டையில நானில்லாமல் போய்விட்டேனே!...

    பதிலளிநீக்கு
  7. செம!!! கலக்கலான தொடக்கம் அண்ணா!

    அப்புறம் நான் பார்த்தப்போ நபர்கள் எண்ணிக்கை பதினொன்று!!:)

    பதிலளிநீக்கு
  8. உழைப்பின் வெற்றி மலர்ந்து கொண்டே இருக்கின்றது..மகிழ்வாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  9. உங்கள் உழைப்பு மிகச் சிறப்பானது ஐயா...
    விழா சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  10. அழைப்பிதழ்கள் அமர்க்களம் - அடுத்தொரு
    பதிவர் சந்திப்பு என்றால்
    புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பு
    நல்வழிகாட்டியாக இருக்கப்போகிறதே!
    தொடருங்கள்

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...